Latest Updates
-
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
National Dengue Day 2026: டெங்கு காய்ச்சல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
National Dengue Day 2026: டெங்கு என்பது உலகில் மிக வேகமாகப் பரவும் கொசுக்களால் பரவும் வைரஸ் நோய்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இது மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கிறது. டெங்கு என்பது பொதுவாக அதிக காய்ச்சல் மற்றும் உடல் வலி மட்டுமே என்று கருதப்படுகிறது, ஆனால் உடலுக்குள் சிக்கல்கள் ஏற்படும்போது அது விரைவாகத் தீவிரமானதாக மாறக்கூடும். இந்த டெங்கு காய்ச்சலை ஒருபோதும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சலானது நோய்த்தொற்றுள்ள ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. இதற்கு போதுமான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருந்தால், அது உள் இரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. பெரும்பாலான நோயாளிகள் போதுமான ஓய்வு மற்றும் நீரேற்றத்தின் மூலம் குணமடைந்துவிடுகின்றனர். ஆனால் சிலருக்கு தீவிரமான நிலையில் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் தடுப்பு நடவடிக்கைகளையும், பருவமழைக்கு முந்தைய காலத்தில் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் மே 16-ஆம் தேதி 'தேசிய டெங்கு தினம்' அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டெங்கு குறித்த சில முக்கியமான அடிப்படை விஷயங்களைக் காண்போம்.

அதிர்ச்சி :
டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள், பொதுவாக மழைக் காலத்தில் மட்டுமே உற்பத்தியாகும். அந்த நிலை மாறி தற்போது எல்லா காலங்களிலும் உற்பத்தியாகிறது. மேலும் ஏடிஸ் கொசுக்களின் வாழ்நாள் முன்பு 20 நாட்கள் வரை இருந்தது. அதுவும் தற்போது 40 நாட்களாக அதிகரித்திருக்கிறது.

உலகம் முழுவதும் டெங்கு :
உலகெங்கும் ஆண்டுக்கு 6 கோடி பேர் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். 24,000 பேர் வரை டெங்குவினால் மரணமடைகின்றனர்.
ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது.

சுத்தம் :
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், தேங்கியிருக்கும் சுத்தமான தண்ணீரில் உற்பத்தி யாகிறது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் தண்ணீரை சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்திட வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.

பகல் :
ஏடிஸ் கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கக்கூடியது.அதனால் இரவில் தூங்கச் செல்லும் போது கொசுவலை போட்டுக் கொள்வதை தவிர்த்து பகல் நேரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு பரவுமா? :
பலரும் டெங்கு காய்ச்சல் என்பது தொற்று நோய்ப் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.
டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. ஆனால் டெங்கு பாதிப்பு இருக்கும் ஒருவரை கடித்த கொசு இன்னொருவரை கடிக்கும் போது அவருக்கும் டெங்கு பாதிப்பு வரக்கூடும்.

மீண்டும் மீண்டும் வரும் :
டெங்கு காய்ச்சலில் நான்கு வகை இருக்கிறது. அவற்றில் முதல் வகை டெங்கு காய்சல் மட்டும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வருவது.
மற்றவை பின்னாட்களில் உங்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.

காய்ச்சல் குறைந்தால் ஜாக்கிரதை :
காய்ச்சல் குறைந்ததும் உடலிலிருந்து டெங்கு வைரஸ் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இதற்குப் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமாகும்.
டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கும். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

உயிரிழப்பு :
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.
இந்த கட்டுரையில் முன்னுரை, தலைப்பு, URL, Tags மற்றும் போட்டோ மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications