For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த துர்கை மந்திரம் நீங்கள் வேண்டும் அனைத்தையும் உங்களுக்கு வழங்கும்

|

இந்த அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது துர்கையம்மனே. சமஸ்கிருதத்தில் துர்கா என்றால் தகர்க்க முடியாத கோட்டை என்று பொருள். துர்கையை சிலர் துர்கதினாஷனி என்றும் அழைப்பார்கள் அதன் பொருள் அனைத்து துயரங்களையும் நீக்குபவர் என்பதாகும். துர்கா தேவிதான் நம்மை பாதுகாப்பாக பராமரிப்பவர், அதேசமயம் தேவைப்பட்டால் அழிக்கவும் செய்பவர்.

these Durga mantras will make all your desires come true

சுருக்கமாக சொல்லப்போனால் நம்மை ஒரு தாய் போல பாதுகாப்பவரும் இவர்தான், நாம் தவறு செய்யும்போது தண்டிப்பவரும் இவர்தான். அதனாலேயே இந்து மதத்தின் மிகசக்தி வாய்ந்த கடவுள்களில் ஒருவராக துர்கா தேவி உள்ளார். உங்களை அனைத்து தீயசக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் துர்கையை பக்தியுடன் வழிபடுவது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும். துர்கை அம்மனை வழிபடுவதில் முக்கியமான ஒரு வழி மந்திரங்கள் கூறி வழிபடுவது, இந்த பதிவில் துர்கை அம்மனை மகிழ்விக்கக்கூடிய மந்திரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துர்கா தேவி தியான மந்திரம்

துர்கா தேவி தியான மந்திரம்

" ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன்

லோகாயந்த்ரா சன்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான் நாம் "

மற்ற துர்கை மந்திரங்களை கூறும் முன் இந்த மந்திரத்தை கூறி துர்கை அம்மனை வழிபட தொடங்குவது நல்லது என கூறப்படுகிறது. இந்த மந்திரம் நம் மனதை ஒருநிலைபடுத்தவும், வாழ்க்கையில் கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.

துர்கை மந்திரம்

துர்கை மந்திரம்

" சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வதே சாதிகே

சரண்யே தரம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே "

இந்த மந்திரத்தை கிட்டத்தட்ட அனைத்து சுபகாரியங்களிலும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். துர்கா தேவி அனைத்தையும் விட புனிதமான, மங்களகரமான கடவுள் ஆவார். மூன்று உலகிற்கும் கடவுளான துர்க்கைக்கு மிகவும் பிடித்த மந்திரம் இதுதான். கௌரி தேவியாய் எழுந்தருளியிருக்கும் தேவியை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரந்தை அடிக்கடி கூறுவது உங்களுக்கு அறிவு, வலிமை மற்றும் செல்வத்தை கொடுக்கும்.

துர்கா தேவி ஸ்துதி மந்திரம்

துர்கா தேவி ஸ்துதி மந்திரம்

" யா தேவி சர்வ பூதேட்சு, சாந்தி ரூபேணே சகிஸ்தா

யா தேவி சர்வ பூதேட்சு, சக்தி ரூபேணே சகிஸ்தா

யா தேவி சர்வ பூதேட்சு, மாத்ரி ரூபேணே சகிஸ்தா

யா தேவி சர்வ பூதேட்சு, புத்தி ரூபேணே சகிஸ்தா

நமஸ்த்தியை, நமஸ்த்தியை, நமஸ்த்தியை, நமோ நமஹ "

இந்த மந்திரம் ஒருவருக்கு ஆற்றலையும், நேர்மறை சக்தியையும், வளத்தையும் வழங்கும். இது ஒருவரின் உள்ளார்ந்த அறிவாற்றலை அதிகரித்து மற்றவர்களுடன் ஆரோக்கியமான உறவை வளர்க்க உதவும். இது உங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.

துர்கா தேவி துஹ் ஸ்வப்னா நிவாரன் மந்திரம்

துர்கா தேவி துஹ் ஸ்வப்னா நிவாரன் மந்திரம்

" சாந்தி கர்மானி சர்வத்ர ததா துஹ் ஸ்வப்ன தர்ஷனி

க்ராஹ் பிடாசு சோகரசு மாஹாத்ம்யம் ஸ்ரீனு யான்மம் "

இந்த மந்திரம் உங்களை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும். அதேசமயம் நம் வாழ்க்கையில் சோதனையான காலகட்டத்தில் அமைதியை ஏற்படுத்தவும் இந்த மந்திரத்தை கூறலாம். இது நம்மை எந்தவித தீயசக்திகளும் நெருங்காமல் பாதுகாப்பதுடன் உங்கள் மனதிலும் தைரியத்தை வளர்க்கும்.

MOST READ: வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா?

துர்கா சத்ரு - சாந்தி மந்திரம்

துர்கா சத்ரு - சாந்தி மந்திரம்

" ரிபாவஹ் சன்க்ஷாக்யம் யாண்டி கல்யாணம் சோப் பட்யதே

நந்ததே ச்சா குலம் புனசம் மாஹாத்ம்யம் மாம் ஸ்ரீனு யான்மம் "

நம் வாழ்வில் அனைவருமே எதிர்மறை சக்திகளால் ஒரு காலகட்டத்தில் நிச்சயம் பாதிக்கப்படுவோம். இது நம் எதிரிகளாலோ அல்லது உடனிருப்பவர்களாலோ கூட நேரலாம். இந்த தீயசக்திகளிடம் துர்கா தேவி உங்களை பாதுகாக்க இந்த மந்திரம் உதவும். இது நம்மை பாதுகாப்பதோடு நம் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளவற்றை விலக்கும். இது எதிரிகளை அழித்து உங்க வாழ்வில் அமைதியை கொண்டுவரும்.

துர்கா தேவி- சர்வ- பாத- முக்தி மந்திரம்

துர்கா தேவி- சர்வ- பாத- முக்தி மந்திரம்

" சர்வ பாத வினிர்முக்தோ தான் தான்யா சுதந்தவிதஹ்

மனுஷியோ மத்ப்ரஸதீன் பவிஷ்யதி நா சன்ஷாய்ஹ் "

நம் வாழ்க்கையில் நல்லது நடக்க பொதுவாக தாமதமாகும். இது துரதிர்ஷ்டம் எனப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் துர்கா தேவி சர்வ பாத முக்தி மந்திரம் உங்களை காப்பாற்றும். இது துன்பங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். குறிப்பாக குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்தை கூறுவது அவர்களுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.

துர்கா அஷ்ஹந் சிசு சாந்தி பிரத்யாக் மந்திரம்

துர்கா அஷ்ஹந் சிசு சாந்தி பிரத்யாக் மந்திரம்

" பால் க்ரஹ பிபுகுடானம் பாலனாம் சாந்திகர்க்கம்

சங்கத்பேதே ச் ரினாம் மாத்ரி காரண் முத்மம் "

இது மிகவும் பயனுள்ள துர்கா மந்திரம் ஆகும். குறிப்பாக பெற்றோர்களுக்கு, ஏனெனில் இது அவர்களின் குழந்தைகளுக்கு நன்மையை வழங்கும். ஒருவேளை உங்கள் குழந்தை தீயசக்திகளால் பதிப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இந்த மந்திரத்தை கூறுவது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும். இந்த மந்திரம் உங்கள் குழந்தைகளை பாதுகாக்க துர்கா தேவியை நேரடியாக அழைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

MOST READ: இந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும் என்று சாணக்கியர் கூறுகிறார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

these Durga mantras will make all your desires come true

It is believed religious chanting of these Durga mantras not only impresses Goddess Durga, but also dispels negative energy from our lives.
Story first published: Monday, December 3, 2018, 18:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more