For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் நடிகைகளின் டாட்டூக்களும், அதன் அர்த்தங்களும்!

|

நம்ம ஊர்களில் பச்சைக் குத்துவது என்பது காலம், காலமாக இருக்கும் கலாச்சாரம். நடுவே 80, 90களில் கலாச்சார மாற்றம், அது இது என கூட இது கொஞ்சம் குறைந்துக் காணப்பட்டது.

இப்போது மீண்டும் கடந்த பத்து வருடங்களாக டாட்டூக் குத்துவது ஃபேஷனாகி வருகிறது. வெறுமென ஏதோவொரு டிசைனை டாட்டூவது குத்துவதற்கு பதிலாக அதற்குள் ஒரு அர்த்தம், ஒரு புதிர் என தற்போதைய இளைஞர்கள் வேறு லெவலில் டாட்டூக்கள் குத்துகிறார்கள்.

இதற்கு திரை பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. தங்களுக்கு பிடித்தவர்கள், பிடித்த விஷயம், காதல் என பல வகைகளில், பல அர்த்தங்கள் கொண்டு டாடூக்கள் தமிழ் நடிகைகள், பிரபலங்கள் சிலரும் குத்தியிருக்கிறார்கள். அவர்களின் டாட்டூக்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் இங்கே பார்க்கலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நயன்தாரா

நயன்தாரா

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி; இன்ப, துன்பங்கள் சம அளவு எதிர்கொண்டவர், கண்டவர் நயன்தாரா. நம்ம வீட்டு பொண்ணு போல அறிமுகமாகி, கிளாமர் குயினாக சில படங்களில் இயக்குனர்களால் மாற்றப்பட்டு, காதல் தோல்விகளை கடந்து தனது திறமையால் இன்று ரசிகர்களாலும், திரை பிரபலங்களாலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழப்படுகிறார் நயன்தாரா. இதற்கு எல்லாம் காரணம் அவரிடம் குறையாமல் இருக்கும் பாசிட்டிவிட்டி தான். அதையே தனது கைகளில் டாட்டூவாக குத்தி இருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன் இவர் பிரபு தேவாவை காதலித்து வந்த போது அவரது பெயரை டாட்டூவாக குத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: 10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

பிக் பாஸ் ஓவியா!

பிக் பாஸ் ஓவியா!

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தார் ஓவியா. அதற்கு காரணம் அவர் உண்மையாக நடந்து கொண்டது தான். பல பேட்டிகளில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது அம்மாவை பிடிக்கும், மேலும் என்னையே எனக்கு மிகவும் பிடிக்கும் என்று செல்ஃப் லவ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பவர் ஓவியா. இதையே தனது டாட்டூ மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் ஓவியா. ஆம், ஓவியா தனது தோளில் தனது முகத்தையே பச்சையாக குத்தியிருக்கிறார்.

சமந்தா!

சமந்தா!

சென்னையில் பிறந்த சமந்தா பானா காத்தாடியில் பெரிதாக கவனம் ஈர்க்க தவறியவர் அதற்கு பின் தெலுங்கில் தஞ்சம் கொண்டார். நீதானே போன் வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா. இவர் தனது முதுகுப்புறம் கழுத்தின் கீழே யு அண்ட் மீ என ஆங்கிலத்தில் பச்சைக் குத்தியுள்ளார். மேலும், இவரும் நாக சைதன்யாவும் தங்கள் கைகளில் ஒரே மாதிரியான சிறிய டாட்டூவும் குத்தியுள்ளனர்.

ஜனனி ஐயர்!

ஜனனி ஐயர்!

நிறைய படங்கள் நடிக்காவிட்டாலும், தான் நடித்த சில படங்களின் கதாபாத்திரங்கள் மூலம் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ஜனனி ஐயர். எதிர்காலத்தில் இவர் நிறைய படங்கள் நடித்து நல்ல நடிகையாக வருவார் என திரையுலகம் எதிர்பார்க்கிறது. ஜனனி தனது கையில் விநாயகர் வடிவில் ஓம் என்ற எழுத்தை பச்சையாக குத்தியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் மகள்!

சூப்பர்ஸ்டார் மகள்!

எதிர்பாராத விதமாக விவாகரத்து பெற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது செல்லமான, பாசமான அப்பா, அம்மா பெயரையே ஆங்கிலத்தில் டாட்டூவாக பெரியளவில் தனது கையில் பச்சையாக குத்தியுள்ளார். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

நிக்கி கல்ராணி!

நிக்கி கல்ராணி!

பெரிதாக ஆராவராம் இல்லாமல் பெரியாளாகி வருகிறார் நிக்கி கல்ராணி. மிடில் ரேஞ்சில் இப்போது இவரை விட்டால் வேறு நடிகைகளே இல்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவர் கோலிவுட்டின் முதன்மை நாயகியாக வளர்ந்துவிடுவார். ஹரஹர மாகதேவகி, மரகத நாணயம் போன்ற படங்களில் இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். நிக்கி தனது முதுகில் தன் தங்கை அர்ச்சனாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருக்கிறார். இது அவர் மீது தான் கொண்டிருக்கும் அன்பின் வெளிபாடு என்றும் கூறுகிறார் நிக்கி.

MOST READ: வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!

ஷ்ருதி ஹாசன்!

ஷ்ருதி ஹாசன்!

அப்பாவை போலவே பன்முக திறமை கொண்டவர் ஷ்ருதி. பபுலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ன. நடிப்பு, இசை, நடனம், பாடல் என அனைத்திற்கும் வெளுத்து வாங்கும் ஷ்ருதி தமிழை காட்டிலும் தெலுங்கில் நல்ல நடிகையாக பெயர் எடுத்துள்ளார். இவர் தனது முதுகில் தனது பெயரையே தமிழில் டாட்டூவாக குத்தியுள்ளார். இதன் மூலம் ஏழாம் அறிவில் வசனமாக மட்டும் பேசாமல், நிஜமாகவே தனக்கு தமிழ் மீது உள்ள பற்றினை வெளிபடுத்தியுள்ளார் ஷ்ருதி.

அமலா பால்!

அமலா பால்!

இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தவர் அமலா பால். நடிப்பு என்பதை தாண்டி அமலா பாலுக்கு பயணங்கள் மேற்கொள்வது என்றால் கொள்ளை பிரியம். தனக்கென ஒரு தனி நட்பு வட்டாரத்தை உருவாக்கி, அவர்களுடன் அவ்வப்போது லூட்டியடிக்க டூர் கிளம்பிவிருவார் அமலா. இவர் தனது முதுகில் பெரியதாக பூ போன்ற ஒரு டிசைனை பச்சைக் குத்தியுள்ளார். மேலும், காலில் ஒருபுறம் இறகு, ஒருமுனையில் இறகு கொண்ட அம்பு ஒன்று ஒரு வட்டத்திற்குள் பாய்ந்து செல்வது போன்ற டிசைனை பச்சைக் குத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil Actresses And Meaning of Their Tattoos!

Tamil Actresses And Meaning of Their Tattoos!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more