Latest Updates
-
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
பிறந்தநாள் நிகழ்வில் நடந்த எதிர்பாராத விபத்து!
கடைசி நிமிடத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கட்டுரை தொகுப்பு.
கரணம் தப்பினால் மரணம் என்று பல நேரங்களில் சொல்லக் கேட்டிருப்போம். நாம் ஒன்று ப்ளான் நமக்கு இன்னொருவர் ப்ளான் செய்யவது தான் இதன் சாராம்சம்.
இதில் பல்பு வாங்குவதிலிருந்து உயிரையே காவு வாங்கும் வரையிலான ஏகப்பட்ட சங்கடங்கள் இருக்கிறது. பல்பு வாங்கினால் சிரித்து சமாளித்துவிடலாம். ஆனால் உயிர்? எதிர்பாராதவிதமாக நடந்த விபத்துக்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்
விபத்துக்கள் மட்டுமல்ல.... மிகப்பெரிய ஆபத்துக்களிலிருந்து தப்பித்த தருணங்கள் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

சிலந்தி :
நம்மூரில் கரப்பான் பூச்சி செவனேவென்று தன் வேலையை பார்த்துக் கொண்டு சென்றாலும் கத்தி கூப்பாடு போட்டு நாம் பயப்படுவது மட்டுமல்லாமல் அந்த கரப்பான் பூச்சியையும் பயமுறுத்தியிருப்போம்.
தூக்க கலக்கத்தில் பிரஷ்ஷை எடுத்து வாயில் வைத்திருந்தால் என்ன ஆவது? ஒரு வேலை நிஜமாலுமே ஒரு ஸ்பைடர் மேன் கிடைத்திருப்பாரோ.

எஸ்கலேட்டர் :
எஸ்கலேட்டரில் ஏறினால் சொயிங்னு... மேல போகலாம்னு பாத்தா இப்பிடி ஒரேயடியா மேல அனுப்ப ப்ளான் பண்றாங்களே.... எஸ்கலேட்டர் ஏறினதும் கண்ணமூடிட்டு நிக்காம கொஞ்சம் சுத்தி முத்தி பாருங்க குறிப்பா கீழ பாக்கணும் இப்டி எதாவது ஏடாகூடமா இருக்கான்னு.

தண்ணீர் பாட்டில் :
இது கேமரா செஞ்ச மாயமா அல்லது தம்பியோட ஸ்பெஷாலிட்டியான்னு தெரில என்ன ஆபிஸ்ல உக்கார்ந்திருக்கிற பையன் தண்ணி குடிக்கிறான். ஒரு வாட்டர் பாட்டில புடிச்சிருக்கான் இதுல என்ன தப்பு என்று யோசிக்கிறாங்களா?
சார் தண்ணி பாட்டில புடிச்சிருக்குற சைச மட்டும் பாருங்க

யானை :
யானையின் வழித்தடங்களை எல்லாம் அழித்து வீடு,அலுவலகம், ரிசார்ட், எஸ்டேட் என்று விதவிதமாக நமக்கு ஏற்றது போல மாற்றிக் கொண்டோம். போதாகுறைக்கு ட்ரக்கிங், இயற்கையை ரசிக்கிறோம் என்று எதேதோ பெயர்களை சொல்லிக்கொண்டு இப்படிச் சென்றால் யானை எங்கே தான் வாழ்வதாம்?

தேனீ.. :
லைட்டா கல்லடிச்சாலே மொத்த தேனியும் விஸ்வரூபம் எடுத்துரும் போல அதுவும் சைக்கிள்ள தேனி கூடு கட்ற வரைக்க்கும் என்ன பண்ணாயங்கன்னு தெரில.
ஒரு வேல வருசக்கணக்கா ஒரேயிடத்துல நிக்கிதோ.

காக்கா :
ஒவர் நைட்ல நீங்க மட்டும் தான் ஃபேமஸ் ஆவிங்களா? நாங்க எல்லாம் ஆகமாட்டோமா என்று நினைத்திருக்கும் போல ஒரு புண்ணியவான் தவற விட்ட இருபது ரூபாய் நோட்டை கவிக்கொண்டு காக்கா பறந்துவிட அவர் கூச்சலிட்டிருக்கிறார்.
காசு எடுத்துட்டு போய் என்ன பண்ண நீ என்ன சேட்டா கடையில காசு கொடுத்து வடையா வாங்கி சாப்பிடபோற எங்க கிட்ட கொடு என்று கையை நீட்டுகிறார்கள். அதிலும் ஒருவர் தெளிவாக கோவிலுக்கு வாங்கி வைத்திருந்த வாழைப்பழத்தை கொடுப்பது போல நீட்டி 20 ரூபாயைக் கேட்கிறார்.
உங்களுக்கு எங்கள ஏமாத்துறதே வேலையா போச்சு அன்னக்கி என்னடான்னா நரியார்.... குரல் தேனா இருக்குன்னு வடைய புடுங்கிட்டு போனான் இன்னக்கி கஷ்டப்பட்டு ஆட்டைய போட்ட இருபது ரூபாய்க்கு இவங்க பண்ற அழிச்சாட்டியத்த பாருங்க

முட்டை :
இப்டி சமைச்சா பத்து மணி நேரம் ஆனாலும் இந்த இரண்டு முட்டைய வேக வைக்கவே முடியாது. முட்டைக்கு அபூர்வ சக்தி இருக்கு செய்வினை வச்சிருக்காய்ங்க அது இதுன்னு கிளப்பிவிடாம.... கரெக்டா எந்த அடுப்ப ஆன் பண்ணியிருக்கீங்களோ அந்த அடுப்புல பாத்திரத்த வைங்க

புறா :
டானு டானு டானுன்னு... பாட்டுல வர்ற மாதிரி புறாவுக்கு சாப்பாடு போடலாம்னு பாப்பா ஓடி வந்திருக்கு. நிறைய பேர் ஓடி வந்து பயம் காட்டி கேண்டிட் போட்டோன்னு க்ளிக் பண்ணிட்டு போய்டறாங்கன்னு செம்ம காண்டுல இருந்திருக்கும் போல பொண்ணுகிட்ட வந்ததும் பிரிச்சு மேஞ்சுட்டாங்க....

டேய் தகப்பா :
குழந்தைகளோட இருக்கும் போது ரொம்பவே ஜாக்கிறதையா இருக்கணும்னு இதுக்கு தான் சொல்றாங்க. சூப்பர் மேன் மாதிரி ஸ்டண்ட் செய்ய ட்ரை பண்ணி இப்டி குழந்தைய கீழ போட்டீங்களே

தன்வினை :
தன் வினை தன்னைச் சுடும்னு சும்மாவா சொன்னாங்க.... கஷ்டப்பட்டு வுட் பில்டிங் ப்ளாக்ஸ் வச்சு அடுக்கியிருந்தத அம்மணி போய் லேசா ஒரு டச் தான் பண்ணாங்க டச் பண்ண கைய எடுக்குறதுக்குள்ள அம்மணி மேலயே சரிஞ்சு விழுந்திடுச்சு....

ஹேப்பி பர்த்டே :
நண்பர்களில் ஒருவருக்கு பிறந்த நாள் வந்துவிட்டால் அவ்வளவு தான். ஜாலி கேலி எல்லாம் ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி போகவும் வாய்ப்புண்டு. அதற்காக இந்தளவுக்கு போகக்கூடாதுப்பா....
ஜாலியா தூக்கிப் போட்டு விளையாடணும்னா பந்து எடுத்துட்டு விளையாடுங்க... இல்ல எங்களுக்கு பர்த்தடே பாய் தான் வேணும்னா ஓப்பன் க்ரவுண்டுக்கு போங்க அதவிட்டுட்டு இப்டி இண்டு இடுக்குல பண்ணா இப்டித்தான்... அனேகமா பர்த்தடே பாய்க்கு மண்ட தெரிச்சிருக்கணும்... சாரு கைய வச்சு பேலன்ஸ் பண்ணிட்டாப்ல

வில் அம்பு :
வெளியுலக தொடர்பு இல்லாத நிலையில் பலநூறு வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள மினி விமானம் மூலமாக சென்றிருக்கிறார்கள். தங்களை தாக்க ஏதோ ஒரு ஆபத்தான மிருகம் வருவதாய் நினைத்து அங்கிருந்த பழங்குடியினர் அம்பு விட்டிருக்கிறார்கள். விமானத்தின் அடிப்பாகம் முழுவதும் அம்புகளால் துளைத்துவிட வேறு வழியின்றி அப்படியே திரும்பிவிட்டார்களாம்.
இப்போது அந்த விமானத்தை அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications