Latest Updates
-
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
National Dengue Day 2026: டெங்கு என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வகையான வைரஸ் தொற்றாகும். ஒவ்வொரு ஆண்டும், வெப்பமண்டல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்களை டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது, மேலும் இந்தியா மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. இதற்கு முறையான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அது தீவிரமாகி உடலினுள் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த டெங்கு பொதுவாக மழைக்காலங்களில் அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆம் தேதி தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் டெங்கு வைரஸ் எப்படி பரவுகிறது, அதை எப்படி தடுப்பது என்பன குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். அந்த வகையில் இன்று தேசிய டெங்கு தினம். இந்த தினத்தை முன்னிட்டு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விரைவில் குணமாவதற்கான 5 டிப்ஸ்களை மதுரையைச் சேர்ந்த ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவரான டாக்டர். சந்தோஷிமா கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "டெங்கு என்பது ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோய். இந்த டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், தலை வலி, தசை வலி, மூட்டுகளில் வலி போன்றவை இருக்கும். அதோடு இரத்த பிளேட்லெட்டுகளின் அளவும் குறையும். இந்த டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, 5 விஷயங்களை பின்பற்ற வேண்டும்" என்று டாக்டர் கூறினார். அவை பின்வருமாறு:
1. தண்ணீர் மற்றும் ஓய்வு
டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் நிறைய ஓய்வு எடுக்க வேண்டும்" என்று கூறினார். ஏனெனில் டெங்குவிலிருந்து குணமடைய, உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வதும் போதுமான ஓய்வு பெறுவதும் மிக முக்கியமான இரண்டு நடவடிக்கைகளாகும். இதன் மூலம் பிளாஸ்மா கசிவுகள் அல்லது உறுப்பு பாதிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் குறையும் மற்றும் வைரஸை எதிர்த்து போராடுவதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
2. சில உணவுகளை தவிர்க்கவும்
டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது சர்க்கரை நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார். ஏனெனில் இந்த உணவுகளானது நோயெதிர்ப்பு சக்தியை இன்னும் பலவீனமாக்கி, செரிமான பிரச்சனைகளை தீவிரமாக்கிவிடும்.
3. பப்பாளி இலைச்சாறு
பப்பாளி இலைச்சாற்றினை எடுக்க வேண்டும். இந்த பப்பாளி இலைச்சாற்றில் உள்ள நொதிகள் பிளேட்லெட்டுகளின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று டாக்டர் கூறினார். இந்த வழியானது டெங்கு காய்ச்சலிலிருந்து மீள்வதற்குத் துணைபுரியும் ஒரு பாரம்பரிய மருந்தாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஒருபோதும் இது முறையான மருத்துவ சிகிச்சைக்கு முழுமையான மாற்றாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
4. வைட்டமின் சி உணவுகள்
"டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது வைட்டமின் சி அதிகம் நிறைந்த கொய்யாப்பழம், நெல்லிக்காய், கிவி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். ஏனெனில் வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சோர்வை எதிர்த்துப் போராடவும், இரத்தத் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியை ஆதரிக்கவும் உதவுகிறது.
5. இஞ்சி, மஞ்சள்
"கடைசியாக டெங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதிலிருந்து விரைவில் மீண்டு வர, உணவில் இஞ்சியையும், மஞ்சளையும் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதன் மூலம், இந்த காய்ச்சலில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும்" என்று கூறினார். அதற்கு இஞ்சி, மஞ்சளைக் கொண்டு கசாயமாகவோ அல்லது தினசரி உணவில் இஞ்சி மற்றும் மஞ்சளை சேர்த்து வரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

