மாதவிடாய் காலத்தில் பிரௌன் கலரில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காலத்தில் கருப்பையின் உள் மடிப்புகளிலிருந்து இரத்த போக்கு என்பது மாதந்தேறும் ஒரு சுழற்சி முறையில் ஏற்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்காத நேரங்களில் கருப்பையின் உள் மடிப்புகளில் உள்ள இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தமானது கழிவாக வெளியேற்றப்படுகிறது.

abnormal periods

சில நேரங்களில் வெளிப்படும் இரத்தம் ப்ரவுன் கலரில் கட்டி கட்டியாகவும் போகும். இந்த மாதிரியான பிரச்சினைகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயல்பான மாதவிடாய்

இயல்பான மாதவிடாய்

ஒரு மாதவிடாய் சுழற்சியின் காலம் என்பது 21-35 நாட்களைக் கொண்டிருக்கும். இதில் 2-7 நாட்கள் வரை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். அது ஒவ்வொருவருடைய உடலையும் பொருத்தது. அதேபோல எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதிரப்போக்கும் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் 4 - 12 டீஸ்பூன் வரை அளவிலான இரத்தம் கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த இரத்தத்தின் நிறம் மற்றும் தன்மை சில நேரங்களில் வேறுபடும் அதைப் பற்றிய விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

ப்ரவுன் நிற மாதவிடாய்

ப்ரவுன் நிற மாதவிடாய்

பிரவுன் நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்படும் மாதவிடாயை நினைத்து நீங்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம். பொதுவாக மாதவிடாயின் இறுதி நாட்களில் தான் இதுபோன்று வெளிப்படும். காரணம் இரத்தம் நம் உடலில் வெகுநேரம் தங்கி இருப்பதால் இந்த நிறமாற்றம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது உங்கள் ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டு பிரவுன் கலரில் இரத்தம் வெளியேறவும் வாய்ப்புள்ளது. ஆனால் சில சமயங்களில் பிரவன் நிற ரத்தப்போக்கு சில நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

பளிச்சென்ற சிவப்பு

பளிச்சென்ற சிவப்பு

பளிச்சென்று சிவப்பு நிறத்தில் ரத்தப்போக்கு இருந்தால், உங்கள் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரியான இரத்தம் உடனே கருப்பையில் சேகரிக்கப்பட்டு உடனே வெளியேறுவதை குறிக்கிறது. எந்த தடையும் இல்லாமல் மாதாமாதம் சரியாக மாதவிலக்கு ஏற்படுபவர்களுக்கு இப்படி நல்ல சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு உண்டாகும்.

அடர்ந்த சிவப்பு

அடர்ந்த சிவப்பு

இந்த மாதிரியான இரத்தப்போக்கு இரவு தூங்கி காலையில் எழுந்திருக்கும் போது ஏற்படும். காரணம் கருப்பையில் தங்கியுள்ள பழைய இரத்தம் வெளியேற்றப்படும். சில சமயங்களில் இரவு நேரத்தில் ரத்தம் தேங்கி, உறைந்திருக்கும். அது அடுத்து வெளியேறுகிற ரத்தத்தோடு சேர்ந்து அடந்த சிவப்பு நிறத்தில் வெளியேறும்.

கருப்பு

கருப்பு

சில பெண்களுக்கு மாதவிடாய் முடியும் நாட்களில் இந்த மாதிரியான கருப்பு நிறத்தில் இரத்த போக்கு ஏற்படும். இதுவும் பழைய இரத்தம் தான். இரத்த போக்கு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தாலும் மாதவிலக்கு முறையாக வராமலிருப்பவர்களுக்கும் இதுபோல் கருப்பு நிறத்தில் உதிரப்போக்கு உண்டாகும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

பளிச்சென்ற இரத்தம் கருப்பையில் வடியும் மியூக்கஸ் நீர்மத்துடன் சேர்ந்து ஆரஞ்சு மாதிரியான நிறத்தில் வெளிப்படும். பளிச்சென்ற ஆரஞ்சு நிறம் உங்களுக்கு கருப்பையில் தொற்று இருப்பதைக் குறிக்கிறது. எனவே மிக லேசான கலரில் ஆரஞ்சு நிறத்தில் ரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

காரணங்கள்

காரணங்கள்

பிரவுன் நிற ரத்தப்போக்கு பெரும்பாலான சமயங்களில்இயல்பானது என்றாலும் சில சமயங்களில் அது பல முக்கிய பிரச்னைகளை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது.

கருச்சிதைவு

கருச்சிதைவு

கருச்சிதைவின் போதும் இந்த பிரவுன் நிற உதிரப்போக்கு உண்டாகலாம். பிரவுன் நிறத்தில் இரத்தம் கட்டி கட்டியாக திசுக்களுடன் வெளியேறினால் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை குறிக்கலாம். உடனே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

கருப்பை கட்டிகள் :

கருப்பை கட்டிகள் :

சில சமயங்களில் கருப்பை நார்த் திசுக் கட்டிகள் (புற்று நோய் கட்டிகள் அல்ல) தோன்றி இருக்கலாம். இதனாலும் பிரவுன் கலர் மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். எனவே இந்த அசாதாரண இரத்தப் போக்கின் அறிகுறிகளை கவனித்து வருவது நல்லது.

ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன் சமநிலையின்மை

மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் சமநிலையின்மையால் கருப்பையின் உள்ளடுக்குகள் தடினமாகி அதிக இரத்த போக்கு ஏற்படும். இதனாலும் இரத்தம் கட்டி கட்டியாக வெளியேறும். தீடீர் மாற்றம், எடை பருமன், மருந்து பக்க விளைவுகள், கருப்பை விரிவாக்கம், கருப்பையில் இரத்த அடைப்பு, கருப்பை திசுக்களின் அசாதாரண வளர்ச்சி, முறையற்ற மாதவிடாய் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது.

மருத்துவரை சந்திக்க வேண்டிய காலகட்டம்

மருத்துவரை சந்திக்க வேண்டிய காலகட்டம்

தொடர்ந்து உங்கள் மாதவிடாய் இரத்த போக்கின் நிறம் மாறுபாட்டால், குறிப்பாக ப்ரவுன் நிறம் தென்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக அளவில்லாத இரத்த போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

அனீமியா அறிகுறி

அனீமியா அறிகுறி

இது அனீமியாவின் அறிகுறியாகவும் சில சமயம் இருக்கலாம். இதுபோல் ரத்தப்போக்கு பிரவுன் கலரில் வந்து, கீழ்வரும் அறிகுறிகளும் இருந்தால் உங்களுக்கு அனீமியா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்.

சாதாரணமாக இருப்பதை விட அதிக சோர்வு

அடிக்கடி தலைசுற்றல்

வெளிரிய சாம்பல் நிற சருமம்

வெளிரிய கைவிரல் நகங்கள்

முறையற்ற மாதவிடாய்

இவையெல்லாம் உங்களுக்கு அனிமியா (இரத்த சோகை) இருப்பதை குறிக்கிறது. எனவே உடனடியாக இரும்புச் சத்து நிறைந்த உணவுகளையும் மருத்துவ ஆலோசனையையும் பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brown Blood During Period: Is It Normal?

Like various colors like brown period blood, your menstrution may have different textures that many women may worry about. Check to see if you need medical help for that condition. Miscarriage, Uterine Fibroids:, Hormonal irregularities, these are problems may be occur.
Story first published: Thursday, March 22, 2018, 13:00 [IST]