For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் இரகசியமாக கூகுலில் தேடும் விஷயங்கள்... - டாப் 10!

By Staff
|

மில்லினியம் பிறப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் பிறந்தது கூகுல். 1998ல் பிறந்த கூகுல் இவ்வளவு பெரிய நிறுவனமாக, உலக மக்களின் நெருங்கிய தோழனாக, அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஒரு கட்டத்தில் யாஹூ கூகுலை வாங்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆம், வெறும் ஒரு மில்லியன் டாலருக்கு கூகுலை வாங்கு வாய்ப்பு யாஹூவிற்கு கிடைத்தும், அவர்கள் தவிர்த்துவிட்டனர். இல்லையேல் யாஹூ சிரமமான சூழலை சந்திருக்காது.

Things Women Google In Secret

சரி! மீண்டும் கூகுலுக்கு வருவோம். கூகுள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தேடுதல் தான். கூகுல் சர்ச் பாரிலே சென்று கூகுல் டாட் காம் என்று டைப் செய்து கூகுலுக்குள் செல்வோரும் சிலர் இருக்கிறார்கள்.

நம்மில் எத்தனை பேர் கூகுல் ப்ரைவேட் விண்டோவிற்குள் சென்று சர்ச் செய்கிறோம். நிறைய பேர் செய்வோம்.. யாருக்கும் தெரியாமல் தேட வேண்டியவற்றை எல்லாம் அதனுள் சென்று தான் தேடுவோம்.

ஆண்கள் சில பாலானவற்றை இரகசியமாக தேடுவார்கள் சரி, பெண்கள் என்ன அப்படி தேடுவார்கள்... ப்ரைவேட் விண்டோ என்று மட்டுமில்லாது, பெண்களும் இரகசியமாக கூகுல் செய்யும் விஷயங்கள் சிலவன இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை!

உடல் எடை!

பானை போல வயிறு வீங்கும் வரை தங்களுக்கு தொப்பை வந்துவிட்டதை ஆண்கள் உணரவும் மாட்டார்கள், ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை, டீ-ஷர்ட் மீது ஒரு எக்ஸ்ட்ரா ஷர்ட் மாட்டிக் கொண்டால் கூட... கொஞ்சம் குண்டாகிட்டமோ என்று ஃபீலிங்க்ஸ் ஆப் இந்தியாவாக மாறும் பெண்களும் இருக்கிறார்கள். உடல் எடை குறைக்க பல டயட், பயிற்சிகள் இருக்கின்றன. யாராவது நேரில் ஏதாவது குறிப்புகள் சொன்னால்... I'm Foodie என்று பெருமையாக கூறிவிட்டு.. யாரும் இல்லாத சமயத்தில் டயட் சார்ட் தேடி, தேடி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

செக்ஸியான பெண்கள்!

செக்ஸியான பெண்கள்!

பெண்களை, பெண்களையேவா... பசங்க பார்ப்பாங்கன்னு சொன்னா ஒரு நியாயம் இருக்கு. பொண்ணுகளுமா பார்ப்பாங்க. பார்ப்பாங்க பாஸ்... கூகுல்னு மட்டுமில்ல, இன்ஸ்டாகிராம்ல கூட பொண்ணுங்க பொண்ணுங்களையே பார்ப்பாங்க... பார்த்து அவங்க மட்டும் எப்படி சிக்குன்னு இருக்காங்க.. நாம என்ன பண்ணாலும் நமக்கு ஏன் இப்படி உடம்பு வர மாட்டேங்குதுன்னு ஃபீல் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள்.

பார்ன்!

பார்ன்!

பார்னா? பெண்களா? அட... அப்படி எல்லாம் இருக்காதுங்க... என்று கூறுவோருக்கு.. உலகிலேயே அதிகமாக பார்ன் பார்க்கும் பெண்கள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருப்பது இந்திய பெண்கள் தானாம். பின்ன இதெல்லாம் எல்லாருக்கும் முன்னாடியா பார்ப்பாங்க.. இரகசியமா தான பார்ப்பாங்க... 2016ல நான்காவது இடத்துல இருந்த இந்தியா, 2017ல மூன்றாவது இடத்துக்கு வந்திருக்குன்னு சொல்றாங்க. இந்த வருஷம் எந்த இடத்த பிடிப்பாங்கன்னு அவங்க பார்க்குறத வெச்சு தான் சொல்லணும்.

ஆண் உடல்!

ஆண் உடல்!

தன் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுவது என்பது இயல்பு.. ஆண்கள் எனும் போது சாதாரணமாக இருக்கும் நமது பார்வை, பெண்கள் என்றால் அச்சச்சோ... அம்மம்மோ என்றாகிவிடுகிறது. சிலர் முந்திய பத்தியில் இந்திய பெண்கள் பார்ன் பார்ப்பதையே நம்ப முடியாமல் தான் இருப்பார்கள். ஆனால், இதையும் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். ஏனெனில், இதில் தவறொன்றும் இல்லை. தங்கள் எதிர் பாலினத்தின் உடல்வாகு எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்வது இயல்பான, இயற்கையான ஆர்வம் தான். இப்படியான ஆர்வம் பிறக்கவில்லை என்றால் தான் ஏதோ ஹார்மோன் பிராப்ளம் என்று அர்த்தம்.

சமையல் குறிப்புகள்!

சமையல் குறிப்புகள்!

சமையல் தானே... எனக்கெல்லாம் அத்துப்படி என்று கூறும் பெண்கள் சிலர்... சமையல் செய்ய தெரிந்தாலும்... ச்சேச்சே... நான் சமையல்கட்டு பக்கமே போனது இல்லன்னு பீலாய் விடும் பெண்கள் சிலர்... என்ன இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் சமையல் நன்கு செய்தாலும்... இந்த காலத்தில்... இளம் பெண்கள் கணவனிடம் அவர் கேட்கும் உணவுகள் எல்லாம் தனக்கு நன்கு வரும் என்று கூறிவிட்டு... அவர் இல்லாத போது அதை கூகுல், யூடியூப்பில் தேடி பார்த்து தான் சமைக்கிறார்களாம்.

ஹவ் டூ விஷயங்கள்...

ஹவ் டூ விஷயங்கள்...

How To... என்று தேடும் பழக்கம் நிஜமாகவே பெண்களிடம் தான் அதிகம். வாக்ஸிங் செய்வது எப்படி, ஹேர் ஸ்டைல் செய்வது எப்படி, நெயில் பாலிஷ் டிசைனாக செய்வது எப்படி, துணிகளை வேறுவிதமாக ஃபேஷனாக அணிவது எப்படி, வீட்டை அலங்காரப்படுத்துவது எப்படி என்று இவர்களது ஹவ் டூ லிஸ்ட் மிகவும் பெரியது.

அந்தரங்க ஆரோக்கியம்

அந்தரங்க ஆரோக்கியம்

இது இரகசியமாக செய்தாலும்.. ஒரு நல்ல விஷயம். பலர் தங்கள் அந்தரங்க ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களிடமும் சென்று கலந்தாய்வு செய்வதில்லை, கூகுலில் தேடியும் அறிந்துக் கொள்வதில்லை. நிறைய பேர் அந்தரங்க விஷயங்கள் குறித்து ஆராய்ந்து அதில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்று ரிசல்ட் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட இரகசியமாக கூகுலில் அந்தரங்க விஷயங்கள் குறித்து தேடி ஆராய்ந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். உண்மையில்.. இதுவொரு நல்ல பழக்கமே!

உள்ளாடை வகைகள்!

உள்ளாடை வகைகள்!

பெரும்பாலான பெண்கள் கூகுலில் இரகசியமாக தேடும் சமாச்சாரம் இது. பொதுவாக நமது வீடுகளிலேயே இந்த விஷயம் மிக இரகசியமாக தான் இருக்கும். ஆண்கள் பெண்களின் உள்ளாடைகளை தவறுதலாக கூட தொட்டுவிடக் கூடாது என்று சொல்லி தட்டி, தட்டி வளர்க்கும் முறை காரணமாக.. இந்த சாதாரண விஷயம் கூட பரம இரகசியமாக மாறிவிட்டது.

ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!

ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!

ஆரம்பத்தில் உறவில் உருவாகும் பிரச்சனைகள், சிக்கல்கள், அதை எப்படி தீர்க்க வேண்டும், எப்படி எல்லாம இருந்தால் உறவில் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம் என்று கூறுவதற்கு தாத்தா, பாட்டி என்ற பெரிய கூகுல் இருந்தனர். ஆனால், இன்று அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்களுடன் நேரம் செலவழித்து பேச யாருக்கும் முடிவதில்லை. ஆகையால், உறவில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், துணை ஏமாற்றுகிறாரா? காதலிக்கிறாரா? அவர் எப்படியானவர் என்று அறிந்துக் கொள்வதற்கு கூட இணையத்தில் இருக்கும் கட்டுரைகளை தேடி படிக்கும் காலம் வந்துவிட்டது.

செக்ஸ் டாய்ஸ்!

செக்ஸ் டாய்ஸ்!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இந்தியாவுல தடை செஞ்சிருந்தாலுமே கூட... செக்ஸ் டாய்ஸ் இந்தியாவில் பரவலாக சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. சிலர் ஆன்லைனில் வாங்கியும் பயன்படுத்துகிறார்கள். செக்ஸ் டாய்ஸ் மற்றும் அவற்றின் வகைகள் மற்றும் பயன்கள் குறித்து அறிந்துக் கொள்ள இரகசியமாக தேடி படிக்கும் பழக்கம் பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Women Google In Secret

There are no dumb questions when it comes to searching Google, even though many stupid questions are searched daily. Here are the things women google in secret.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more