அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கிறுக்குத்தனமாக விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு நாடு வல்லரசாக, வலிமையாக இருக்க அந்நாட்டின் அரசியல்வாதிகளை காட்டிலும் செயல் அதிகாரிகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். சொல் புத்தி அல்லது சுய புத்தி இருக்க வேண்டும். இங்கே எதற்கு எடுத்தாலும் கத்தி எடுப்பார்கள், பாராளுமன்றம் என்றால் கத்தி பேசுவார்கள் அம்புட்டு தான்.

டாஸ்மாக் தடை செய்ய கூறினால், அதற்காக போராடுவதை தடை செய்வார்கள். மெரினாவில் போராட தடை., ஆனால் மெரினாவில் கலக்கும் சாக்கடை நீரை தடை செய்ய எந்த ஒரு செயலும் மேற்கொள்ளப்படவில்லை.

போறப்போக்குல சூ சொல்லிட்டு போறது மாறி எதுக்கு இதுக்கெல்லாம் தடைப் போட்டாங்கன்னு அவங்களுக்கும்ம் தெரியல, நமக்கும் புரியல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா!

அரசாங்கம் தடை செய்தவற்றில் வினோதத்தின் உச்சமாக இருப்பது ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலிய அதிகாரிகள் பார்ன் படங்களில் சிறிய மார்பகங்கள் இருக்கும் பெண்களை நடிக்க தடை விதித்தது.

என்ன மாதிரி டிசைன் இது..? பார்ன் தடை பண்றதுல ஒரு பாயிண்டு இருக்கு... இது ஒய்?

பிரான்ஸ்!

பிரான்ஸ்!

பிரான்ஸ் அரசாங்கம் கெட்சப் பயன்படுத்த தடை விதித்திருந்தது. இது பிரஞ்சு உணவுகளை இடையூறு செய்வதாக காரணமும் கூறியிருந்தனர். ஏனெனில், பிரெஞ்சு மக்கள் எல்லா உணவுகளிலும் ருசிக்காக கெட்சப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டதாம்.

ஏம்ப்பு... பிரஞ்சு ப்ரைஸ் கெட்சப் இல்லாம எப்படிப்பு சாப்பிட முடியும்....??? தெரியலையே.....

வடகொரியா!

வடகொரியா!

நீலநிற ஜீன்ஸ் உடுத்த தடை விதித்துள்ளது வடகொரியா. இது அமெரிக்கர்களை பிரதிபலிப்பது போல இருக்கிறது என காரணம் காட்டி தடை செய்துள்ளனர்.

ஜின்கீசா பாயாசா.... வேகூசா... தாயாசா.... என்ன புரியலயா.... இந்த தடை எதுக்குன்னு கூட தான் புரியல...

சீனா!

சீனா!

கேம் கன்சோல்களை சீனா 2000-த்தில் தடை செய்தது. இதனால் குழந்தைகள் நேரம் வீணடிப்பது தவிர்க்கப்படும் என அரசாங்கம் கருதியது.

ஆமா, ஆமா... சீனாக்காரங்களுக்கு உணவுக் கலப்படம் பண்ணி உயிரோட விளையாடுறது தான பிடிக்கும். இது எப்படி பிடிக்கும்.

சிங்கப்பூர்!

சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் சூயிங்கம் 1992 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றும் கூட சூயிங்கம் விற்கவும் இறக்குமதி செய்வதற்கும் தடை இருக்கிறதாம். ஒருமுறை நபர் ஒருவர் பொது போக்குவரத்து தடைப்பட தற்காலிகமாக செயலிழக்க சூயிங்கம் பயன்படியதன் விளைவு தான் இதற்கு காரணமாம்.

சிங்கப்பூர், சிங்கப்பூர் தான்பா....

ஈரான்!

ஈரான்!

ஈரானில் ஆண்கள் நீண்ட கூந்தல் வளர்த்து சில சிகை அலங்காரம் (போனிடெயில், ஸ்பைக்ஸ் உட்பட) செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது., 2010ல் இந்த தடையை நீக்கியது அரசு.

புருண்டி!

புருண்டி!

புருண்டி என்பது தென்கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் சிறிய குடியரசு. இங்கே கடந்த மார்ச் 2014 ல் ஜாக்கிங் செய்யும் நபர்கள் போர்வை பயன்படுத்த வித்தியாச தடையை திணித்தது.

ரஷ்யா!

ரஷ்யா!

ஈமோ ஃபேஷன் (EMO fashion) உடைகள் உடுத்த ரஷ்யா தன்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் பருவவயது மக்களிடம் இருந்த அதிகப்படியான தற்கொலை முயற்சியை குறைக்க முடியும் என அரசு கருதியது.

Image Credit: Pinterest

கிரீஸ்!

கிரீஸ்!

இண்டர்நெட் கஃபேவில் வீடியோ கேம் விளையாடினால் அரஸ்ட் செய்யலாம் என கடுமையான சட்டம் விதித்து கிரீஸ் நாட்டில் வீடியோ கேம் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிறகு EU அழுத்தம் கொடுக்கவே அந்த சட்டத்தை மாற்றினர்.

அங்கயும் சயின்டிஸ்ட் அரசியல்வாதிகள் இருக்காங்க போல...

டென்மார்க்!

டென்மார்க்!

டென்மார்க் நாட்டில் ஒருசில பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கக் கூடாது என சட்டங்கள் இருந்தன. அரசாங்கமே 24000 பெயர்களை பரிந்துரை செய்துள்ளது அதை மட்டுமே வைக்க வேண்டும். புதிய பெயர் வைக்க வேண்டும் என்றால் முதலில் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

வார்ரே வா.... வேற லெவல் டா சாமி!

மலேசியா!

மலேசியா!

டீ-ஷர்ட் முதல் மணிக்கட்டில் கட்டும் பேண்டு, தொப்பி என 2011ல் மலேசியா அரசாங்கம் மஞ்சள் நிறத்தில் மக்கள் எந்த விதமான உடைகளையும் அணியக் கூடாது என கூறியது. இந்த நிறம் அரசிற்கு எதிராக செயற்படும் ஆக்டிவிஸ்ட்களை வரை குறிப்பதால் இந்த தடை உத்தரவு கொண்டுவரப்பட்டது.

எல்லா ஊர்லயும் இந்த கலர் பிரச்சனை இருக்கு போல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Bans By Government!

Bizarre Bans By Government,