நள்ளிரவு 3 மணி வரை ஐஸ்வர்யா ராய் வீட்டில் என்ன செய்தார் சல்மான்? டாப் 6 சர்ச்சைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

சல்மானை கான் என்று அழைப்பதை காட்டிலும், இவரை சர்ச்சை கான் என்று அழைக்கலாம். உயந்த அளவிற்கு இந்தியாவில் எந்த ஒரு நடிகர் மீதும் சர்ச்சைகள் எழுந்தது இல்லை. சிம்புவை காட்டிலும் அதிக சர்ச்சையில் சிக்கிய நடிகர் சல்மான் கான்.

வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு, அரியவகை மானை வேட்டையாடியது, விடிய, விடிய ஐஸ்வர்யா ராய் வீட்டில் காலிங் பெல் அடித்தது, விவேக் ஓபராயை மிரட்டியது, கத்ரீனா கைப் பிறந்தநாள் பார்ட்டியில் தகராறு என சல்மான் கான் சர்ச்சைகள் என்று எடுத்துப் பார்த்தால் பெரிய பட்டியலே நீள்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேட்டை!

வேட்டை!

1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹேன் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது சல்மான் கான், சோனாலி பிந்த்ரே மற்றும் சயப் அலிகான் அரியவகை BlackBuck ரக மானை வேட்டையாடினார்கள். இந்த மானை வேட்டையாட தடை இருந்தது. மேலும், இந்தியாவின் பாரம்பரிய மான் வகையான இது, அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலிலும் இருந்தது.

வழக்கு!

வழக்கு!

மான் வேட்டையாடப்பட்ட கிராம மக்கள் இந்த ரக மான்களை பாதுகாத்து வந்தனர். பின்னர் இது சார்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில் சல்மான் கான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இருபது ஆண்டுகள் கழிந்து சல்மான் கானுக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இன்னும் சில நாட்களில் இவர் பெயிலில் வெளியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆத்திர, ஆத்திரமான காதல்!

ஆத்திர, ஆத்திரமான காதல்!

சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் முன்னொரு காலத்தில் காதலித்து வந்தனர். ஆனால், இது ஆத்மார்த்தமான காதல் அல்ல, ஆத்திர, ஆத்திரமான காதல். இவர்கள் இருவர் மத்தியில் இருந்த காதல் சுமூகமாக இருக்கவில்லை என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்.

விடிய, விடிய தொல்லை...

விடிய, விடிய தொல்லை...

2001 நவம்பர் மாதம் ஒரு நாள் ஐஸ்வர்யா ராயின் வீட்டு காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருந்தார் சல்மான். ஏறத்தாழ அதிகாலை 3 மணி வரையிலும். பிறகு, கோபம் தளர்ந்த ஐஸ் அவரை வீட்டுக்குள் அனுமதித்தார்.

சல்மான் ஐஸை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைத்ததால், இவர்கள் உறவு ஒருக்கட்டதில் முறிந்தது.

ஹிட் அன்ட் ரன்!

ஹிட் அன்ட் ரன்!

கலைமான் வேட்டை வழக்கில் இருந்து அப்போது கொஞ்சம் காவல் மற்றும் நீதிமன்றத்திடம் இருந்து தளர்ந்து இருந்தால் சல்மான் கான். 2002ம் ஆண்டு சல்மான் மும்பையில் கார் வேகமாக ஒட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவானது.

இதில் ஒருவர் மரணம் அடைந்தார், நால்வர் படுகாயம் அடைந்தனர். இதனால் இவர் மேல் குற்றவழக்கு பதிவானது.

சென்ற ஆண்டு இவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

விவேக் ஒபராய்!

விவேக் ஒபராய்!

சல்மான் கானிடம் இருந்து பிரிந்த ஐஸ்வர்யா ராய் விவேக் ஓபராயிடம் தஞ்சம் புகுந்தார். அப்போது விவேக் ஒரு வளர்ந்து வரும் ஸ்டாராக இருந்தார். இவர்கள் இருவருக்குள் காதல் அதிகரித்தது.

ஆனால், சல்மானுக்கு இது கோபத்தை வரவழைத்தது. இதன் காரணமாக விவேக்கை இவர் குறுஞ்செய்தி மூலம் திட்டித்தீர்த்தார் என்று விவேக் ஓபராய் ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுத்தார்.

இதன் பிறகு விவேக்கி கட்டம் கட்டி திரைத்துறையில் இருந்து தூக்கினர் சல்மான் என்று ஒரு அரசல்புரசல் செய்து கசிந்தன.

கத்ரீனா பார்ட்டியில் சண்டை!

கத்ரீனா பார்ட்டியில் சண்டை!

2008ம் ஆண்டு கத்ரீனா கைப் வைத்த பிறந்தநாள் பார்ட்டியில் சல்மான் கானும், ஷாருக்கானும் குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. வார்த்தை போரில் ஈடுப்பட்ட இவர்கள் இருவரும் இதற்கு பிறகு நீண்ட காலம் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.

பிறகு, 2013ம் ஆண்டு பாபா சித்திக் வைத்து இப்தர் விருந்தில் இருவரும் சுமூகமாக பேசி தங்கள் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். இதன் பிறகு இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள்.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

சல்மான் கான் திரைப் பயணத்தில் முக்கியமான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் இவர் ஒரு மல்யுத்த வீரராக நடித்திருந்தார். இதற்காக பயிற்சிகளும் மேற்கொண்டார்.

சுல்தான் படத்தின் ஒரு விளம்பர நிகழ்ச்சியில், இந்த படத்தின் போது அவர் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட போது, ரிங்கில் இருந்து வெளியே வரும் போது கற்பழிக்கப்பட்ட பெண்ணை போல உணர்ந்தேன் என்று கூறினார். இதற்கு மாதர் சங்கங்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Salman Khan and Controversies!

Here we have a list of Controversies that made and included Salman Khan.