For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்திய கிரிக்கெட் வீரர்களின் மூட நம்பிக்கைகள்... கிரவுண்டுல நீங்க இத கவனிச்சிருக்கலாம்...

  By Staff
  |

  மூட நம்பிக்கைகள் அதிகம் பின்பற்றப்படும் நாடு இந்தியா. வண்டிகளில் எலுமிச்சை கட்டி தொங்க விடுவதில் இருந்து. தெருக்களில் தேங்காய் உடைப்பது வரை நாம் எண்ணற்ற பழக்க, வழக்கங்களை ஏன்? எதற்காக? செய்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் செய்து வருகிறோம்.

  சரி! இது நம் இரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. இதை மாற்றுவது கடினம் என்று சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழித்து விடுவோம். நாம் மட்டும் தான் இப்படியான மூட நம்பிக்கைகளை பின்பற்றுகிறோமா? பிரபலங்களாகவே இருந்தாலும் கூட அவர்களும் இந்தியாவில் பிறந்தவர்கள் தானே.

  இதோ! நமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் மைதானத்தில் பின்பற்றி வந்த / பின்பற்றி வரும் சில பழக்க வழக்கங்கள். தாங்கள் பின்பற்றி வரும் இந்த பழக்க வழக்கங்கள் தங்களுக்கு லக் மற்றும் வெற்றியை தேடி தருவதாக இவர்கள் கருதுகிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  விராத் கோலி!

  விராத் கோலி!

  மைதானத்தில் ஆக்ரோஷத்தில் துள்ளிக் குதிக்கும் விராத் கோலி திறமையால் மட்டுமே இத்தனை உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளார் என்பது அனைவரும் கூறும் விஷயம். ஆனால், விராத் கோலியும் ஒரு மூட நம்பிக்கையை பின்பற்றி வருகிறார். மைதானத்தில் ஃபீல்டிங் செய்யும் போது ஒரு கருப்பு நிற பேண்டை அணிந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

  ஆரம்பத்தில் தனது ராசியான க்ளவுஸ் ஒன்றை நீண்ட நாள் பயன்படுத்தி வந்துள்ளார். அதை அணிந்தால் தான் நிறைய ஸ்கோர் செய்வேன் என்ற நம்பிக்கையில் அதை பத்திரமாக வைத்திருந்துள்ளார் விராத் கோலி.

  சச்சின்!

  சச்சின்!

  கடவுளே மூட நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது சற்று அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம்! சச்சினிடமும் ஒரு மூட நம்பிக்கை இருந்துள்ளது. பேட் செய்ய மைதானத்திற்கு செல்லும் முன், முதலில் தனது இடது காலின் கால் காப்பினை கட்டுவதை வழக்கமாக வைத்திருந்தாராம் சச்சின். இதனால் தனக்கு வெற்றி வந்து சேரும் என்று கருதியுள்ளார். அதே போல, முக்கியமான ஆட்டங்களில் பயன்படுத்திய பேட்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் சச்சின்.

  தோனி!

  தோனி!

  தோனி என்றால் ஹெலிகாப்டர் ஷாட், கேப்டன் கூல் நினைவிற்கு வருவது போலவே, அவரது ஜெர்ஸி நம்பரான ஏழும் நினைவிற்கு வரும். வர பிறந்தது ஏழாவது மாதத்தின் ஏழாம் நாளில் என்பதால் ஏழை தனது லக்கி நம்பராக கருதுகிறார். இதனால் தான் தோனி தனது ஜெர்ஸி எண்ணை ஏழாக தேர்வு செய்திருக்கிறார். தோனியின் லக் ஏழு தான்.

  யுவராஜ் சிங்!

  யுவராஜ் சிங்!

  தோனியை போன்ற அதே லக்கை பின்பற்றுகிறார் யுவராஜ் சிங்கும். யுவராஜ் சிங் பிறந்தது ஆண்டின் 12வது மாதத்தின், 12வது நாளில். இதனால் யுவராஜ் 12ம் எண்ணை தனது லக்கி நம்பராக கருதுகிறார்.

  தோனி - யுவராஜ் ஒரு சிறந்த காம்போ. இவர்கள் இவர்களுக்குள் சண்டை இருந்ததாக கூறப்பட்டாலும். 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி வரை கிரீஸில் நின்று இவர்கள் ஆடிய விளையாட்டை எந்நாளும் மறக்க முடியாது.

  அஸ்வின்!

  அஸ்வின்!

  நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார் அஸ்வின் தன்னிடம் ஒரு பை வைத்திருக்கிறாராம். அது அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அணிக்கும் லக் என்று கருதுகிறார்கள். எப்போதெல்லாம் அஸ்வின் அந்த பை எடுத்து வருகிறாரோ அப்போதெல்லாம் அணி வெற்றிப் பெறுகிறதாம்.

  கங்குலி!

  கங்குலி!

  பிசிசிஐயில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கங்குலி இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தில் களமிறங்கும் போது மறக்காமல் தனது பாக்கெட்டில் தனது குருவின் படத்தை வைத்துக் கொள்வாராம்.

  தனது குருவை கடவுளாக கருதிகிறார். அவரது படத்தை உடன் வைத்திருப்பதால் வெற்றி வந்து சேரும். அவரது ஆசி எப்போதுமே தனக்கு கிடைக்கும் என்று கருதினார் கங்குலி.

   ஜாகீர் கான்!

  ஜாகீர் கான்!

  இந்தியாவின் சிறந்த இடது கை பந்துவீச்சாளர். ஜாகீர் கான் போட்டி நாட்களில் தனது பாக்கெட்டில் மஞ்சள் நிற கர்சீப் ஒன்று வைத்துக் கொள்வார். ஒரு போட்டியும் தவறவிடாமல் இந்த பழக்கத்தை ஜாகீர் பின்பற்றி வந்துள்ளார். மைதானத்தில் இந்த கர்சீப் வைத்துக் கொள்வது தனக்கு லக்காக அமையும் என்று கூறியுள்ளார் ஜாகீர்.

  ராகுல்!

  ராகுல்!

  சீனாவிற்கு ஒரு பெருஞ்சுவர் போல, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெருஞ்சுவர் ராகுல். சச்சின் தனது இடது கால் காப்பு கட்டுவதை போல, ராகுல் டிராவிட் தனது வலது தொடை காப்பை கட்டுவதை பழக்கமாக வைத்திருந்தார். மேலும், போட்டியின் போது எப்போதும் புது பேட்டை பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

  அணில் கும்ப்ளே!

  அணில் கும்ப்ளே!

  உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் அணில். இவர் ஒரே போட்டியில் பத்து விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்தவர். அணில் கும்ப்ளேவின் லக் அவரிடம் இல்லை. ஆம்! அணில் கும்ப்ளே தான் பந்து வீச செல்லும் முன்னர் தனது தொப்பி மற்றும் ஸ்வெட் டவலை சச்சினிடம் கொடுத்துவிட்டு சென்றால் விக்கெட் கிடைக்கும் என்று நம்பி வந்துள்ளார்.

  விரேந்திர சேவாக்!

  விரேந்திர சேவாக்!

  உலகன் முன்னணி பந்து வீச்சாளராக இருந்தாலுமே கூட, அவர் வீசும் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது சேவாக்கின் பழக்கம். இந்தியா கண்ட பெரும் அதிரடி வீரர் சேவாக். டெஸ்ட் போட்டிகளிலும் நூற்றுக்கும் மேலான ஸ்ட்ரைக் ரேட் கொண்டு, சதம், இரட்டை சதங்கள் அடித்தவர் சேவாக்.

  சேவாக் ஆரம்பத்தில் 44 என்ற ஜெர்ஸி நம்பர் பயன்படுத்தி வந்தார். ஆனால், அது ராசியாக இல்லை என்று ஜோதிடர் கூறிய காரணத்தால் நம்பர் அற்ற ஜெர்ஸி பயன்படுத்த துவங்கினார் சேவாக்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Superstitions Of Indian Cricketers

  Bizarre Superstitions Of Indian Cricketers That You believe But They Thinking Those Things are Brings Them Success!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more