Latest Updates
-
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்..
Hand Shape Personality Test: ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளில் அறியலாம். அதுவும் ஒருவரது ராசி, பிறந்த தேதி போன்றவை மட்டுமின்றி, ஒருவரது உடல் உறுப்புக்களின் வடிவம், அமைப்பு, அளவு போன்றவையும் அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம், பழக்கவழக்கங்கள், பலம், பலவீனம் போன்றவற்றை வெளிப்படுத்தும். அந்த வகையில் கை வடிவ கைரேகை சாஸ்திரத்தின் படி, ஒருவரது உள்ளங்கைகள் மற்றும் விரல்களின் வடிவம், அந்நபரின் பழக்கவழக்கங்கள், மனப்பான்மை மற்றும் பலங்களைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

நீங்கள் உங்களின் உண்மையான குணாதிசயங்களை உங்கள் கைகளைக் கொண்டு தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கை வடிவங்களில் உங்களின் கை எந்த மாதிரி என்பதை பார்த்து, உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1. சதுரமான உள்ளங்கைகள் மற்றும் குட்டையான விரல்கள்
உங்களின் உள்ளங்கை சதுரமாக இருந்து, விரல்கள் குட்டையாக இருந்தால், நீங்கள் வலிமையானவர்கள், நம்பகமானவர்கள். யாராலும் அசைக்க முடியாத நபராக இருப்பீர்கள். எதையும் ஒழுங்காகவும், தெளிவாக திட்டமிட்டும் செய்ய நினைப்பீர்கள். அதனால்தான் நீங்கள் நடைமுறைக்கு ஏற்றவராகவும், யதார்த்தமானவராகவும் இருப்பீர்கள். மேலும் நீங்கள் அளவுக்கு அதிகமாக சிந்தித்து நேரத்தை வீணடிக்கமாட்டீர்கள். வாழ்க்கை எவ்வளவு சிரமமாக இருந்தாலும், தொடர்ந்து முன்னேறி செல்வீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் விருப்பப்படி செய்ய விரும்புவீர்கள். மேலும் நீங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது.
2. சதுரமான உள்ளங்கைகள் மற்றும் நீளமான விரல்கள்
உங்களின் உள்ளங்கை சதுரமாக இருந்து, விரல்கள் நீளமாக இருந்தால், நீங்கள் சிந்தனைத் திறனும் நுணுக்கமும் கொண்டவர். எதையும் யோசிக்காமல் அவசரமாக செய்யமாட்டீர்கள். காரியங்களைச் சிறப்பாகச் செய்வதில் அக்கறை கொண்டவர். உங்கள் தன்னம்பிக்கை வெளிப்படையற்றதாக இருக்கலாம், ஆனால் அது உண்மையானது. உங்களின் முடிவை மற்றவர்கள் நம்புவதால், இயற்கையாகவே தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பீர்கள். ஒருமுடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்கமாட்டீர்கள்.
3. நீளமான உள்ளங்கை, குட்டையான விரல்கள்
உங்களின் உள்ளங்கை நீளமாக இருந்து, விரல்கள் குட்டையாக இருந்தால், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர், உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள். துணிச்சல் மற்றும் வேகத்துடன், ஆற்றல் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். ஒரு விஷயத்தை பற்றி ஆழமாக யோசிப்பதை விட, அதை செய்வதையே விரும்புவீர்கள். ஒரு காரியத்தை தொடங்குபவராக இருப்பீர்கள். எவ்வளவு பின்னடைவுகளை சந்தித்தாலும், மீண்டு வருவீர்கள். யாராவது உங்களைத் தடுக்க முயன்றாலும், உங்கள் சொந்தப் பாதையின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புவீர்கள்.
4. நீளமான உள்ளங்கை, நீளமான விரல்கள்
உங்களின் உள்ளங்கையும் நீளமாக இருந்து, விரல்களும் நீளமாக இருந்தால், படைப்பாற்றல் மற்றும் வலுவான உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பீர்கள். சுதந்திரமானவராக இருப்பீர்கள். உறவுகளுக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் ஆளுமை உணர்ச்சிப்பூர்வமானதாகவும், உள்ளுணர்வு மிக்கதாகவும், மற்றும் தங்களை அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதாகவும் இருக்கும். மற்றவர்கள் கவனிக்கத் தவறும் நுணுக்கங்களை நீங்கள் கவனிப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டீர்கள். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார்படுத்தி நடந்து கொள்வீர்கள். ஒருமுடிவை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications