உலகின் பிரபல கொள்ளைக் கூட்டங்கள் கடைப்பிடிக்கும் அபாயகரமான சடங்கு முறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு பழங்குடி மற்றும் ஜாதி, மத வேறுபாடு கொண்ட மக்களிடம் மட்டும் தான் கலாச்சார ரீதியாக பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படும் என்று நாம் கருதுகிறோம்.

ஆனால், கொள்ளையர்கள் குழுக்களும் தங்களுக்கென தனி சடங்கு முறைகள் வைத்திருக்கிறார்கள். தங்கள் குழுவில் புதிய உறுப்பினர் சேரும் போதும், புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போதும் அந்தந்த குழு தனக்கான தனி சடங்குகளை செய்து முடித்தே தேர்வு செய்கிறது.

இந்த சடங்கு முறைகள் சாதராணமாக இருக்காது, கொலை செய்வது, இரத்தம் குடிக்க வைப்பது, சிறுநீர் பருக வைப்பது, கொடூரமான தாக்குதல் நடத்துவது என நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு கொடூரமானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்.எஸ். - 13

எம்.எஸ். - 13

எம்.எஸ். - 13 எனும் இந்த கொள்ளைக் கூட்டம் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகள் கொடூரமாக இல்லை எனிலும், கொஞ்சம் அருவருப்பாகவும், தொந்தரவு அளிக்கும் வகையிலும் இருக்கிறது.

இந்த கொள்ளைக் கூட்டத்தில் புதியதாக சேரும் நபர்களை, அந்த குழுவில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் 13 நொடிகள் நிற்க வைத்து அடிப்பார்கள். அடிக்க விரும்பாத உறுப்பினர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். 13 நொடிகள் என்பது கடிகாரத்தை வைத்து முடிவு செய்யப்படுவது அல்ல. அவர்களாக வாயால் 13 எண்ணி முடிக்கும் வரை அடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும், இந்த எம்.எஸ். - 13 குழுவில் இருக்கும் நபர்கள் தங்கள் முகத்தில் 'MS 13' என்பதை பச்சைக்குத்தி இருப்பார்கள். இதை ஒரு ஃபேஷனாக கடைப்பிடிக்கிறார்கள். உலகில் பெண்களை கொள்ளைக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் வெகுசில குழுக்களில் இவர்களும் ஒரு குழு ஆவர்.

மேலும், இந்த குழுவில் சேரும் பெண்கள் பல உறுப்பினர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.

ஒருமுறை நியூயார்க் நகரில் இவர்கள் மீது ஒரு அபாயகரமான வழக்கு பதிவானது. அதில், இவர்கள் 15-16வயது நிரம்பிய மூன்று பெண்களை கற்பழித்து பேஸ்பால் மற்றும் அகலமான கத்தி கொண்டு கொலை செய்து சாத்தானுக்கு பலிக் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் இவர்கள் தான் குற்றவாளிகள் என்பது நிரூபணம் ஆனது.

Image © daily star

நைட்ஸ் டெம்பர் கார்டெல்

நைட்ஸ் டெம்பர் கார்டெல்

நைட்ஸ் டெம்பர் கார்டெல் என்றழைக்கப்படும் இந்த கொள்ளைக் குழுவின் சடங்கு முறை துவங்கும் முன் ஒரு மனித குழந்தையின் இதயத்தை புசிக்க வேண்டும். இதன் மூலமாக தங்கள் நேர்மையை, விசுவாசத்தை நிரூபணம் செய்ய வேண்டும். இதே போன்ற சடங்கு முறை லத்தீன் அரசர்கள் மத்தியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதியதாக குழுவில் சேரும் நபர்களை மனித இறைச்சி உண்ண சொல்லி வற்புறுத்துவார்கள்.

Image © guradianlibertyvoice

ஜங்கி பங்கி கிட்ஸ்

ஜங்கி பங்கி கிட்ஸ்

கேப் டவுனில் இருக்கும் பல கூட்டங்களில் இந்த ஜங்கி பங்கி கிட்ஸ் குழுவும் இன்று. இவர்கள் கேப் ஃபிளாட்ஸ் பகுதியில் இருக்கிறார்கள்.இந்த குழுவில் இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் சிறுவர்களையே புதிய உறுப்பினராக சேர்க்கிறார்கள்.

சேர்க்கும் போது குறிப்பிட்ட தொலைவு மூத்த உறுப்பினருடன் அந்த சிறுவன் நடந்தே செல்ல வேண்டும். அப்போது இருபுறமும் நிறைய பேர் நின்றுக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அந்த புதிய உறுப்பினரான சிறுவனை வரவேற்க காத்திருப்பவர்கள் அல்ல. இவர்கள் ஜம்ப் இன் அல்லது பீட் இன் என்று கூறப்படும் சடங்கை செய்ய காத்திருப்பவர்கள். அதாவது அந்த புதிய உறுப்பினர் மீது குதித்து தாக்குவார்கள். ஆயுதங்கள் ஏந்தியும் தாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image © warpedspeed

ரோட்டோ சடங்குகள்!

ரோட்டோ சடங்குகள்!

ரோட்டோ கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவர்கள் புதியதாக தங்கள் குழுவில் சேரும் நபர்களை, முன்னர் குழுவில் இருந்து தவறு செய்த நபரை கொடூரமாக கொலை செய்யும் நிகழ்வை காண வைப்பார்கள். இதன் மூலம் தான் தவறு செய்தால் என்ன தண்டனை தனக்கு கிடைக்கும் என்பதை அவன் உணர முடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

இதில் சிலர் இந்த சடங்குக்கு பயந்தே போலீஸில் தன் சொந்த குழுவை குறித்து புகார் அளித்துவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Image © gigazine

அவுட் லா மோட்டார் சைக்கிள் குழு!

அவுட் லா மோட்டார் சைக்கிள் குழு!

ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ என்பவர் 'விசித்திரமான மற்றும் கொடூரமான அவுட் லா மோட்டார் சைக்கிள் குழு' குறித்த நாவல் எழுத பயணித்த போது, புதிய உறுப்பினர்களை குழுவில் சேர்க்கும் போது சடங்கை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மூத்த உறுப்பினர்களின் சிறுநீர் மற்றும் மலத்தை உண்ண வேண்டும் என்பது அந்த சடங்கு.

Image © Pinterest

யூபிட்ஸுமே!

யூபிட்ஸுமே!

இவர்களது சடங்கு முறையை யாகுஸா என்று அழைக்கிறார்கள். இவர்களது இந்த தண்டனை வழங்கும் சடங்கு முறை பெரிதும் யாராலும் அறியப்படாத ஒன்றாகும். யூபிட்ஸுமே குழுவில் இருக்கும் யாராவது தவறு செய்தது தெரியவந்தால் அவர்களே தங்கள் சிறுவிரலை வெட்டிக் கொள்ள வேண்டும்.

Image © scmp

குடை டெஸ்ட்!

குடை டெஸ்ட்!

நம்பர்ஸ் குழு என்பது தென்னாப்பிரிக்காவின் சிறை குழு ஆகும். இந்த குழுவில் முதல் நிலை - கடை நிலை என பாகுபாடுகள் இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி கேட்கப்படும். அந்த கேள்விக்கு புதிய உறுப்பினர் அளிக்கும் பதில் வைத்தே, குழுவில் அவருக்கான நிலை என்று ஒதுக்கப்படும்.

கேள்வி: மழை பெய்துக் கொண்டிருக்கிறது, ஒரு குடை தான் இருக்கிறது. உன்னுடன் இன்னொரு குழு உறுப்பினர் இருக்கிறார். இப்போது நீ என்ன செய்வாய்?

எளிதான கேள்வியாக இருக்கிறது அல்லாவா.. ஆனால், பதில் கூறும் போது சாதூர்யமாக இருக்க வேண்டும்.

குடையை பகிர்ந்துக் கொள்வேன் என்று கூறினால்... அந்த நபர் ஆண் விபச்சாரியாக ஆக்கப்படுவார். தானும் மழையில் நனைவேன் என்று பதில் கூறினால், சிறையில் இருக்கும் வெள்ளை காவல் அதிகாரியை தாக்க வேண்டும்.

Image © chaostrophic

வானவேடிக்கை!

வானவேடிக்கை!

தைவானில் இருக்கும் பெரும்பாலான குழுக்கள் இந்த சடங்கு முறையை பின்பற்றி வருகிறார்கள். இந்த சடங்கு 1970களில் இருந்து ப பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த சடங்கு புதிய குழு தலைவரை தேர்வு செய்யும் போதே நடத்தப்படுகிறது. விதிகள் மிகவும் சுலபமானவை., பட்டாசுகளை கொண்டு தாக்கும் போது கூட்டத்தில் கடைசி ஆளாக யார் ஒருவன் நின்றுக் கொண்டிருக்கிறானோ அவனே தலைவன்.

Image © riodoce

கொலை!

கொலை!

அமெரிக்க சிறைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆர்யன் பிரதர்ஹூட் என்பவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க சிறையில் இருக்கும் கைதிகளில் இந்த ஆர்யம் பிரதர்ஹூட் உறுப்பினர்கள் வெறும் 0.1%-க்கும் குறைவு தான். ஆனாலும், இவர்கள் 25%-க்கும் மேலான சிறை கைதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று எப்.பி.ஐ. கூறுகிறது. இந்த குழுவில் இணைய வேண்டும் என்றாலே ஒரு ஆளை கொலை செய்ய வேண்டும்.

Image © dailybeast

சீன மூவர்கள்!

சீன மூவர்கள்!

சைனீஸ் ட்ரெய்ட்ஸ் எனப்படும் இந்த ஆசிய கொள்ளைக் குழுவில் ஒரு கொடூரமான சடங்கு முறை பின்பற்றப்படுகிறது. புதியதாக வரும் உறுபினர்கள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியை குடிக்க வேண்டும். ஆனால், அது நீங்கள் கடைகளில் குடிக்கும் ஜூஸ் போல இருக்காது. அதில், முன்னாள் உறுப்பினரின் இரத்தம் கலந்துக் கொடுக்கப்படும்.

Image © Viva-LatiNUS

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Scary Gang Rituals Across the World

The Most Scary Gang Rituals Across the World
Subscribe Newsletter