For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து மதத்தினரும் வழிபடும் ஷீரடி சாய்பாபா உண்மையில் எந்த மதத்தை சேர்ந்தவர் தெரியுமா?

|

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வழிபட்டு கொண்டிருப்பவர் ஷீரடி சாய் பாபா. மற்ற மத கடவுள்களுக்கு இணையாக சாய் பாபவிற்கு பக்தர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய ஒரு கடவுளாக ஷீரடி சாய்பாபா விளங்குகிறார். எந்த மதத்தையும் சார்ந்திராத அவரைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்ச்சை எழுந்தது. அது என்னவெனில் அவர் இஸ்லாமியர் என்றும் அதனால் அவரை இந்து கோவில்களில் வணங்கக்கூடாது என்றும் சில சாமியார்கள் கூற தொடங்கினர்.

Shirdi Sai Baba belongs to which religion

ஆனால் மதங்களை கடந்து சாய் பாபாவை வணங்குவதை யாரும் நிறுத்தவில்லை, நிறுத்தப்போவதும் இல்லை. எந்த மதக்கடவுளும் எந்த மதித்தனர் தன்னை வணங்குகிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு அருள்புரிவதில்லை. ஆனால் இப்படி சர்ச்சையை கிளப்புவதற்காகவே காத்திருக்கும் சிலருக்கு நாம் பதில் சொல்லி வாயை அடைக்க வேண்டியுள்ளது. எனவே மதங்களை கடந்த மனித நேயமிக்க ஷீரடி சாய் பாபா எந்த மதத்தை சார்ந்தவர் என்ற வரலாற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாய்பாபாவின் பிறப்பு

சாய்பாபாவின் பிறப்பு

சாய்பாபாவின் ஆரம்ப கால வாழக்கை இன்னும் மர்மமாகவே உள்ளது. அவரின் பிறப்பு பற்றியோ அல்லது அவரின் பெற்றோர்கள் பற்றியோ எந்தவித குறிப்புகளும் இல்லை. தற்போதிருக்கும் குறிப்புகளின் படி 1838 முதல் 1842 க்கு இடைப்பட்ட காலத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் இருக்கும் பாத்ரி என்னும் இடத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது.

ஷீரடி வருகை

ஷீரடி வருகை

சாய்பாபா ஷீரடிக்கு வந்தபொது எந்தவித அடையாளமோ, பெயரோ இல்லாமல்தான் வந்தார் என்று கூறப்படுகிறது. அவர் தலையில் ஒரு தலைப்பாகையை கட்டிக்கொண்டும், தாடி வைத்துக்கொண்டும் வந்தார். நீண்ட தளர்வான உடையை அணிந்திருந்தார். அவர் ஒரு சிறந்த பகிர் போல காட்சியளித்தார். அவர் கிராமத்திற்கு வெளியே இருந்த காட்டிற்குள் வசித்ததாகவும், பெரும்பாலும் தியானத்தில்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறார். அவரின் புனிதமான தோற்றத்தை கண்டு மக்கள் அவருக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது.

இந்து-முஸ்லீம் ஒற்றுமை சின்னம்

இந்து-முஸ்லீம் ஒற்றுமை சின்னம்

சில காலங்கள் காடுகளில் வசித்துவிட்டு அவர் மசூதி போன்ற ஒரு இடத்தை திறந்தார். அதற்கு " துவார்கர்மை " என்று பெயர் வைத்தார். துவாரகை என்பது கிருஷ்ணர் வாழ்ந்த இடம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் மூலம் அவர் இந்துவா? முஸ்லீமா? என்று புரியாமல் மக்கள் குழம்பினர்.

முஸ்லீம் அறிவுரைகள்

முஸ்லீம் அறிவுரைகள்

ஷீரடி சாயின் முக்கிய கொள்கை என்னவெனில் " சப்கா மாலிக் ஏக் " அதாவது " ஒரே கடவுள்தான் அனைவரையும் கட்டுப்படுத்துகிறார் " என்பது இதன் பொருளாகும். இது இஸ்லாம் மற்றும் சூபிஸத்துடன் தொடர்புடையது. இவர் அடிக்கடி கூறும் மற்றொரு சொல் " அல்லாஹ் மாலிக் " அதாவது " கடவுளே அரசன் " என்பதும் சூபி முஸ்லிம்களின் கூற்றாகும்.

MOST READ: இந்த ரஜினிய கொண்டாடாம இருக்க முடியுமா? - # Rajini Birthday Special

இந்து சகாக்களின் மரியாதை

இந்து சகாக்களின் மரியாதை

இந்து மத குரு ஆனந்தநாத் சாய்பாபாவை ஆன்மீகத்திற்கு கிடைத்த " வைரம் " என்று கூறினார். மற்றொரு மதகுரு கங்காகிர் அவரை ஆன்மீகத்தின் ஆபரணம் என்று கூறினார். ஸ்ரீ பீத்கர் மகாராஜ் சாய்பாபாவை " ஜகதகுரு " என்று கூறினார். வாசுதேவன்தாச சரஸ்வதி மற்றும் சிவயோகிகள் சாய்பாபாவை கொண்டாடினர்.

மற்ற மதத்தினரின் மரியாதை

மற்ற மதத்தினரின் மரியாதை

சூபி முஸ்லீம்கள் சாய்பாபாவை சூபி பகீராக நினைத்தனர். பார்சி இனத்தவர்களும் சாய் பாபாவை கொண்டாடினர். அவர்களின் மதகுருவான மெஹர் பாபா கூறும்போது சாய்பாபாவை ஷீரடியில் சந்தித்த சில நிமிடங்கள்தான் தன்னை ஆன்மீக பாதைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.

மதங்களை கடந்தவர்

மதங்களை கடந்தவர்

அவர் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவுவதற்காக தன் சக்திகளை பயன்படுத்தினார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஷீரடி மடத்திற்குள் அவர் அமர்ந்தவுடன் அவரின் கருணை அனைத்து திசைகளிலும் பரவியது. நாள்தோறும் அவரின் அருளைப்பெற அனைத்து மக்களும் ஷீரடியை நோக்கி படையெடுத்தனர். இப்படித்தான் அந்த சாதாரண கிராமம் இவ்வளவு பெரிய இடமாக மாறியது.

கடவுளை அடையும் வழி

கடவுளை அடையும் வழி

சாய்பாபா அவர்கள் தன்னிடம் வரும் அனைவருக்கும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதை விட அவர்களுக்கு கடவுளை அடையும் வழியையே காட்டினார். மேலும் பிற உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்று அனைவருக்கும் போதித்தார்.

MOST READ: குழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன்? அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்?

அதிசய மனிதர்

அதிசய மனிதர்

சாய்பாபவின் வாழ்க்கையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் அவர் எப்பொழுதும் மக்களை மதத்தை வைத்தோ, சாதி அல்லது அவர்களின் நிலையை வைத்தோ ஒதுக்கியதே இல்லை. ஏழை மக்களின் துன்பங்களை போக்க அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார். அதில் சில அற்புதங்கள், கண் தெரியாத ஒரு முதியவருக்கு மீண்டும் கண்பார்வையை வரவைத்தார். தண்ணீரில் விளக்கேற்றி மக்கள் வாழ்க்கையை ஒளிர செய்தார்.

எளிமையான வாழ்க்கை

எளிமையான வாழ்க்கை

இன்று சாய்பாபாவின் கோவில்கள் அரண்மணை போல காட்சியளிக்கிறது. அவரது கோவில்களில் அவருக்கு கிரீடங்கள் கூட வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் உயிருடன் வாழ்ந்தபோது மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார், ஒரு கிழிந்த துணியைத்தான் அணிந்திருந்தார், பாயில்தான் உறங்குவார், தலையணைக்கு பதில் ரூ செங்கலத்தைத்தான் வைத்திருப்பார், கிடைத்த உணவு எதுவாக இருந்தாலும் உண்பார்.

அமைதி மற்றும் புரிந்துணர்வு

அமைதி மற்றும் புரிந்துணர்வு

அவரின் முகத்தில் எப்பொழுதும் ஒரு தெய்வீக சிரிப்பு இருக்கும், அவரின் கண்களில் ஒரு அமைதி எப்போதும் குடிகொண்டிருக்கும். மற்றவர்களின் மனதை படிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக அவர் இருந்தார், தன்னை பார்க்க வருபவர்களின் மனசஞ்சலங்களை அவர்களின் முகத்தை பார்த்தே கண்டறிந்து விடுவார்.

மதம்

மதம்

தன் மடத்திற்கு துவாரகர்மை என்று பெயர் வைத்தவர், அல்லாஹ் மாலிக் என்று எப்போது உச்சரித்தவர். ஆன்மீக பாதைக்கான சிறந்த வழிகாட்டியான அவரின் வாழ்க்கை உணர்த்துவது என்னவெனில் அனைத்து ஆன்மீக பாதைகளும் ஒரே கடவுளை நோக்கியே நம்மை இழுத்து செல்லும் என்பதுதான். மதங்களை கடந்த ஒரு மஹாத்மாதான் ஷீரடி சாய்பாபா.

MOST READ: சனி, ராகு, கேது மூன்றுபேருமே உங்கள் ராசிக்கு வரும்போது நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shirdi Sai Baba belongs to which religion

Shirdi Sai Baba has a million of followers from all religions. But no one knows he belongs to which religion actually.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more