Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இதெல்லாம் செய்யாதீங்க.. இல்ல சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Shani Jayanti 2026: இந்து மதத்தில், வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளானது சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது மற்றும் சனி ஜெயந்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் தான் சூரியன் மற்றும் சாயா தேவிக்கு மகனாக சனி பகவான் பிறந்தார். சிவபெருமானின் தீவிர பக்தரான சனி பகவான், ஒருவரது நற்செயல்கள் மற்றும் தீயசெயல்களுக்கு ஏற்ப வெகுமதி அளிப்பதால், கர்ம பலன்களை வழங்குபவராகவும் நீதியின் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில், சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நம்பிக்கைகளின்படி, சனி தனது நேரடிப் பார்வையை எங்கு செலுத்துகிறதோ, அங்கு அது ஒருவரின் வாழ்க்கையில் மாற்றங்களையும் சவால்களையும் கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட சனி பகவானை சாந்தப்படுத்தவும், அவரது ஆசிகளைப் பெறவும் உகந்த தினம் என்றால், அது சனி ஜெயந்தி தான். இந்நாளில் சனி பகவானின் பரிபூர்ண ஆசியைப் பெறவும், அவரை மகிழ்விக்கவும் நினைத்தால், ஒருசிலவிஷயங்களை செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும். இப்போது சனி ஜெயந்தி நாளில் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. வழிபாட்டில் செம்பு பாத்திரங்கள் கூடாது
சனி பகவானை வழிபடும் போது, எப்போதும் சிலைக்கு நேராக முன்னால் நிற்பதோ அல்லது அவரது கண்களை நேராகப் பார்ப்பதோ கூடாது. அதுமட்டுமின்றி, சனி பகவானை வழிபடும்போது செப்புப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் செம்பு சூரியனுடன் தொடர்புடையது. சனி பவபனுக்கும், சூரியனுக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. எனவே சனி பகவானின் வழிபாட்டின் போது செம்பு பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
2. சனி பகவானுடன் தொடர்புடைய பொருட்களை வாங்கக்கூடாது
சனி ஜெயந்தி நாளன்று, சனி பகவானுடன் தொடர்புடைய பொருட்களான எண்ணெய், இரும்பு, உப்பு போன்றவற்றை வாங்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பொருட்களை நன்கொடையாக வழங்க விரும்பினால், அவற்றை ஒரு நாள் முன்னதாகவே வாங்கி வைத்துவிட வேண்டும்.
3. அசைவ உணவுகள், மது கூடாது
சனி ஜெயந்தி நாளன்று எக்காரணம் கொண்டும் அசைவ உணவுகளை உண்பைதையோ, மது அருந்துவதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது சனி பகவானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, அவரது கோபத்திற்கு ஆளாக்கி, வாழ்க்கையில் சிரமங்களை அதிகரித்துவிடும்.
4. ஏழைகளை கஷ்டப்படுத்தக்கூடாது
சனி பகவான் ஏழை எளியோரின் பாதுகாவலராக கருதப்படுவதால், இந்நாளில் ஒருபோதும் தெரியாமல் கூட ஏழைகளையோ ஆதரவற்றவர்களையோ இழிவாக நடத்தக்கூடாது மற்றும் அவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்தால், அது சனி பகவானுக்கு கோபத்தை ஏற்படுத்தி, வாழ்வில் கஷ்டங்களை அதிகரிக்கும். முக்கியமாக சனி ஜெயந்தி நாளன்று விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்கக்கூடாது. முடிந்தவரை வாயில்லாத இந்த ஜீவன்களுக்கு உணவுகளை வழங்குங்கள்.
5. சிவப்பு நிற பொருட்களை படைக்கக்கூடாது
சனி பகவானுக்கு சிவப்பு மலர்கள், சிவப்பு சந்தனம் அல்லது சிவப்பு ஆடைகளைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவும். பணிவுடனும் அமைதியான மனத்துடனும் சனி பகவானை வழிபடவும். இந்த எளிய விதிகளைப் பின்பற்றினால், சனி பகவான் மகிழ்வார், மேலும் வாழ்க்கையில் உள்ள தடைகளும் விலகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
