கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Village Style Thattapayaru Suraikkai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் தட்டைப்பயறு உள்ளதா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு தட்டைப்பயறு பிடிக்குமா? இதனால் அடிக்கடி இதை சமைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி சிம்பிளாகத் தான் தட்டைப்பயறை குழம்பு செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை தட்டைப்பயறு செய்வதாக இருந்தால், அந்த தட்டைப்பயறுடன் சுரைக்காயை சேர்த்து, கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Village Style Thattapayaru Kuzhambu How To Make Thattaipayaru Suraikkai Kuzhambu

இந்த கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* தட்டப்பயறு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 10
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

குழம்பு தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* சுரைக்காய் - 100 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* வேக வைத்த தட்டைப்பயறு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது)

செய்முறை:

* முதலில் தட்டைப்பயறை 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஊற வைக்காவிட்டால், அதை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு குக்கரில் தட்டைப்பயறை சேர்த்து, பயறு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட்டு, பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, சுரைக்காயை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த தட்டைப்பயறை நீருடன் அப்படியே சேர்த்து, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து, மூடி வைத்து, 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து ஸ்டைல் தட்டைப்பயறு சுரைக்காய் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 16, 2026, 16:05 [IST]
Desktop Bottom Promotion