Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Navpancham yog On 02 August 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நுழையவுள்ளார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தினால் ராகுவிற்கும் செவ்வாய்க்கும் இடையில் ஒரு சிறப்பான நவபஞ்ச யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
இந்த யோக காலத்தில் செவ்வாய் ராகுவிற்கு 5 ஆவது வீட்டிலும், ராகு செவ்வாய்க்கு 9 ஆவது வீட்டிலும் இருக்கும். இந்த யோகமானது ஜோதிடத்தில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
நவபஞ்ச யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பங்குச் சந்தையில் எதிர்பாராத ஆதாயங்களைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
நவபஞ்ச யோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். முடிவெடுக்கும் திறன் வலுவடையும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்தகால அனுபவங்களால் இக்காலத்தில் சிறந்த முடிவுகளை எடுக்க கற்று கொள்வீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
நவபஞ்ச யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். சிலர் எதிர்பாராத வழிகளில் இருந்து திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
கும்பம்
நவபஞ்ச யோகம் கும்ப ராசிக்காரர்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் சிறப்பான பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஏதாவது ஒரு இடத்தில் பணம் சிக்கியிருந்தால், இக்காலத்தில் அந்த பணத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இது மன அமைதியை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

