Latest Updates
-
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Malli Semiya Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ருசியாகவும், அதே சமயம் சத்தானதாகவும் ஒரு காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியா உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவைக் கொண்டு மல்லியை அரைத்து சேர்த்து, அத்துடன் காய்கறிகளையும் சேர்த்து செய்தால் மல்லி வெஜிடேபிள் சேமியா தயார். இந்த சேமியாவை ஒருமுறை செய்து கொடுத்தால், உப்புமா பிடிக்காது என்பவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மல்லி சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி சேமியா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன்
* சேமியா - 1 கப்
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்புமாவிற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்து வைத்துள்ள விழுது
* தண்ணீர் - 2 கப்
* வறுத்த சேமியா
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், 1 கப் சேமியாவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து
இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை
சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய், வறுத்த வேர்க்கடலை, முந்திரி சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து 2-3 நிமிடம்
காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து பார்க்கும் போது காய்கறிகள் திறந்திருந்தால்,
அரைத்து வைத்துள்ள மல்லி விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி கலந்து, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் வறுத்த சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து,
மிதமான தீயில் வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
மல்லி சேமியா உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications
