For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி!

|

பெண்கள் மாதவிடாய் ஏற்படுவது மிகவும் சாதரணமான ஒரு விஷயம். பருவ வயதை அடைந்தவுடன் மாதந்தோறும் ஏற்படுகிற மாதவிடாயினால் இங்கே பெண்கள் சந்திக்கும் சங்கடங்கள், பிரச்சனைகள் ஏராளம்.

அதே நேரத்தில் உடல் சார்ந்த உபாதைகள் பலவும் சந்திக்க நேரிடும். உகாண்டாவில் இருக்கும் சிறுமிகள் தங்களது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய சேனிட்டரி பேட் வாங்க பண வசதி இல்லாததால் சிறுமிகளை குழந்தைத் திருமணம் செய்து வைப்பது நடக்கிறது.

அதை விட பெருங்கொடுமையாக சேனிட்டரி பேட் வாங்க காசு வேண்டுமென்றால் என்னுடன் ஒர் இரவைக் கழிக்க வேண்டும் என்று சிறுமிகள் நிர்பந்திக்கப்படும் கொடுமையும் நடக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளிச் சிறுமி :

பள்ளிச் சிறுமி :

அவள் பன்னிரெண்டு வயதே நிரம்பிய சிறுமி, திடீரென்று ஒரு நாள் மாதவிடாய் ஏற்பட பயந்து போய் அம்மாவிடம் சொல்கிறார். அம்மா பெருங்கவலையுடனும் ஒருவித கோபத்துடனும் உள்ளே சென்று நீளமான துணியைக் கொடுக்கிறார்.

எதற்காக அந்த துணி? அம்மா ஏன் கோவமாக இருக்கிறார்? இதை வைத்து இப்போது நான் என்ன செய்ய வேண்டும் எதுவும் தெரியவில்லை. ஒரு பக்கம் வயிற்று வலி வேறு பாடாய் படுத்துகிறது. அம்மாவிடமும் கோபப்பட முடியாமால் தவித்த அந்த சிறுமியை இழுத்துக் கொண்டு போனாள் அக்காள்.

Image Courtesy

ஏன் கோபம்? :

ஏன் கோபம்? :

ஏற்கனவே தனக்கும், மூத்த மகளுக்கும் பேட் வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருஞ்சுமையாக இவளும் சேர்ந்துவிட்டாளா என்ற கோபம் தான்.

ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாத போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படுகிற சேனிட்டரி பேட் வாங்க மாதம் இவ்வளவு தொகையென செலவழிகக் முடியுமா என்ன?

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

அந்த சிறுமியின் அம்மா சிறிதும் தாமதிக்கவில்லை. உடனடியாக அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். ஆம், பன்னிரெண்டு வயது கொண்ட அந்த சிறுமிக்கு திருமணம்!. சரி, அப்படி நடத்தப்பட்ட அந்த திருமணத்திற்கு மணமகன் தேடுவது எல்லாம் பெரிய வேலையாய் அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரே நோக்கம், அடுத்த மாதவிடாய் வருவதற்குள்ளாக அந்த சிறுமியை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்பது தான்.

அப்படி அனுப்பிவிடவில்லை என்றால் மாதவிடாயின் போது பயன்படுத்துகிற பேடுக்கு செலவழிக்க வேண்டி வருமே! இப்படி திருமணம் நடப்பது அவ்வளவு அசாதரணமான விஷயமல்ல உகாண்டாவில் சர்வ சாதரணமாக இப்படி சிறுமிகளுக்கு திருமணம் நடக்குமாம். அதோடு சிலர் குழந்தை பருவ வயதை எட்டுவதற்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் நடப்பதும் சகஜம்.

Image Courtesy

கல்வி :

கல்வி :

பேட் வாங்க பணமில்லாமல் திருமணம் செய்து கொடுக்கும் சூழலில் பருவ வயது அடைந்த பிறகு கல்வி தொடர்வது குறித்து நினைத்து பார்க்கத்தான் முடியுமா?

இப்படி ஒரு பக்கம் கொடுமை நடக்கிறது என்றால் அதைவிட மிக மோசமான கொடுமை இன்னொரு பக்கம் அரங்கேறுகிறது. சேனிட்டரி பேட் வேண்டும் என்றால் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள் சிறுமிகள். அதற்கு மாற்றாக கையில் சிறிதளவு பணமோ அல்லது பேடோ கொடுக்கப்படுகிறது.

Image Courtesy

தேர்தல் வாக்குறுதி :

தேர்தல் வாக்குறுதி :

உகாண்டாவின் பிரதமாராக நிற்பவர்களின் முக்கிய அதுமட்டுமில்லாமல் முதல் கோரிக்கையாக இந்த சேனிட்டரி பேட் இடம்பெற்றிருக்கும். விதவிதமாக வீடு வீடாக வந்து சேனிட்டரி பேட் வழங்குவோம், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு சேனிட்டரி பேட் இலவசம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

ஆனால் அவை எதுவும் நிறைவேற்றவில்லை.

Image Courtesy

காரணம் :

காரணம் :

இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பவே.... அரசாங்கத்திடம் அவ்வளவு நிதி போதுமானதாக இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்ததினால் மக்களிடம் பணம் வசூலித்து அதன் மூலமாக இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற யோசனையுடன் #Pads4GirlsUg என்ற டேக்லைனுடன் க்ரவுட் ஃபண்டிங் நடந்தது.

இன்னொரு பக்கம் இதற்காக சில தொண்டு நிறுவனங்களின் உதவியையும் நாடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

மாதவிடாய் ஒரு காரணம் என்றால் பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினாலேயே பலரும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Image Courtesy

கற்பிதங்கள் :

கற்பிதங்கள் :

மாதவிடாய் குறித்த தவறான கற்பிதங்கள் மிக மோசமாக உகாண்டாவில் நிகழ்கிறது. மாதவிடாய் காலத்தில் பள்ளிக்குச் சென்றால் அங்கே உரிய கழிப்பிட வசதி இருப்பதில்லை என்ற குறையைத் தாண்டி அங்கே உடன் படிக்கும் சிறுவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். அதனாலேயே பள்ளிப்பக்கம் செல்வதேயே தவிர்த்துவிடுகிறார்கள்.

இதனை மாற்ற ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முதலில் ஏற்படுத்த வேண்டும். பின்னர் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மேம்படுத்த வேண்டும். உகாண்டாவில் மட்டும் தான் இப்படியான கொடுமைகள் நடக்கிறது என்று ஒரேயடியாக சொல்லமுடியாது. வளர்ந்த நாடு, வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்று சொல்லும் நாடுகளிலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Uganda Girl Children Forced To Marriage

Uganda Girl Children Forced To Marriage
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more