For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் பற்றிய திகைப்பூட்டும் 10 தகவல்கள்!

  By Staff
  |

  18 வருடங்களுக்கு முன் ரஷ்யாவிற்கு ஆஜானுபாகுவான பிரதமர் தேர்வானார். அப்போது அவருக்கு வயது 47 வயது.

  உலக வரலாற்றில், உலக அரசியலில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அன்று பெருந்தலைவர்கள் யாரும் கருதியிருக்க மாட்டார்கள்.

  புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டக்கூடிய நபர் புதின். பனிச்சறுக்கு, ஐஸ்ஹாக்கி, தற்காப்பு கலைகள், விலங்குகள் பாதுகாப்பு என ஒரு சூப்பர் ஹீரோ போல வாழ்ந்து வருகிறார் விளாடிமர் புதின்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  20 கிலோ மீன்!

  20 கிலோ மீன்!

  2013ம் ஆண்டு சைபீரியாவிற்கு மீன்பிடி பயணம் மேற்கொண்டிருந்த புதின் இருபது கிலோ எடைக் கொண்டிருந்த பைக் (Pike) வகை மீனை பிடித்திருந்தார். இந்த வகை மீனில் இது உலகளவில் மிகப்பெரியது என்றும் கூறப்பட்டது.

  ஆனால், செய்தி வெளியான பிறகு, மீன்பிடிப்பவர்கள் சிலர், புதின் வெளியிட்ட படம், வீடியோக்களில் உள்ள மீன் அவ்வளவு எடை இருக்க வாய்ப்பில்லை. அதில் பாதிதான் இருக்கும் என்ற கருத்தையும் வெளியிட்டனர்.

  Image Source: eng.putin.kremlin.ru

  இந்தியானா ஜோன்ஸ்!

  இந்தியானா ஜோன்ஸ்!

  அகழ்வாராய்ச்சி ஆர்வம் கொண்ட புதின் 2011ல் கருங்கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்த போது பண்டையக் காலத்து கிரேக்க தாழியை கண்டுபிடித்தார் என்று செய்திகள் வெளியாகின. பிறகு அந்த செய்தி பின்வாங்கப்பட்டது.

  விலங்குகள்!

  விலங்குகள்!

  புதின் அழிந்துவரும் நிலையில் இருக்கும் விலங்குகளை பாதுகாப்பதிலும், காப்பாற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக தான் இவர் கடந்த ஏப்ரல் 2010-ன் போது ஒரு பனிக்கரடிக்கு புதின் சாட்டிலைட் டிராக்கிங் டிவைஸ் பொருத்தும் படம் மிகவும் வைரலானது.

  மேலும், புலி, சிறுத்தை, கரடி, திமிங்கலம் என பல உயிரினங்களை காப்பாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார் புதின். அதற்காக சில திட்டங்களும், பிராஜக்ட்டுகளும் கூட வரையறுத்து வைத்துள்ளார்.

  Image Source: eng.putin.kremlin.ru

  தப்பாத குறி!

  தப்பாத குறி!

  கடல் உயிரியலாளர்களுடன் கடந்த 2010ல் ஆய்வுக்கு சென்றிருந்த போது, Crossbow (வில், அம்பு போன்றது) எனப்படும் குறிவைத்து தாக்கும் கருவியின் மூலம் சாம்பல் நிற திமிங்கலத்தை சரியாக தாக்கி பிடித்தார். இதன் மூலம் கடல் உயிரியலாளர்கள் அதன் தோலை வைத்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

  மேலும், அவரது அந்த குறியானது பர்பெக்ட்டுக்கும் மேலானது என்று புகழ்ந்தனர். புதின் இது குறித்து கூறிய போது, "நான் நான்காவது முயற்சியில், அதை வீழ்த்தினேன்" என்று கூறியிருந்தார்.

  தைரியம்!

  தைரியம்!

  2008ல் உஸ்சூரி வனவிலங்கு ரிசர்வ் பகுதியில் இவரை பின்தொடர்ந்து வந்த கேமரா குழுவை பெண்புலி ஒன்று திடீரென தாக்க முற்பட்டது. அப்போது தானாக இடையே தலையிட்டு அவர்களை காப்பாற்றினார் புதின்.

  உடைந்த கப்பல்!

  உடைந்த கப்பல்!

  2013ல் புதின் நீர்மூழ்கிக் கப்பலில் பின்லாந்து வளைகுடா பகுதிக்கு சென்று, அங்கே 200 அடி ஆழத்தில் விபத்தில் சிக்கி உடைந்திருந்த 140 வருட பழைய கப்பல் ஒன்றை காண நீந்தி சென்றார்.

  ஹாக்கி வீரர்!

  ஹாக்கி வீரர்!

  ஐஸ் - ஹாக்கி விளையாடுவதி புதினுக்கு விருப்பம் இருக்கிறது. பிப்ரவரி 2011ல் ஒரு ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார் புதின். ஆரம்பத்தில் என்னால் இதில் பங்குபெற முடியாது என்று கருதினேன். நான் ஒரே ஒரு முறை தான் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்தேன்." என்று கூறியிருந்தார்.

  ஒரு முறை ரஷ்ய தேசிய ஐஸ் ஹாக்கி கோலியுடன் விளையாடி கோல் அடித்தும் இருக்கிறார் ரஷ்ய பிரதமர் புதின்.

  Image Source: eng.putin.kremlin.ru

  தற்காப்பு கலை!

  தற்காப்பு கலை!

  புதின் இரண்டு தற்காப்பு கலைகள் பயின்றவர். கே.ஜி.பி/எப்.எஸ்.பியின் சாம்போ தற்காப்பு கலை பயின்றிருக்கிறார் புதின். இது ரஷ்யாவின் தற்காப்பு கலை எனப்படுகிறது. மேலும், கடந்த 2012ல் ஜூடோ எனப்படும் தற்காப்பு கலையின் உயர்ரக கிரேடானா எட்டாவது டான் (8th Dan) தகுதியை அடைந்தார் புதின். இந்த தகுதியை சர்வதேச ஜூடோ ஃபெடரேஷன் இவருக்கு அளித்தது.

  Image Source: eng.putin.kremlin.ru

  பனிச்சறுக்கு!

  பனிச்சறுக்கு!

  பனிச்சறுக்கில் ஈடுபடுவது என்பது புதினுக்கு பிடித்த செயல். தான் பனிச்சறுக்கு விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன் என்று புதினே கூறியிருக்கிறார்.

  "இதுவொரு சக்தி வாய்ந்த விளையாட்டு. இந்த விளையாட்டை ஆடவேண்டும் என்றால் நிறைய நுணுக்கங்கள், டெக்னிக் அறிந்திருக்க வேண்டும். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள, எனர்ஜி அதிகரித்துக் கொள்ள இதுவொரு சிறந்த விளையாட்டு" என்று புதின் கூறியுள்ளார்.

  Image Source: eng.putin.kremlin.ru

  குதிரை ஏற்றம்!

  குதிரை ஏற்றம்!

  புதினுக்கு பிடித்தவற்றில் ஒன்று குதிரை ஏற்றம். 2009 ஆகஸ்ட் 3ம் நாள் இவர் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு துவா (Tuva) எனும் பகுதிக்கு சென்று ஒரு நாள் குதிரை ஏற்றம் செய்து வந்துள்ளார். மேலும், தனது ஓய்வு நேரத்தில் குதிரையில் காட்டுக்குள் பயணித்து, தேநீர் பருகி, அங்கேயே சமைத்து உண்டு திரும்புவது புதினுக்கு பிடித்த செயலாம்.

  இது போல காற்றாற்றில் படகு பயணம் செய்வதும் புதினுக்கு பிடித்த விஷயமாகும்.

  Image Source: eng.putin.kremlin.ru

  கார்!

  கார்!

  பிரதமராக இருந்தாலும் கூட, தானே கார் ஓட்டிச் செல்வதை மிகவும் விரும்பும் நபர் புதின். முதல் முறையாக பபுதினுக்கு அவர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, அவரது அம்மா லாட்டரி சீட்டில் வென்ற பணத்தை கொண்டு ஒரு கார் வாங்கிக் கொடுத்தார்.

  எப்போதும் ரஷ்ய கார்களை பயன்படுத்துவதிலேயே புதின் ஆர்வம் காட்டுகிறார்.

  Image Source: eng.putin.kremlin.ru

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Super Facts About Russian Prime Minister Vladimir Putin!

  Super Facts About Russian Prime Minister Vladimir Putin!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more