For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய சந்திர கிரகணம் எப்போது தொடங்கி, எப்போது முடிகிறது?...

இன்று சந்திர கிரகணம். அதுவும் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் இருக்கப் போகிற சந்திர கிரகணம் இதுதான்.

|

இன்று ஜூலை 27 வெள்ளிக்கிழமை. ஆடி வெள்ளிக்கிழமை என்ற புனித நாளும் கூட. ஆடி அமாவாசை என்று இப்படி இன்றைய நாளின் புனிதத் தன்மையை அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாவற்றையும் விட இன்றைக்கு நிகழப் போகிற மிக முக்கியமாக அதிசய நிகழ்வு என்ன தெரியுமா?...

அந்த அரிய நிகழ்வு பூமியில் நடக்கப் போவதல்ல. ஆனால் நம்மால் பார்க்க முடியும். ஆம். இன்று சந்திர கிரகணம். அதுவும் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் இருக்கப் போகிற சந்திர கிரகணம் இதுதான்.அதுவும் இந்த சந்திர கிரகணம் மற்ற சாதாரண சந்திர கிரகணமாகக் கடந்து போவப்போவதில்லை. சூப்பர் பிளட் மூன் (super blood moon) ஆக தோன்றப் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம்

இன்றைக்கு இரவு உண்டாகப் போகிற சந்திரகணமாக முழு சந்திர கிரகணமாகத் தோன்றப் போகிறது. அதிலும் குறிப்பாக, இந்த நூற்றாண்டிலேயே தோன்றப் போகிற முழு சந்திர கிரகணமும் இதுதான்.

ஆரம்பிக்கும் நேரம்

ஆரம்பிக்கும் நேரம்

விளம்பி வருடம் ஆடி மாதம் 11 ஆம் நாளான வெள்ளிக் கிழமை சந்திர கிரகணம் உண்டாகப் போகிறது. அதாவது வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் தோன்றுகிறது. அது சுக்கிரனின் நாளான வெள்ளிக்கிழமையும் கூட என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியே தொடர்ந்து வெள்ளியில் பயணித்து, சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் சென்று சனிக்கிழமை அந்த கிரகணம் நிறைவு பெறுகிறது.

ஜோதிட விளக்கம்

ஜோதிட விளக்கம்

அதாவது ஜோதிடத்தில் கிரகணம் தொடங்கும் நேரத்தை கிரகண ஆரம்பம் என்றும் அடுத்த நிலையை கிரகண உன்மீலனம் என்றும் கிரகண மத்தியமம் என்றும் கிரகண நீமீலனம் மற்றும் கிரகண மோட்சம் என்றும் அந்த கிரகண காலகட்டத்தை பிரிப்பார்கள்.

நள்ளிரவு நேரம்

நள்ளிரவு நேரம்

இன்றைய சந்திர கிரகணமானது நள்ளிரவு 11.54 க்கு தொடங்கி, அடுத்த நாள் அதிகாலை 3.49 க்கு நிறைவடைகிறது. இதில் சந்திரன் தோன்றும்போது மிகப் பெரிய நிலாவாக சூப்பர் பிளட் மூன் என்று சொல்லப்படும் சிவப்பு நிவாவாகத் தோன்றும். கிட்டதட்ட இந்த சூப்பர் பிளட் மூனாக மட்டுமே சந்திரன் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை வானில் இருக்கும்.

இந்தியாவில்

இந்தியாவில்

இந்த ஒரு மணி நேரம் 43 நிமிடங்களும் ஆசிய நாடுகள் முழுக்கவும், அதாவது இந்தியாவிலும் வெறும் கண்களிலேயே பார்க்க முடியும்.

பிளட் மூன் எப்படி தோன்றுகிறது?

பிளட் மூன் எப்படி தோன்றுகிறது?

பிளட் மூன் என்பது என்னவென்றால், எப்போதும் சூரிய ஒளியானது நிலாவின் மீடு படுகின்ற போது, அது உள்வாங்கிக் கொள்ளுகின்ற ஒளி தான் இரவில் நமக்கு நிலவொளியாகப் பிரதிபலிக்கிறது. இந்த பிளட் மூன் தோன்றுகிற குறிப்பிட்ட நாளில் சூரியனின் நிழல் நேரடியாக நிலாவின் மீது படாமல் பூமியின் வளி மண்டலத்தின் மீது பட்டு அதனுடைய கதிர்கள் தான் நிலாவின் மீது விழுகின்றது. அப்படி விழுவதால் தான் அது சிவப்பு நிறமாக பிரதிபலிக்கிறது.

இந்த சந்திர கிரகணம் மற்ற சந்திர கிரகணங்களைப் போல இல்லாமல் பூமியினுடைய நிழலை நேரடியாகக் கடந்து செல்லுகின்ற வரையிலும் கூட, நம்முடைய கண்களுக்கு முழுமையாகத் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today's Timings For Largest Lunar Eclipse Of This Century

Chandra Grahan or Lunar Eclipse 2018 date and time in India: 27 July, 2018. The world is about to witness the longest lunar eclipse in a century.
Desktop Bottom Promotion