For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

|

பயணம் யாருக்கு தான் பிடிக்காது.. அதுவும் சுற்றுலா என்றால் சொல்லவா வேண்டும்... சிலருக்கு ஹோட்டல் எடுத்து தங்குவதே ஒரு அலாதி பிரியம் தான் .

ஹோட்டலுக்குள் சென்றதும் அந்த ஃபிரஷ் காற்று, புதியது போல அமைக்கப்பட்டிருக்கும் அறை என குதுகலமாக இருக்கும். சிலர் மெத்து, மெத்தென இருக்கும் அந்த ஹோட்டல் மெத்தையில் ஏறி குதித்தும் விளையாடுவதுண்டு. இதற்கு எல்லாம் வயது வித்தியாசமே இல்லை.

ஆனால், நீங்கள் பார்ப்பவை எல்லாம் சுத்தமானவை அல்ல, உண்மையானவை அல்ல... ஒவ்வொரு ஹோட்டல் அறையிலும் ஏதேனும் ஒரு இரகசியம் பூட்டப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சில படப்பிடிப்புகள் நடக்கும் போது ஸ்டார் ஹோட்டல்களில் தான் ரூம் புக் செய்யப்படும். அதும் பல்க் புக்கிங் தான் செய்வார்கள். நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் போக உதவியாளர்களுக்கும் அங்கேயே தான் அறைகள் புக் செய்வார்கள்.

இதில் பிரபலங்கள் கூட இயல்பாக தான் நடந்துக் கொள்வார்கள், ஆனால், உடன் இருக்கும் எடுபிடிகள் தொல்லை தான் தாங்க இயலாது. அவர்கள் செய்யும் அலப்பறையில் வேறு அறையில் தங்கி இருக்கும் விருந்தாளிகளுக்கும் தொந்தரவாக இருக்கும். ஆனால், அந்த பிரபலதிற்காக இவர்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

#2

#2

வெளியூர் சென்று ஒரு நல்ல ஹோட்டலில் அறை புக் செய்து, உள்ளே சென்றவுடன் நாம் அனைவரும் செய்யும் விஷயம்... பொத்தென்று அந்த படுக்கையில் விழுந்து களைப்பை போக்குவது தான். சிலர், உடல் அசதியாக இருந்தால், சின்ன குளியல் போட்டுவிட்டு வந்து கொஞ்ச நேரம் அசதி தீர ஓய்வெடுப்பார்கள்.

ஆனால், ஹோட்டல்களில் நடக்கும் சங்கதி என்னவெனில், மெத்தை விரிப்புகளை உடனுக்குடன் தினமும் துவைக்க மாட்டார்களாம். சில சமயம், ஒரு விருந்தாளி அறையை காலி செய்த பிறகு, மற்றொருவர் தங்க வருகிறார் என்றால், இடைப்பட்ட நேரத்தில் வெறும் 30 நிமிடங்கள் தான் பணியாளர்களுக்கு சுத்தம் செய்ய நேரம் கிடைக்குமாம். இந்த நேரத்தில், கசகசவென கிடப்பதை நீட் செய்ய தான் முடியுமே தவிர, துவைத்து காய வைக்க சுத்தம் செய்ய நேரம் இருக்காது என்று கூறுகிறார்கள்.

வெகு சில ஹோட்டல்கள் மட்டுமே ஒவ்வொரு அறைக்கும் ஸ்பேர் போர்வை, மெத்தை விரிப்புகள் வைத்திருப்பார்கள். பல ஹோட்டல்களில் அறைக்கு ஒரு செட் என்ற விதம் தான் இருக்கும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள் ஸ்ப்ரே அடிக்கப்பட்டவையாக இருக்குமே தவிர, சுத்தமானதாக இருக்க வாய்ப்பில்லை.

#3

#3

பெரும்பாலும் வேலை விஷயமாகவும், வெளியூர் சுற்றுலா செல்பவர்களும் தான் ஹோட்டலில் அறையெடுத்து தங்குவார்கள். ஆனால், மன அழுத்தம் காரணாமாக, வீட்டில் சண்டைப் போட்டுக் கொண்டு ஊரைவிட்டு வந்தவர்களும் ஹோட்டலில் அறையெடுத்து தங்க வாய்ப்புகள் உண்டு.

ஒரு ஹோட்டல் பணியாளர், "அந்த சம்பவம் நடந்த அடுத்த ஆறு மாதத்திற்குள் நான் அங்கிருந்து வேலையை விட்டு வந்துவிட்டேன். ஓர் அறையில் தங்கி இருந்த விருந்தாளி யாரும் எதிர்பாராதவிதமாக தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார். அறையை சுத்தம் செய்ய சென்ற பணிப்பெண் தான் இதை முதலில் பார்த்தார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், பெயர் கெட்டுவிடும், பிறர் வர தயங்குவார்கள் என்று கருதிய மேனேஜர் சத்தமில்லாமல் போலீஸை அழைத்து, காதும், காதும் வைத்தப்பாடு பாடியை எடுத்து செல்ல கூறிவிட்டார்.

இப்படி ஒரு மரணம் நடந்ததாக மற்ற அறையில் தங்கி இருந்தவர்களுக்கு தெரியாது. மக்களுக்கு தெரியாது என்றாலும், அதே அறையில் வேறு சிலர் வந்து தங்கும், அங்கே சென்று வேலை செய்ய எனக்கு மிகவும் பயமாக இருந்தது.

பெருமளவு அந்த அறையை யாருக்கும் ஒதுக்க மாட்டோம். ஹோட்டலின் எல்லா அறைகளும் நிறைந்தவிட்டால், வேறு வழியின்றி அந்த அறையை தர வேண்டிய சூழல் நேரிடும். இதனாலேயே, அங்கிருந்து நான் வேலையை விட்டு வந்துவிட்டேன்.

MOST READ: வாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்!

#4

#4

சில உயர்தர ஹோட்டல்களில் நீர் அருந்த, தேநீர் அருந்த, மதுபானம் அருந்த என தனிதனி கோப்பைகள் அறைகளில் இருக்கும். இதில், எல்லா கோப்பைகளும் பயன்படுத்தியிருக்க மாட்டாது.

எனவே, பயன்படுத்திய கோப்பைகளை தவிர, இதர கோப்பைகளை வெறும் நீரில் அலசி அப்படியே துடைத்து வைத்துவிடுவார்கள். ஆகவே, அவை நீங்கள் கருதும் அளவிற்கு சுத்தமாக இருக்காது. ஆனால், வேறுவழியின்றி நீங்கள் அதை தான் பயன்படுத்தியாக வேண்டும்.

#5

#5

சில விருந்தாளிகள் வேறு வேலைக்காகவும் அறைகள் எடுத்து தங்குவார்கள். அவர்கள் முடிந்த வரை அவர்கள் தம்பதி போல காண்பித்து கொள்ள கடினமாக நடிப்பார்கள். ஆனால், செய்கைகளை வைத்தே அவர்கள் யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று எங்களால் கண்டறிந்துவிட முடியும்.

எங்களுக்கு தேவை அறைகள் நிறைய வேண்டும், ஆட்கள் வரவேண்டும். முடிந்த வரை அபாயமான நபர்களாக தெரிந்தால், முதல் பார்வையிலேயே சந்தேகம் எழும்படியாக இருந்தால், ஹோட்டலில் அறைகள் காலியாக இருந்தாலும், அறைகள் இல்லை என்று கூறி அனுப்பிவிடுவோம்.

இதில், செக்ஸ்காக மட்டும் வந்து செல்வோரும் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிவது சுலபம். ஆனால், அதை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும், எங்களுக்கு பிஸ்னஸ் நடக்க வேண்டும் அது மட்டும் தான் கவனத்தில் கொண்டிருப்போம்.

#6

#6

நீங்கள் தங்கி இருக்கும் அறையில் சிலர் இருந்து சென்றிருக்கலாம், சிலர் இறந்து சென்றிருக்கலாம். தற்கொலை மட்டுமல்ல, விபத்து, உடல்நலக் குறைபாடு, காதல் விவகாரம்... ஏன் சில ஹோட்டல் அறைகளில் கொலைகள் கூட நடந்திருக்கும்.

பெரும்பாலும், இந்த செய்திகள் எல்லாம் ஹோட்டலில் பணியாற்றும் வேலை காரர்களுக்கும், மேனஜர்களுக்கும் மட்டும் தான் தெரியும். எனவே, பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் ஏதேனும் ஒரு இரகசியம் பூட்டப்பட்டிருக்கும். அதை அறிந்துக் கொண்டால் உங்களால் அந்த அறையில் நிம்மதியாக தங்க இயலாது.

#7

#7

சில ஸ்டார் ஹோட்டல்களில் தனித்தனி அறையில் ஒரு மினி பார் செட்டப் இருக்கும். அதாவது ஒரு ஃப்ரீசரில் தேவையான பீர், மதுபானம், கோப்பைகள், சோடா போன்றவை நிரப்பப்பட்டிருக்கும்.

ஆனால், ஹோட்டல் பணியாளர்கள், உங்களுக்கு மதுவருந்த வேண்டும் எனில், ஹோட்டலில் இருக்கும் பாருக்கு சென்று அருந்துவதே சரியான தேர்வு, மினி பார் செட்டப்பை முற்றிலுமாக சரிபார்க்க வாய்ப்புகள் கிடைக்காது.

சில சமயம் அவை பழைய மதுபானமாக இருக்கலாம். சில சமயம், முன்னாடி தங்கி இருந்த விருந்தாளிகள் கொஞ்சம் பருகிவிட்டு அதில் வேறு எதையாவது கலந்து வைத்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இது தவிர்க்க வேண்டிய ஒன்று.

#8

#8

ஹோட்டலில் பணியாற்றும் நபர்கள் எல்லாம் மிகவும் கனிவானவர்கள், அவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள் என்று நீங்கள் கருதலாம். ஆனால், அப்படி இல்லை. பெரும்பாலும் ஹோட்டல்களில் பணியாற்றும் நபர்களுக்கு குறைவான ஊதியம் தான் இருக்கும்.

எனவே, அவர்கள் கைவசம் இரண்டு வேலைகள் வைத்திருப்பார்கள். இன்று மாத சம்பளம், மற்றொன்று வரும் விருந்தாளிகளிடம் இருந்து சம்பாதிப்பது. அவர்களுக்கு கார் புக் செய்து தருவது, ஊரை சுற்றி பார்க்க தங்களுக்கு தெரிந்த கைடுகளை ஏற்பாடு செய்து கொடுப்பது என பல வேலைகள் செய்து வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு உங்களால் ஒரு கமிஷன் சென்றுக் கொண்டிருக்கும்.

#9

#9

ஹோட்டலில் பணிபுரியும் நபர்கள் நினைத்தால், இலவச சலுகைகள் ஏற்பாடு செய்யலாம். பெரும்பாலும் ஹோட்டலில் நீங்கள் புக் செய்யும் அனைத்தும் காசாக தான் இருக்கும். ஒரு வாட்டார் பாட்டில் ஆர்டர் செய்தாலும் கூட, அது வெளியே விற்கப்படும் பணத்தை காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கும்.

ஆனால், சில சமயம் பெரிய ஹோட்டல்களில் நிறைய பிரமோஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அந்த பொருட்களை பணியாளர்கள் அனைத்து விருந்தாளிகளுக்கும் தரமாட்டார்கள், தங்களிடம் கனிவாக நடந்துக் கொள்ளும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

MOST READ: காபி உங்களுக்கு பிடிக்குமா? அப்போ தினமும் 7 கப் குடிங்க... ஏன்னு தெரியுமா?

#10

#10

முடிந்த வரை ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுடன் சுமூகமாக நடந்துக் கொண்டால், அதிக பயன்கள் பெற வாய்ப்புகள் உண்டு. நீங்களாக ஏதேனும் அதிக செலவு செய்ய நேரிட்டாலும், அதை குறைத்துக் கொள்ள உதவுவார்கள், தெரிந்த கார் ஓட்டுனர்களை குறைந்த செலவில் ஏற்பாடு செய்துக் கொடுப்பார்கள். சில சமயம் இலவசங்கள் கூட கிடைக்கும். மேலும், ஆபர்களை உங்களுக்காக ஏற்பாடு செய்துக் கொடுப்பார்கள். இதை எல்லாம் மேலாளரின் உத்தரவு இன்றியே கூட அவர்கள் உங்களுக்காக செய்துக் கொடுக்கலாம்.

#11

#11

ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டால் ஹைஜீனிக்கான உணவு கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால்... அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. அங்கே தான் வாரத்திற்கு வேண்டிய பொருட்கள் ஒரே நாளில் வாங்கி வந்து ஃப்ரீசர்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

மேலும், சில அவரசர் தேவைக்கான உணவுகளை, சூப் போன்றவற்றை முன்னாடியே ப்ரீ-பிரிப்பேர் செய்து ஃப்ரீசரில் வைத்துவிடுவார்கள். பிறகு விருந்தாளிகள் ஆர்டர் செய்யும் போது, அதை சுடு தண்ணியில் கலந்து, மேற்படி தூவல்களை போட்டு சுடசுட கொடுத்துவிடுவார்கள்.

இப்படி, உணவுகளில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.

#12

#12

முடிந்த வரை வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் சொந்த டவலை பயன்படுத்துங்கள். ஹோட்டல் டவல்கள் எல்லா சமயங்களில் துவைத்தாக இருக்காது. சில சமயம், சில நாட்கள் பக்கத்து அறையில் இருந்த டவல்கள் கூட உங்கள் அறைக்கு அவசர தேவைக்காக மாற்றி வைக்கப்படலாம், ஸ்மெல் வராமல் இருக்க ரூம் ஃபிரஷ்னர் பயன்படுத்துவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Hotel Staff Workers Reveals Shocking Facts!

If you *do* decide to stay in a hotel in the future, let these stories be a warning so you and your family can be prepared. Read here the Secret Confessions, that Hotel Staff Workers Reveals.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more