இன்னும் எத்தனை உயிர் வேண்டும்! பதற வைக்கும் தீ விபத்துக்கள்

By Staff
Subscribe to Boldsky

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது குரங்கணி காட்டுத் தீ விவகாரம், மலையேற்ற பயிற்சிக்காக சென்றவர்களில் காட்டுத்தீயில் சிக்கி ஒன்பது பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.

காட்டுத்தீ கடந்த ஒரு வாரமாகவே எரிந்து கொண்டிருக்கிறது அதை உடனடியாக அணைக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது, குரங்கணி பகுதியைத் தாண்டி தேவாரம், பொட்டிபுரம் ஆகிய இடங்களிலும் காட்டுத்தீ பரவியிருக்கிறது. ஆனால் இவை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை அதனால் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களை எச்சரிக்க முடியவில்லை அவர்களும் மேலே சென்று காட்டுத்தீயில் சிக்கிவிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபத்து :

விபத்து :

ஒரு விஷயத்தை பற்றிய புரிதல் ஏற்படுவதற்கும், அதைப்பறிய கவனம் பெறுவதற்கும் பெரும் விபத்து ஒன்று நடக்க வேண்டியதாய் இருக்கிறது, அதோடு உயிர் பலியும் நிகழ வேண்டியதாய் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இப்படியான விபத்துகள் ஏற்பட்ட பிறகே தான், அது குறித்து பேசத் துவங்குகிறோம் அதற்கு பிறகு தான் பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. இந்திய அளவில் மிகப்பெரிய தீவிபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் பட்டியலையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அதேயளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.

முதல் விபத்து :

முதல் விபத்து :

தமிழகத்தை பொறுத்தவரையில் முதலில் மிகப்பெரிய தீவிபத்து என்று அறியப்பட்டது 1975 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேஹி எல் ஐ சி பில்டிங்கில் நடைப்பெற்ற தீவிபத்து.

பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து என்று சொன்னால் 1979 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரத்தில் லக்‌ஷ்மி டூரிங் டாக்கீஸில் நிகழ்ந்த தீவிபத்து.

ஸ்க்ரீனுக்கு பின்னால் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்டினால் தீப் பொறி கிளம்பியிருக்கிறது. மேலே கீற்றுக் கொட்டகை என்பதால் விரைந்து தீப்பற்றியிருக்கிறது.

Image Courtesy

73 பேர் பலி :

73 பேர் பலி :

குறுகிய வாசல், திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததால் விளக்கு எல்லாம் இல்லாமல் இருந்திருக்கிறது, அந்த இருட்டில் எந்தப்பக்கம் செல்ல வேண்டும் என்ற விவரமும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை கிட்டதட்ட 200க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கிறார்கள்.

இந்த விபத்தில் 73 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள் அதோடு 88 வரை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

Image Courtesy

540 பேர் பலி :

540 பேர் பலி :

இந்த கொடூர நிகழ்வு 1995 ஆம் ஆண்டு ஹரியானாவில் நிகழ்ந்திருக்கிறது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் டப்வாலி என்ற இந்த ஊர் அமைந்திருக்கிறது, வளர்ந்து வரும் டவுன் பகுதியாக இருந்த இந்த ஊரில் பிரபல மெட்ரிக் பள்ளியொன்று பள்ளி ஆண்டு விழாவினை ஒரு திருமண மண்டபத்தில் நடத்தியிருக்கிறது.

பள்ளி ஆண்டு விழா ஏராளமான குழந்தைகள், அவர்களின் பெற்றோர்,ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் என கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரை இருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

 தீவிபத்து :

தீவிபத்து :

இன்னும் சொல்லப்போனால் அந்த சிறிய டவுனில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து ஒருவராவது அந்த மண்டபத்தில் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஜெனரேட்டரிலிருந்து ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

மண்டபத்தின் முன் வாசல் அடைக்கப்பட்டிருந்தது, எப்படி தப்பிக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல் எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயல யாருமே வெளியேற முடியவில்லை.

Image Courtesy

நினைவுகள் :

நினைவுகள் :

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 540 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். நாடே இந்த விபத்தை பெரும் அதிர்ச்சியுடன் தான் பார்த்தது. இவர்களுக்கு ஹரியானா அரசு ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு வரையிலும் இதற்காக அலைந்து கொண்டிருந்தார் வினோத் பன்சால். இவரது மூன்று குழந்தைகளும் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இரண்டு குழந்தைகள் ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்று முதன் முதலாக மேடையேற இருந்தார்கள்.

Image Courtesy

குடும்பத்துடன் :

குடும்பத்துடன் :

அதனால் குடும்பத்துடன் சென்ற வினோத் பன்சால் இந்த தீவிபத்தில் சிக்கினார். இதில் இவரது மனைவி உட்பட இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். இவரும், மூத்த மகள் ஒருவரும் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து இருபது வருடங்களை தாண்டி விட்டாலும், இன்னமும் தீக்காயத் தழும்புகளுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போலவே இன்னமும் அந்த கொடூரத்தின் நினைவை தங்கள் உடலில் சுமந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.

Image Courtesy

வழிபாடு :

வழிபாடு :

ஒடிசாவில் 1997 ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக் கொடூர நிகழ்வு இது. கோவில் திருவிழாவிற்காக ஏராளமான மக்கள் குழுமியிருந்தார்கள் மூன்று நாட்கள் நடக்கிற திருவிழா அது. ஒடிசா மாநிலம் பரிபடாவில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

மொத்தம் அங்கே மூன்று கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. ஒன்று சமையல் செய்ய மற்ற இரண்டும் ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று.

Image Courtesy

விபத்து :

விபத்து :

அன்று ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது, ஆண்களும் பெண்களும் அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத்தில் காத்திருந்தார்கள். இரண்டு கூடாரங்களிலும் குழந்தைகள் இருந்தார்கள்.

திடிரென்று சமையல் கூடாரத்திலிருந்து புகை கிளம்பியிருக்கிறது,அங்கிருப்பவர்கள் தகவல் கொடுப்பதற்குள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆண்களும் பெண்களும் சிதறி ஓடியிருக்கிறார்கள். மளமளவென்று பரவிய தீயினால் மேலே போடப்பட்டிருந்த கொட்டகை பற்றி அப்படியே உள்ளேயிருந்த மக்கள் மீது விழுந்திருக்கிறது.

இதனால் ஒருவர் கூட தப்பிக்க முடியாமல் உடல் கருகி உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள் ஏராளமானோர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

Image Courtesy

 42 பேர் பலி :

42 பேர் பலி :

ஆக்ராவில் உள்ள ஒரு ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தது. கிட்ட தட்ட அந்த ஷிஃப்டில் 350 பேர் வரை பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது, அந்த தீ மளமளவென்று எங்கும் பரவியது. தப்பிக்க குறுகிய வழி அதுவும் ஒரேயொரு வாசல், அதனால் பலரும் சுவற்றின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு குதித்திருக்கிறார்கள். இந்த விபத்தில் 42 பேர் வரை உயிரிழந்தார்கள்.

Image Courtesy

2004 :

2004 :

தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த,உலுக்கிய தீவிபத்து என்றே சொல்லலாம். கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் சத்துணவு கூடத்தில் பற்றிய தீ மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த வகுப்பறைகளுக்கும் பரவியிருக்கிறது.

குறுகிய படி வழியாகவே மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும், அதோடு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பத்து வயதிற்குட்டப்பட்ட குழந்தைகள் என்பதால் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். கிட்டதட்ட 94 குழந்தைகள் வரை உடல் கருகி உயிரிழந்தார்கள். ஏராளமான குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

Image Courtesy

 பிரகதீஸ்வரர் கோவில் :

பிரகதீஸ்வரர் கோவில் :

1997 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் தேதி பிரகதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. சுமார் 120க்கும் மேற்பட்ட பூசாரிகள் பூஜை செய்துகொண்டும் யாகம் வளர்த்துக் கொண்டும் இருந்தார்கள்.

அப்போது யாகத்தில் திடீரென்று வெளியில் வெடிக்கப்பட்ட பட்டாசு யாகத்தில் விழுந்திருக்கிறது, பெரிதாக கிளம்பிய தீ மேலே போடப்பட்டிருந்த கொட்டகையிலும் பரவி விட்டது.

Image Courtesy

தீப்பற்றும் பொருட்கள் :

தீப்பற்றும் பொருட்கள் :

அதோடு அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களே அதிகம் இருந்திருக்கிறது, அதனால் மிக வேகமாகவும் தீ பரவி விட்டது, அந்த இடத்திலிருந்து வெளியேற ஒரே வழி கிழக்குப் பகுதிக்கு வர வேண்டும் ஆனால் கூட்டத்தினர் வடக்கு பக்கம் ஓடியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இந்த விபத்தில் 42 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Image Courtesy

ஏர்வாடி :

ஏர்வாடி :

2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி இந்த கொடூர தீவிபத்து நிகழ்ந்தது. ஏர்வாடியில் இருக்கக்கூடிய தர்காவில் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அங்கே அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் எங்கும் சென்று விடக்கூடாது என்று பகல் நேரத்தில் மரத்திலும் இரவில் கட்டிலிலும் கட்டி வைக்கப்படுவது வழக்கம். தீவிபத்திற்கான காரணம் அறியப்படவில்லை, தீவிபத்து ஏற்பட்டவுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அழைத்து வருவதற்குள் தீ மளமளவென்று பரவியதால் பலரையும் காப்பாற்ற முடியாமல் போனது.

மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் எப்படி சங்கிலியால் கட்டி வைக்கலாம், இது சட்டத்திற்கு புறம்பானது என்று பெரும் சர்ச்சையை கிளம்பியது.

Image Courtesy

திருமண மண்டபம் :

திருமண மண்டபம் :

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி திருமண வைபவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது, முதல் தளத்தில் யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்து கொண்டிருந்தது, அப்போது கேமராவிலிருந்து கிளம்பிய ஃப்ளாஸ் பட்டு தீப்பொறி மேலேயிருந்த கொட்டகையில் பற்ற தீ பிடித்திருக்கிறது, வேகமாக தீ பரவியதில் திருமண நிகழ்விற்கு வந்திருந்த 48 பேர் உயிரிழந்தார்கள்.

Image Courtesy

கண்காட்சியில் :

கண்காட்சியில் :

2006 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி நடந்திருக்கிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக பற்றிய தீ மிக வேகமாக பரவியிருக்கிறது. இதில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடாரங்களும் முற்றிலுமாக தீப்பற்றியது. அதோடு ஒவ்வொரு கூடாரத்திலிருந்து வெளியேற ஒரேயொரு வழி மட்டும் தான் இருந்திருக்கிறது.

ஐந்து நாட்கள் நடைப்பெற்ற இந்த கண்காட்சியில் கடைசி நாளன்று தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டமும் இருந்திருக்கிறது. இந்த தீவிபத்தில் 65 பேர் வரை உயிரிழந்தார்கள்.

Image Courtesy

மருத்துவமனையில் :

மருத்துவமனையில் :

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு நள்ளிரவு மூன்று மணியளவு தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்த நேரம் சரியாக தெரியவில்லை, மூன்று மணிக்குத் தான் தீவிபத்து நடந்ததே தெரிந்திருக்கிறது, அப்போதே மருத்துமனையின் பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துவிட்டது, அதோடு இந்த தீவிபத்தினால் செயற்கை சுவாசக் கருவிகள் பழுதடைந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

குறுகிய சாலை, அதோடு பல அடுக்குமாடி கட்டிடம், கதவு ஜன்னல் எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததால் மீட்பு படையினரால் உடனடியாக சென்றும் மீட்க முடியவில்லை, இந்த விபத்தில் 89 பேர் வரை உயிரிழந்தாரக்ள்.

Image Courtesy

பட்டாசு :

பட்டாசு :

பட்டாசு தயாரிக்கும் இடங்களில் மட்டுமல்ல பட்டாசு வெடிப்பதினால் கூட பெரும் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. 2016 ஏப்ரல் பத்தாம் தேதி கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புட்டிங்கால் அம்மன் கோவிலில் திருவிழா நடந்திருக்கிறது.

இதில் வழிபாட்டின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் பதினைந்தாயிரம் பேர் வரை பங்கேற்றிருக்கிறார்கள்.

Image Courtesy

கோவிலில் :

கோவிலில் :

பட்டாசு வெடிக்கப்பட்டதினால் ஏற்பட்ட தீப்பொறி கிளம்பி பட்டாசு கிடங்கிற்குள் விழுந்து விட்டிருக்கிறது, இதனால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் எல்லாம் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதற ஆரம்பிக்க, பெரும் தீபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதில் கிட்டத்தட்ட 111 பேர் வரை உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயமடைந்தார்கள். கோவிலுக்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Major Fire Accidents In India

  Major Fire Accidents In India
  Story first published: Monday, March 12, 2018, 13:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more