For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும் வழிபாட்டு பொருட்கள்

மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழிக்கும் கடவுளாவார். நாம் வழிபடும் பொருட்களே நம்மை சிவனின் அன்பை பெறவைப்பதும், கோபத்தை பெறவைப்பதும். எனவே மறந்தும் இந்த பொருட்களை கொண்டு சிவனை வழிபட்டு விடாதீர்க

|

இந்து புராணங்களின் படி சிவபெருமான் முமூர்த்திகளுள் முக்கியமானவர் ஆவார். அழிக்கும் கடவுளான சிவபெருமான் கோபத்திற்கு புகழ்பெற்றவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் கோபப்பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. அதேசமயம் சிவபெருமானை குளிரிவிப்பதும் மிகவும் எளிமையானதாகும். சாந்த மூர்த்தியாக இருக்கும்போது தன் பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளி கொடுப்பவர் சிவபெருமான்.

Lord Shiva

சிவபெருமானிடம் இருந்து வரங்களை பெறுவதற்கும், அவரின் கோபத்திற்கு ஆளாவதற்கும் ஒரே காரணம்தான் அதுதான் வழிபடும் முறை. சில பொருட்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை வைத்து வணங்கும்போது சிவபெருமான் குளிர்ந்து வேண்டுவதை அருளுவார், அதேபோல சிவனுக்கு பிடிக்காத சில பொருட்களை வைத்து வழிபட்டால், நமது அழிவு நிச்சயம். எந்தெந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வணங்கினால் ஆபத்து என்பதை இங்கே பார்க்கலாம்.

சிவனுக்கு பிடித்தவை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பால் அனைத்து கடவுள்களுக்கும் படைக்கப்படும் ஒரு பொருளாகும். சிவபெருமானும் பாலை அதிகம் விரும்புவார். முடிந்தளவு சுத்தமான பாலை சிவபெருமானுக்கு படைக்க முயலுங்கள். கடைகளில் விற்கும் செயற்கை இராசயனங்களால் தயாரிக்கப்பட்ட பாலை சிவபெருமானுக்கு படைப்பது உங்களுக்கு எந்த பலனையும் தராது.

அரைத்த சந்தனம்

அரைத்த சந்தனம்

சிவபெருமான் இயற்கையிலியே கோபக்கார கடவுளாக அறியப்படுகிறார். இந்த சூழ்நிலையில் அரைத்த சந்தனம் சிவபெருமானின் கோபத்தை குறைத்து அவரை குளிர்ச்சியடைய செய்யும் என புராணங்கள் கூறுகிறது.

விபூதி

விபூதி

சிவபெருமான் மிகவும் எளிமையான கடவுள் ஆவார். மற்ற கடவுள்களுக்கு படைப்பதை போன்ற பொருட்கள் சிவபெருமானுக்கு தேவையில்லை. எனவே சிவலிங்கத்தை சுத்தமான பாலில் அபிஷேகம் செய்து திருநீரால் மூன்று பட்டையிட்டு வணங்கினாலே போதும் சிவபெருமானின் அன்பை பெற்றுவிடலாம்.

வில்வம்

வில்வம்

நீங்கள் சிவபெருமானை வழிபட எத்தனை இலட்சங்கள் செலவு செய்தாலும் அவை அனைத்தும் சிறிது வில்வ இலைகளை வைத்து வழிபடுவதற்கு ஈடாகாது. அதிலும் சிவனின் திரிசூலம் வடிவில் இருக்கும் மூன்று வில்வ இலைகளை சிவபெருமானுக்கு படைத்தால் கூடுதல் அருள் கிடைக்கும்.

சிவனுக்கு பிடிக்காதவை

கேதகி மலர்

கேதகி மலர்

கேதகி மலரை ஒருபோதும் சிவனுக்கு வைத்து வணங்கக்கூடாது. ஏனெனில், ஒருமுறை பிரம்மாவிற்கு, விஷ்ணுவிற்கும் யார் சிறந்தவர் என்ற சண்டை மூண்டது. சிவபெருமான் தன் தலையையும், பாதத்தையும் யார் முதலில் பார்க்கிறார்களோ அவரே சிறந்தவர் என கூறினார். விஷ்ணு சிவனின் பாதத்தையும், பிரம்மா சிவனின் தலையையும் பார்க்க கிளம்பினர். சிவபெருமான்தான் ஆதி, அந்தம் இல்லாதவர் ஆயிற்றே இருவராலுமே தலையையும், பாதத்தையும் பார்க்க இயலவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத பிரம்மா தான் சிவபெருமானின் தலையை பார்த்ததாகவும் தனக்கு பொய் சாட்சி கூறும்படியும் கேதகையிடம் கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். திரும்பி வந்த விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார், பிரம்மாவோ தான் சிவனின் தலையை பார்த்துவிட்டதாகவும் அதற்கு கேதகை மலர்தான் சாட்சி எனவும் பொய் கூறினார். அவர்களின் பொய்யை கேட்டு கோபம்கொண்ட ஈசன் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டியதோடு இனி உன்னை யாரும் கடவுளாக வணங்க மாட்டார்கள் என்ற சாபத்தையும் கொடுத்தார். பொய்சாட்சி கூறிய கேதகை மலரை இனிமேல் தன் ஆலயத்திற்குள் வரக்கூடாது எனவும் சாபம் கொடுத்தார். எனவே எக்காரணத்தை கொண்டும் சிவனை கேதகை மலரை கொண்டு வழிபடாதீர்கள்.

துளசி

துளசி

சிவபுராணத்தின் படி ஜலந்தரன் என்னும் அரக்கனை சிவபெருமான் வதைத்து சாம்பலாக்கினார். ஜலந்தரன் தன் மனைவியின் கற்பை பொருத்து எந்த கடவுளாலும் வதைக்க முடியாத வரத்தை பெற்றவன். எனவே அவனை அழிக்க விஷ்ணு ஜலந்தரன் உருவில் சென்று அவன் மனைவி துளசியின் கற்பின் மாண்பை உடைக்க நேரிட்டது. சிவபெருமான்தான் தன் கற்பு நெறி தவறுவதற்கும், தன் கணவனின் அழிவிற்கும் காரணம் என்பதை அறிந்த துளசி தன்னுடய புனிதமான இலைகள் இனி சிவபெருமானை வணங்கக்கூடாது என சாபமளித்தார். எனவே சிவபெருமானுக்கு துளசியை வைத்து வழிபடாதீர்கள், பிறகு ஈசனின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

தேங்காய் நீர்

தேங்காய் நீர்

சிவபெருமானுக்கு தேங்காயை வைத்து வழிபடலாம் ஆனால் தேங்காய் நீரை படைக்கக்கூடாது. கோவிலில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம் தேங்காவை உடைத்து தண்ணீரை கீழே ஊற்றிவிட்டுதான் சிவனுக்கு படைப்பார்கள். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய அனைத்தும் புனிதமானவையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் நாம் அருந்த கூடிய பொருளான தேங்காய் தண்ணீரை சிவனுக்கு படைப்பது பாவத்தின் உச்சமாகும்.

மஞ்சள்

மஞ்சள்

சிவலிங்கத்தின் மீது மஞ்சளை ஒருபோதும் பூசக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பண்டையகாலம் முதலே பெண்களின் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் அதனை புனிதமான சிவபெருமானின் லிங்கத்தினம் மீது பூசக்கூடாது.

குங்குமம்

குங்குமம்

அனைத்து சிவன் கோவில்களிலும் திருநீறை மட்டுமே பிரசாதமாக கொடுப்பார்கள், அது ஏன் என்று எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா?. ஏனெனில்பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்க வேண்டுமென குங்குமத்தை நெற்றியில் திலகமாய் இடுவார்கள். சிவபெருமான் அழிக்கும் கடவுளாவார். எனவே ஈசனின் அடையாளமான சிவலிங்கத்திற்கு குங்குமத்தை வைத்து வழிபடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 things we should never offer Lord Shiva

Lord Shiva is the god of destruction. So we need to follow some discipline to praise Lord Shiva. Some things we offer to Lord Shiva will increase his anger, For example, Kethaki flowers, Tulsi, Coconut water are things which increase Lord Shiva's anger.
Story first published: Friday, July 27, 2018, 12:10 [IST]
Desktop Bottom Promotion