For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வரலாற்றில் நடந்த சில திகைப்பூட்டும் நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு!

  |

  இன்று நமக்கு ஏதேனும் சந்தேகம், அல்லது நாம் அறியாத விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால்... நாம் அணுகும் முதல் இடம் கூகுள். மனிதன் அறியாததையும் கூகுள் அறியும் என்று சிலர் தத்துவம் எல்லாம் பேசுவார்கள். மனிதன் அறிந்து, தெரிந்து, பதிவிட்ட விஷயங்களை மட்டுமே கூகுள் அறியும்.

  அதிலும், தொழில்நுட்ப ரீதியாக யார் தங்கள் இணையத்தை வலிமையாக கட்டமைத்துள்ளார்களோ, அவர்களை மட்டுமே முதல் பக்கத்தில் காண்பிக்கும் கூகுள். இல்லையேல்... கடைசி நிலைக்கு விரட்டி அடித்துவிடும் இன்டர்நெட்டின் குலதெய்வமான கூகுள் பகவான்.

  கூகுள் அறியாத வரலாறு பெரும் வரலாறு... அதுக்குறித்த பக்கங்கள் விக்கிப்பீடியாவில் கூட இல்லாதிருக்கலாம். நாம் தேடிய விஷயம் விக்கியில் இல்லை என்பதை, அது வரலாற்றில் சிறப்பிடம் பிடிக்க தகுதியற்றது என்றில்லை. ஒருவேளை, அதுக்குறித்து அறிந்தவர்கள் விக்கியில் பதிவிடாமல் கூட இருந்திருக்கலாம்.

  அமெரிக்க சுதந்திர தேவி சிலையை முழு வடிவத்தில் பார்த்திருப்போம்.. ஆனால், அது உருவாகும் நிலையில் எப்படி இருந்தது என நீங்கள் பார்த்ததுண்டா? ஈபிள் டவரை முழுமையாகவும், கட்டப்பட்டு வந்த நிலையிலும் நாம் பார்த்திருப்போம். ஆனால், நாசி படையின் ஆக்கிரமிப்பு வட்டத்தில் இருந்த போது எப்படி இருந்தது என நீங்கள் பார்த்தது உண்டா?

  இப்படி வரலாற்றில் நாம் அறியாத, நாம் காணாதபடி மறைக்கப்பட்டிருக்கும் சில வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  டெத் ட்ரெயினில் இருந்து விடுதலை பெற்ற யூத மக்கள் வெளியேறும் காட்சி...

  Image Source and Courtesy: Boredpanda

  #2

  #2

  தனது ட்ரான்ஸ்மிட்டர் சோதனைக் கூடத்தில் அமர்ந்திருக்கும் நிகோலா டெஸ்லா..

  Image Source and Courtesy: Boredpanda

  #3

  #3

  1888ம் ஆண்டு கட்டப்பட்ட , கத்தோலிக்க பிரிவை சேர்ந்த மனைவி மற்றும் சீர்த்திருத்த வாதியான கணவர் ஜோடியின் கல்லறை

  Image Source and Courtesy: Boredpanda

  #4

  #4

  1936ம் ஆண்டு நாசி படையை சேர்ந்த ஒரே ஒரு வீரர் மட்டும் நாசி சல்யூட் அளிக்காமல் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் காட்சி...

  Image Source and Courtesy: Boredpanda

  #5

  #5

  காது கேட்கும் திறன் இன்றி பிறந்த சிறுவன், 1974ம் ஆண்டு கேட்கும் திறன் கருவியின் உதவியுடன் முதன் முதலாக ஒலியை கேட்டு வியந்த போது...

  Image Source and Courtesy: Boredpanda

  #6

  #6

  1967ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில், இடதுபுறத்தில் இருந்து வலது புரம் வண்டி ஓட்ட ஆணை பிறப்பிக்கப்பட்ட முதல் நாளில்...

  Image Source and Courtesy: Boredpanda

  #7

  #7

  1961ல் பெர்லினின் மேற்கு பகுதியில் இருந்து தங்கள் குழந்தையை, கிழக்கு பகுதியில் இருக்கும் பெற்றோரிடம் காண்பிக்கும் தம்பதிகள்...

  Image Source and Courtesy: Boredpanda

  #8

  #8

  1934ம் ஆண்டு, எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் இருந்து மூன்று Acrobat கலைஞர்கள் சாகசம் செய்த போது...

  Image Source and Courtesy: Boredpanda

  #9

  #9

  1884ல் பாரிஸில் சுதந்திர தேவி சிலை உருவாக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்... இந்த சிலை அமெரிக்காவிற்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  Image Source and Courtesy: Boredpanda

  #10

  #10

  ஃப்ளோரிடாவில் கவர்ச்சி நடனமாடி காவலர்களால் கைது செய்யப்பட்ட பெண், நீதிமன்றத்தில் தன் அரைநிர்வாணமாக நீதிபதியிடம் வாதிட்டப்போது...

  Image Source and Courtesy: Boredpanda

  #11

  #11

  கொள்ளைக்கூட்ட தலைவன்ஜோ மசீரியா, ப்ரூக்ளின் ரெஸ்டாரன்ட் தளத்தில் குண்டடிப்பட்டு கீழே விழுந்த நிலையில். குண்டடிப்பட்ட போது அவர் சீட்டு ஆடிக் கொண்டிருந்தார். அவரது கையில் ஸ்பேட் ஆஷ் இருந்தது.

  Image Source and Courtesy: Boredpanda

  #12

  #12

  1932, பாரிஸ் நகரில் லீ மோனேக்லேவில் லெஸ்பியன் தம்பதி...

  Image Source and Courtesy: Boredpanda

  #13

  #13

  1973ம் ஆண்டு நைஜீரியாவை சேர்ந்த போலாஜி படேஜோ ஏலியன் கதாப்பாத்திரத்தில் ஒரே முறை நடித்த போது. இவரது உயரம் ஏழடி.

  Image Source and Courtesy: Boredpanda

  #14

  #14

  தி மோஸ்ட் பியூட்டிஃபுல் சூசைட் என்று கூறப்படும் தற்கொலை சம்பவம் இது. 1947ம் ஆண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து ஒரு இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டார். ஆனால், இவர் இறந்த நிலையில், ஒரு அழகான நிலையில் படுத்து போஸ் கொடுப்பது போல இருந்தார். இதனால் தான் இந்த புகைப்படத்தை மற்றும் இவரது தற்கொலையை தி மோஸ்ட் பியூட்டிஃபுல் சூசைட் என்று அழைக்கிறார்கள்.

  Image Source and Courtesy: Boredpanda

  #15

  #15

  1967ம் ஆண்டு, விண்வெளி ஆராய்ச்சியாளர் விளாடிமிர் கோமரோவ், விண்வெளியில் இருந்து கீழே விழுந்த போது, மிஞ்சிய அவரது உடல் பாகங்கள்.

  Image Source and Courtesy: Boredpanda

  #16

  #16

  1930ம் ஆண்டுகளில் நியூயார்க் நகரில் இருந்து தொப்பி கலாச்சாரம்...

  Image Source and Courtesy: Boredpanda

  #17

  #17

  போர் களத்தில் கில்ட் உடையில் (ஸ்காட்லாந்தின் சிறிய ஸ்கர்ட் வகை உடை) இசைத்துக் கொண்டு வரும் ஸ்காட்லாந்து பைப்பர்...

  Image Source and Courtesy: Boredpanda

  #18

  #18

  இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீட்டெடுத்து வரப்பட்ட டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம்.

  Image Source and Courtesy: Boredpanda

  #19

  #19

  1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பலில் இருந்து உயிர் தப்பிய பயணிகள் கர்பத்தியா (The Carpathia) கப்பலில் ஏறும் காட்சி..

  Image Source and Courtesy: Boredpanda

  #20

  #20

  1932ம் ஆண்டு ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள்...

  Image Source and Courtesy: Boredpanda

  #21

  #21

  1905ம் ஆண்டு நார்வேவில் முதல் முறையாக கொண்டுவரப்பட்ட வாழைப்பழங்கள்...

  Image Source and Courtesy: Boredpanda

  #22

  #22

  நியூயார்க் நகரில் பலர் முன்னிலையில் 1954ல் படமாக்கப்பட்ட மர்லின் மன்றோவின் ஐகானிக் காட்சி...

  Image Source and Courtesy: Boredpanda

  #23

  #23

  நாசி நீமூல்கி கப்பலான U-175 மீது, ஏப்ரல் 17, 1943 அன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தி தகர்த்த போது...

  Image Source and Courtesy: Boredpanda

  #24

  #24

  1945ம் ஆண்டு முதல் அணு குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது...

  Image Source and Courtesy: Boredpanda

  #25

  #25

  நாகசாகி மீது தாக்குதல் ஏற்படுத்தி பெரும் நாச சேதம் ஏற்படுத்திய ஃபேட்மேன் அணு குண்டு கடைசி நிலை உருவாக்க நிலையில்... பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்..

  Image Source and Courtesy: Boredpanda

  #26

  #26

  1914ம் ஆண்டு பெரும் கூட்டத்தின் நடுவே, முதலாம் உலகப்போருக்காக ஆரவாரமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஹிட்லர்... கூட்டத்தில் ஒருவனாக...

  Image Source and Courtesy: Boredpanda

  #27

  #27

  1940ம் ஆண்டு நாசி படையின் ஆக்கிரமிப்புக்கு கீழ் ஈபிள் டவர்...

  Image Source and Courtesy: Boredpanda

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Rare Historic Photos That You Probably Have Not Seen Before

  Rare Historic Photos That You Probably Have Not Seen Before
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more