Just In
- 6 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 9 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 11 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 12 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க ராசிய சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற லூசு கேரக்டர் எதுன்னு நாங்க சொல்றோம்...
நான் பரிபூரணமானவன். எந்த சூழலிலும் சமநிலை பிறழாதவன் என்று சொல்ல எவனாவது திராணி உண்டா. எங்கே வரச்சொல் என்று சவால் விடுகிறது ஜோதிட உலகம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கிறுக்குப் பயபுள்ளய தான் என்று அடித்துக்கூட சொல்கிறது. கடவுளே திருவிறக்கம் செய்தாலும் அவருக்கும் இதேகதிதான் என்று சபதம் வேறு.
கல்யாணம், குழந்தை, வீட்டு யோகம், தொழில் யோகம் இருக்குதான்னு கேட்டு ஊர்ஊரா ஜாதக நோட்டோட அலையிறியே, நீ எப்படிப்பட்டவன் என்று கேட்டுத் தெரிந்து கொண்டதுண்டா. எப்படிக் கேட்பாய். உனக்குத்தான் பெரிய அப்பாடக்கர் என்று நினைப்பாச்சே... உன்னோட ராசியை சொல்லி எப்படிப்பட்டவன்னு கேட்டுப்பாரு.. நீ சும்மா லூசா, சும்மா சும்மா லூசான்னா தெரிஞ்சு போகும்.

ஜோதிடம்
Obsessive Compulsive Disorde OCD கேள்விப்பட்டதுண்டா. இதனோடு தொடர்புடையது தான் Compulsive Behavior. இது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கக்கூடிய நோய். ஒரு செயலை திரும்ப திரும்ப செய்யத் தூண்டும் ஒரு வித்தியாசமான எண்ணச்சுழற்சி. இறுக்கமான பழக்க வழக்கமும், அபாரமான ஈடுபாடும் இதன் குணங்கள். ராசின்னு ஒண்ணு இருக்கிற எல்லா பேர்வழிக்கும் இந்த நோய் ஏதாவது ரூபத்தில் இருக்கும் என்கிறது ஜோதிடம். அப்படியென்றால் 12 ராசிக்காரர்களாகிய உங்களுக்குள்ள உள்ள லூசுப்பயல எப்படிப்பட்டவன்னு பார்க்கலாமா...

மேஷம் (ARIES)
இவர்களைப் பார்க்கும்போது அப்பாவிகள் போல இருப்பார்கள். ஆமா ரொம்ப நல்ல மனுஷங்கெ மாதிரி . கொஞ்சம் முகத்தை உத்துப் பாத்தாவது சொல்லிடலாம்னு அங்கேயும் எந்த சலனுமும் இருக்காது. அந்தளவுக்கு அப்பழுக்கற்றவர்களாகத் தெரிவார்கள். ஆனா வாயைக் கொடுத்தா சிக்கி சின்னாபின்னா ஆக வேண்டியதுதான். அந்தளவுக்கு தத்துவமசி மாதிரி தர்க்கம் பண்ணுவாங்க. இவங்களோட மதிப்பீடுகளும், நடவடிக்கைகளும் கொஞ்சம் ஓவரா இருக்கும். இவங்கட்ட இருக்கிற எண்ணச்சுழற்சி அதீத தர்க்கம்தான்.

ரிஷபம் (TAURUS)
அடுத்தவர்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாத முரடர்கள். கரடு முரடான செயல்களை செய்யும் இவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இவங்களை ஒருவனை தள்ளியும், அவனை இம்சைக்குள்ளாக்கியும் அனுபவிப்பார்கள். இரக்கமற்ற இந்த செயல்கள் அவர்களுக்கு OCD இருப்பதை உணர்த்தும்.
இலங்கைக்கு தீ வைத்தது அனுமானா? பார்வதியா? உண்மைக்கதை என்ன தெரியுமா?

மிதுனம் (GEMINI)
வில்லங்கமான பேர்வழிகள். அடுத்துவர்கள் சரியாக பெறும் எதையும் முழுமையாக விடமாட்டார்கள். அவங்க செய்வதுதான் சரி என்று நினைப்பவர்கள். அந்த சீன்லே இல்லாவிட்டாலும் ஒன்றை பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்து விட்டால் கொலை செய்தாவது பெறக்கூடிய பிடிவாதக்காரர்கள். இல்லையென்றால் தூள்தூளாக உடைத்து விடுவார்கள்.இந்த மாதிரியான சின்னத்தனமான விளையாட்டுத்தான் இவர்களின் மனப்பிறழ்ச்சி...

கடகம் (CANCER)
அடுத்தவரின் அனைத்து முயற்சி மற்றும் வாய்ப்புகளை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்த சந்தேகம்தான் அவர்களின் எண்ணச்சுழற்சி நோய். நாள் முழுவதும் உங்களை பாராட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது உங்களின் கனவுகளையெல்லாம் மழுங்கடிப்பார்கள். இது அடுத்தவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். பரிசோதிக்கிற புத்தி இருக்கே அடேங்கப்பா...

சிம்மம் (LEO)
எல்லோரும் சிங்கமா இருப்பது ரொம்ப கஷ்டம். இந்த ராசிக்காரர்களுக்கு காட்டுராஜாவின் பெயர் இருந்தாலும் இவர்களும் பைத்தியம் புடிச்ச பயபுள்ளயதான். இந்த உலகத்தில் திருப்திகரமான ஒன்று கிடைக்கும் வரை, அப்டியே கடிகாரம் மாதிரி சுத்துவார்கள். அதுவும் ஒரு எண்ணச்சுழற்சி நோய்தான். ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற கோதாவில் இறங்கும் சிம்ம ராசிக்காரர்கள், பைத்தியம்கிறது அவ்வப்போது காட்டிருவாங்கெ.
இந்த ராசிகளுக்கு மறைமுக எதிரிகள் இருப்பார்களாம்... பார்த்து கவனமா இருங்க...

கன்னி (VIRGO)
இருக்கின்ற இந்த 12 ராசிகளில் இது அருவருப்பானதாக பார்க்கப்படுகிறது. இதனோட எண்ணச் சுழற்சி அப்படி இருக்குமாம். இது உணவு எடுத்துக் கொள்வதிலும், பராமரிப்பை பேணுவதிலும் ஒருமாதிரியான கிராக்கு வகையைச் சேர்ந்தது. சாப்பாட்டுல சந்தேகம், உடல்நிலையில் சந்தேகம் இதுதான் இதனோட வியாதி.

துலாம் (LIBRA)
அந்நியன் படத்துல வர்ற அம்பி மாதிரி இந்த ராசிக்காரர்கள். புத்தகத்தை வைத்தே அவர்களை நிர்ப்பந்தித்துக் கொள்வார்கள். சட்ட திட்டங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவார்கள். அதன்படி நடக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே அடங்க மறுப்பார்கள். இப்படி சட்டக் கோமாளிகளா இருந்தா அவங்க துலாம் ராசிக்காரங்கதான்னு கரெக்டா சொல்லிடலாம்.

விருச்சிகம் (SCORPIO)
விசித்திரமான மனிதர்கள். வீட்டுக்குள்ளேயே இந்த மாதிரி மனிதர்களை அதிகம் பார்த்திருக்கலாம். சுத்தம் அதுவும் சூப்பர் சுத்தம்தான் இவங்களோட பர்சனாலிட்டி. ஒழுஙகுமுறைகளை அப்படியே கடைபிடிக்கக்கூடிய ஜென்மங்கள்.வீட்டை விட்டு வெளியேறாத அவர்கள், உள்ளே எதையாவது களைத்துப் போட்டு அதை ஒழுங்குபடுத்திக் கொண்டே இருப்பவர்கள். எப்போதுமே ஒருவர் வெற்றிகரமான சேடிஸ்டாகவும், கொடூரமான மனிதனாகவும் இருக்க முடியாது. புண்படுத்தப்படுத்தியதை விட, சில நேரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் இவர்கள் வெரி Poor...
ஜன்னலை அடைத்து தூங்கினால் கிட்னி செயலிழக்குமாம்... எப்படினு நீங்களே பாருங்க

தனுசு (SAGITTARIUS)
பித்துக்கோழிகளின் ஒட்டுமொத்த குணங்களையும் பொதியாக தூக்கிச் சுமப்பவர்கள். மோசமான பசங்க. அது இதுன்னு இல்லாம எல்லாத்துலயும் ஆர்வம் இருப்பவர்களாக காட்டிப்பாங்க. எல்லாத்தையும் பெறணும்னு தங்களைத்தாங்களே மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்திக்குவாங்க. சண்டையிட்டாவது அடுத்தவர்களுடையது பிடுங்கிக் கொள்ளக்கூடியவர்கள். மொத்தத்தில் இவங்கள் பயங்கரமான விளைவுகளுக்கு தங்களை நிர்ப்பந்தித்துக் கொள்ளக்கூடியவர்கள். ஒரு வேற்றுக்கிரக வாசிகள்னு சொல்லலாம்.

மகரம் (CAPRICORN)
நெகிழ்வற்ற அல்லது மாற்றிக்கொள்ள முடியாத எண்ணச்சுழற்சி நோய் இந்த ராசிக்கு அதிக நெருக்கமாம். ஆக்சுவலா சோம்பேறிகள். எந்த வேலையைக் கொடுத்தாலும் குறித்த நேரத்தில் முடிக்க மாட்டார்கள். தாமதப்படுத்துவதே அவர்களின் இயல்பாக இருக்கும். அதே நேரத்தில் செய்து முடித்த தனது வேலையில் தானே குற்றம் காணக்கூடியவர்கள். அதேமாதிரி அதில் ஏகப்பட்ட குறைகளையும் கண்டுபிடிச்சு, அவங்களை அவங்களே போட்டுக் கொடுத்துக்குவாங்க.. அதாவது செய்த வேலையில் தப்புக் கண்டுபுடிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் இவர்களோட ப்ராப்ளம்

கும்பம் (AQUARIUS)
பாதுகாப்பு பற்றிய கவலை இவர்களுக்கு அதீதமாக இருக்கும். கக்கூஸ்ல மட்டுமில்ல, கால் டவுசர்லயும் இருக்கும். அடிக்கடி அதனை உறுதி செய்து கொள்ள தன்னைத்தானே நிர்ப்பந்தித்துக் கொள்வார்கள். அவங்களோட தனிமையான அந்த உலகத்தில் யாரையும் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டார்கள். வேட்டிய உருவினாலும், குடலை உருவினாலும் இரண்டையும் ஒரேமாதிரி நினைப்பாங்க. ஒரு சின்ன கொசு போனா கூட தப்பிக்க இவங்கட்ட முடியாது. சில பேருடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டும், பிரபலமானவர்களிடம் நெருக்கமும் வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மீனம் (PISCES)
இயல்புக்கு எதிரான சிந்தனை, தேவையற்ற பயம் கொண்டவர்களாக இருப்பார்கள். மூளை கொஞ்சமாத்தான் இருக்கும். ஆனா சிந்தனை பெருசா இருக்கும்.பயம் நிழலாக அவர்களை துரத்திக் கொண்டே இருக்கும். கவலையும், அழுகையுமே அவர்களின் வாழ்முறையாக வைத்திருப்பார்கள். எல்லா விஷயங்களிலும் தலையிடுவார்கள். இயறகைக்கு மாறான சிந்தனைகளோடு வாழ்க்கையை கழிக்கக்கூடியவர்கள். மொத்தத்தில் இவர்கள் துரதிஷ்டசாலிகள். இருந்தாலும் ஒண்ணுதான், இல்லாட்டியும் ஒண்ணுதான்...
வெறும் மூக்கடைப்புக்கு மட்டுமா விக்ஸ்? இன்னும் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? இதோ...
எப்ப காபி குடிச்சாலும் அதுல கொஞ்சம் உப்பு போட்டு குடிங்க... ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...