For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பாடி பில்டர்களே! இது தெரிஞ்சா ஜிம்முல இனிமேல் நீங்க இத தொடவே மாட்டீங்க!

  By Staff
  |

  தினமும் ஏதேனும் புதியதாக கற்றுக் கொள்ள விரும்பும் நபரா நீங்க? இது உங்களுக்கான இடம். தினமும் அரசியல், வரலாறு, அறிவியல், புவியியல் என சுவாரஸ்யமான உண்மைகள், தகவல்கள் கற்றுக் கொள்ளலாம்.

  கேள்விகள்:

  1) டெக் ஸ்டார்ட் அப் பவுண்டர்களில் எத்தனை சதவிதத்தினர் அயல்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறார்கள் தெரியுமா?

  2) அமெரிக்காவில் சொந்த கார்கள் வைத்திருப்பவர்களை விட வாடகை காரில் பயணிப்பவர்கள் தான் புத்திசாலிகள், ஏன்?

  3) அமேசானின் உலகின் பெரிய கிடங்கு எத்தனை பெரியது?

  4) இது தெரிஞ்சா ஜிம்முல இனிமேல் நீங்க வெயிட்ஸ் தொடவே மாட்டீங்க...

  5) புதியதாக அறிமுகமான நபரின் பெயரை அடிக்கடி மறந்து போகிறீர்களா? அப்ப உங்களுக்கும் இந்த தாக்கம் இருக்கலாம்...

  6) கடல் கொள்ளையர்கள் ஒற்றை கண்ணில் கருப்பு துணி கட்டியிருப்பது ஏன்? அவர்கள் குருடர்கள் இல்லை என்பது வேறு கதை!

  7) உலகை சைக்கிளில் சுற்றி வந்த முதல் பெண் யார்?

  8) உடற்பயிற்சி செய்பவர்களின் மூளை எத்தனை வருடம் இளமையாக இருக்கிறது அறிவீர்களா?

  9) எந்த பிரிவில் வேலை செய்யும் காவலர்களுக்கு வைலண்டான வீடியோ கேம்ஸ் என்றால் அலர்ஜி?

  10) இந்த மூன்றில் ஒருவராக உங்கள் குழந்தையும் இருந்தால், கொஞ்சம் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ளுங்கள்...

  இனி, இவற்றுக்கான பதில்களை காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குடியேறியவர்கள்!

  குடியேறியவர்கள்!

  inc.com வெளியிட்ட ஒரு கட்டுரையில், அமெரிக்க ஸ்டார்ட்-அப் எகனாமி ஹீரோஸ் என்று புகழப்படுவோர்களில் பலர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  அமெரிக்கா என்று மட்டுமல்ல, உலகின் 20% டெக்னாலஜி ஃபவுண்டர்ஸ் அயல்நாட்டை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அதாகப்பட்டது அமெரிக்காவில் டெக் ஸ்டார்ட்-அப் தொடங்கும் ஐந்தில் ஒருவர் அயல்நாட்டை சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இப்படி தான் உலகெங்கிலும் காணப்படுகிறதாம்.

  ஐந்தில் நான்கு!

  ஐந்தில் நான்கு!

  நடப்பு 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், அமெரிக்காவின் ஐந்தில் நான்கு பெரு நகரங்களில் சொந்த காரை பயன்படுத்துவதை காட்டிலும், ஊபர் போன்ற வாடகை கார்கள் பயன்படுத்துவது தான் செலவு குறைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

  அமேசான்!

  அமேசான்!

  உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் தளமாக இயங்கி வருகிறது அமேசான். அமேசானின் பெரிய கிடங்கானது அமெரிக்காவில் இருக்கிறது. அதன் அளவு 17 கால்பந்தாட்ட மைதானத்தின் அளவு இருக்கிறதாம். இது உலகின் ஆற்றல் மற்றும் திறன் மிகுந்த பெரிய கிடங்குகளில் ஒன்று என அறியப்படுகிறது.

  ஜிம்!

  ஜிம்!

  நீங்கள் ஒரு ஜிம் ஃப்ரீக்கா... ஜிம் செல்லாமல் தூங்க முடியாது, சாப்பிட முடியாது, நாள் முழுதும் இயங்க முடியாது என்று கூறும் நபரா. இதோ உங்களுக்கு ஒரு செம்ம நியூஸ். நீங்கள் ஜிம்மில் பயன்படுத்தும் வெயிட்ஸ்களில் கழிவறை இருக்கையில் இருப்பதை காட்டிலும் 362 மடங்கு அதிகமான அளவு பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்.

  நீங்களுமா?

  நீங்களுமா?

  சில முறை புதியதாக அறிமுகமாகும் நபரின் பெயரை நாம் மறப்பது எளிது. ஆனால், சிலர் தாங்கள் அறிமுகமாகும் அனைத்து நபரிகளின் பெயர்களையும் மறந்துவிடுவார்கள். இரண்டு, மூன்று முறை கூறிய பிறகும் கூட நான்காவது முறை சந்திக்கும் போது பெயர் அறியாமல் விழிப்பார்கள். இது எதோ நியாபக மறதி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதற்கு பெயர் next in line தாக்கமாம். இவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் நபர்களாக இருப்பார்கள்.

  ஒற்றை கண்!

  ஒற்றை கண்!

  பொதுவாக அனைத்து கடல் கொள்ளையர்கள் படங்களிலும் குறைந்தபட்சம் ஒரு ஒற்றை கண் கொண்ட நபராவது காண்பிக்கப்படுவார். ஆனால், ஒரு கண்ணில் கருப்பு துணி அல்லது லெதர் போன்ற பொருளை வைத்து கட்டுவது கண் இல்லாததால் இல்லையாம். அவர்களுக்கு இருளில் கண்கள் நன்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு கண்ணை எப்போதும் கட்டி வைத்திருப்பார்களாம். பெரும்பாலும் இரவில் தான் இவர்கள் கொள்ளையடிப்பார்கள், சண்டைக்கும் செல்வார்கள். ஆகவே இதற்காக தான் இப்படியான ஒரு வழக்கத்தை பின்பற்றி வந்துள்ளனர்.

  சில நாட்களுக்கு முன்னர்....

  சில நாட்களுக்கு முன்னர்....

  அன்னி லண்டன்டேரி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த லத்வியம் பூர்வீகம் கொண்டவர் ஆவார். இவர் தான் உலகை முதன் முதலில் சைக்கிளில் சுற்றி வந்தவர் ஆவார். ஆனால் இவர் சைக்கிள் ஓட்டுவதற்கு எப்போது கற்றுக் கொண்டார் தெரியுமா? தனது சைக்கிள் உலக பயணத்தை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன். அன்னி சுதந்திரமான சிந்தனை கொண்டவர். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் தடகள வீராங்கனையும் ஆவார்.

  உடற்பயிற்சி!

  உடற்பயிற்சி!

  எம்.ஆர்.ஐ. ஸ்கான் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், தினமும் அல்லது சீராக உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டிருக்கும் நபர்களின் மூளை பத்து வயது இளமையாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பார்த்துக்குங்க, உடல் தசைக்கும், எலும்புகளுக்கும் மட்டுமல்ல, சீரான முறையில் உடற்பயிற்சி மேற்கொள்வது மூளைக்கும் ஆரோக்கியமானது.

  விளையாட்டு!

  விளையாட்டு!

  காவலர்கள் மற்றும் இராணுவத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அனைவருமே துப்பாக்கி தூக்கி கொண்டு சுடுபவர்கள் இல்லை. அதே போல, அனைவரும் அனைத்து வகையிலான ஆயுதங்களை பயன்படுத்துவோரும் இல்லை. அதிகளவிலான தோட்டாக்கள் பயன்படுத்தி தொடர்ந்து சுட்டுக் கொல்லும் பிரிவில் பணிபுரியும் மாஸ் ஷூட்டர்ஸ் வைலண்டான விளையாட்டுகள் விளையாடுவதில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறார்கள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

  மூன்றில் ஒருவர்!

  மூன்றில் ஒருவர்!

  மூன்றில் ஒரு குழந்தை நன்கு பேச பழகுவதற்கு முன்றே மொபைல் அல்லது டாப்லட் போன்ற கருவிகளை இயக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 29% குழந்தைகள் கிண்டர்கார்டனில் சேர்வதற்கு முன்பே டெக்னாலஜி கருவிகளை இயக்க கற்றுக் கொள்கிறார்கள். 70% குழந்தைகள் ப்ரைமரி ஸ்கூலிங் முடிப்பதற்கு முன்பே அவற்றை நன்கு பயன்படுத்த கற்றுக் கொள்கிறார்கள்.

  இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் 15 நிமிடங்களாவது இந்த டெக் கருவிகளை இயக்குகிறார்கள் என்றும் ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. இரண்டில் இருந்து நான்கு வயது நிரம்பிய குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது டிவி பார்க்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: facts உண்மைகள்
  English summary

  Random Facts 012

  From science, history, invention, celebrities, achievements etc., Here we have listed out some lesser known interesting fact randomly.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more