For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட்ரோல் விலை உயர்வால் வரும் நாட்களில் இதெல்லாம் கூட நடக்கலாம்...

பெட்ரோல் விலை உயர்வால் வரும் நாட்களில் இதெல்லாம் கூட நடக்கலாம்...

|

நான் அப்போது பத்தாம் வகுப்பு பயின்று வந்தேன். எங்கள் ஆங்கில ஆசிரியர் அன்று வகுப்புக்குள் வந்தவுடன் ஒரு துண்டு காகிகத்தை எடுத்து காண்பித்து எங்களை வியப்பில் ஆழ்த்தினார். அந்த துண்டு காகிகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் மூன்று ரூபாய் என்ற மதிப்பில் பில் இருந்தது. வீட்டை சுத்தம் செய்த போது, பழைய டைரி ஒன்றில் இந்த துண்டு காகித பில் இருந்ததாகவும், அதை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆவலாக எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

Petrol Price Hike: Funny Things May Happen in Future in India

எங்கள் ஆங்கில ஆசிரியர் அதிக வியப்புடன் அந்த பெட்ரோல் லிட்டர் மூன்று ரூபாய் காண்பித்த காலக்கட்டத்தில் பெற்றோலின் விலை சுமார் முப்பதுகளில் இருந்தது. இன்று, பெட்ரோல் ரூபாய் முப்பதுகளில் கிடைத்தது என்பதை கூறினாலே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கடந்த பத்து / பதினைந்து வருடங்களில் நான் கண்டது எல்லாம் வரலாறு காணாத விலை உயர்வு மட்டுமே.

அதிலும் சமீப மாதங்களில் தினமும் பெட்ரோல் விலை மளமளவென்று உயர்ந்து கொண்டே தான் போகிறதே தவிர, ஒருசில பைசாக்கள் கூட குறைந்ததாக அறியவில்லை. ஒருவேளை இப்படியே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துக் கொண்டே போனால், எதிர்காலத்தில் என்னவெல்லாம் நாம் கண்கூட காண வாய்ப்புகள் அமையலாம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

(குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்த அல்ல என்பதை பெட்ரோல் விலை உயர்வால் புண்பட்ட மனதுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐம்பது மில்லி!

ஐம்பது மில்லி!

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் ஷாம்பூ பாக்கெட்டு சைஸில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என பெட்ரோல் விற்பனைக்கு வரலாம். அதிலும், 20% எக்ஸ்ட்ரா ஆபர் என்ற பெயரில் காற்றை நிரப்பி எண்ணெய் நிறுவனங்கள் உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கல்யாணம், காட்சி!

கல்யாணம், காட்சி!

வெளியூரில் பணிபுரிவோர் சொந்த ஊரில் கல்யாணம் வைத்தால், உடன் பணிபுரியும் நபர்கள் மற்றும் நண்பர்களுக்கு ட்ரெயின் / பஸ் டிக்கெட், தங்குவதற்கு ஹோட்டல் அறை புக் செய்து கொடுப்பது எல்லாம் சகஜமாக நடக்கும் காரியம் தான். இதே போல, சொந்த ஊரில் ஒருக்கும் சொந்தக் காரர்கள் தொலைவில் கல்யாண மண்டபம் இருந்தால், பத்திரிக்கை வைக்கும் போதே பெட்ரோல் காசு கொடுத்துவிட்டு போகவும் என நிபந்தனைகள் விதிக்கலாம்.

வரதட்சணை!

மாப்பிளைக்கு பைக், கார் வாங்கிக் கொடுத்த நிலை போய், காய், பை எல்லாம் இருக்கு... ஐம்பது பேரல், நூறு பேரல் பெட்ரோல், டீசல் வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் கொடுமைப் படுத்தலாம். வளைகாப்பு, குழந்தை பிறந்தால்... பணம் கொடுத்தது போக தாய்மாமன் சீர்வரிசையில் பழம், நகை வைத்த காலம் போய், பெட்ரோல் கேன்கள் வைக்கும் காலம் வரலாம்.

பெட்ரோல் டோக்கன்!

எம்.என்.சி கம்பெனிகளில் எல்லாம் டாக்ஸில் சில கோக்குமாக்கு வேலை செய்ய, சம்பளத்தின் ஒரு பகுதியை ஃபுட் டோக்கனாக கொடுத்து சமாளிப்பார்கள். அதேப போல, இனிமேல் டாக்ஸ் விஷயத்தில் தில்லாலங்கடி வேலை செய்ய, கம்பெனிகளில் மாதம் குறிப்பிட்ட பகுதி சம்பளத்தை பெட்ரோல் டோக்கன்களாக தரலாம்.

சேமிப்பு!

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, உப்பு தண்ணி, நல்ல தண்ணி தொட்டிகள் சேமித்து வைத்தது போல, சிறியதாக பெட்ரோல் தொட்டிக் கட்டி.. அவ்வப்போது சில சில்லறை காசுகள் பெட்ரோல், டீசல் விலை குறையும் போது, கூடுதலாக சில மில்லிகள் பெட்ரோல் வாங்கி அந்த தொட்டியில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

பெட்ரோல் கடன்!

வங்கிகளில் பர்சனல் லோன், ஹவுஸிங் லோன், கோல்ட் லோன் போல, பெட்ரோல் லோன் தரப்படலாம். அவரவர் ஊதியத்திற்கு ஏற்ப மாதம் இத்தனை லிட்டார் பெட்ரோல் வாங்கிக் கொள்ள வங்கியில் கடன் வாங்கி வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி ஓட்டிக் கொள்ளலாம்.

சிறுக, சிறுக...

வீட்டில் அம்மா, மனைவி தங்க சேமிப்பு திட்டம் அல்லது ஏதுனும் நகைக் கடைகளில் மாதா, மாதம் சிறிதளவு பணம் செலுத்தி வருட கடையில் நகை வாங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இதே போன்ற திட்டங்கள் பெட்ரோல் பங்குகளிலும் வரலாம். மாதா, மாதம் முடிந்த பணத்தை செலுத்தி, வருடம் ஒருநாள் பெட்ரோல் டான்க் ஃபுல் செய்துக் கொள்ளும் திட்டங்கள் வரலாம்.

விரதம்!

சில வீடுகளில் புரட்டாசி, கார்த்திகை மாதங்களில், ரமலான், புனித வெள்ளி காலங்களில் விரதங்கள் இருப்பது போல, வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் பெட்ரோல், டீசல் வாங்காமல், வண்டிகளை வீடுகளில் பூட்டி வைத்துவிட்டு நடராஜா சர்வீஸ் மேற்கொள்ளலாம். விரதங்கள் இருப்பது போல, இந்த நடராஜா சர்வீஸும் உடல் நலத்திற்கு நல்லதாக அமையலாம். இந்த திட்டத்தை பிரதமர் அவர்களே துவக்கி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பரிசு!

குறும்பட திருவிழா, கல்ச்சுரல்ஸ், மாநில, தேசிய அளவிலான போட்டிகள், மற்றும் ஆசிய விளையாட்டுகள், ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் கேம்ஸ் போன்றவற்றில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகள், கலைஞர்களுக்கு பரிசாக மாநில, மத்திய அரசுகள், கல்லூரிகள், அரசு சாரா நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை வழங்கலாம்.

அசம்பாவிதங்கள்!

1) கல்யாண வீடுகளில் செருப்பு திருடியது போல, பெட்ரோல் திருட ஒரு கும்பல் கிளம்பலாம்.

2) தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை இடைமறித்து வாகனங்களில் இருக்கும் பெட்ரோல், டீசல் திருடப்படலாம்.

3) அரசு ஊழியர் வீட்டில் இரவு நேரத்தில் வீடு புகுந்து, காரில் இருந்த ஐம்பது லிட்டர் பெட்ரோல் / டீசல் திருட்டு, துணிகர செயல் என தலைப்பு செய்திகள் வெளிவரலாம்.

4) ப்ரேகிங் நியூஸ்: நண்பன் / உறவினர் பெட்ரோல் தர மறுத்தால் கைகலப்பு சண்டை, வெட்டுக்குத்து

இப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இதுப்போக... பெட்ரோல் விலை எகிறிக் கொண்டே போவதால்... வேறு என்னவெலாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என நீங்கள் கருதுவதை கமெண்டில் கூறுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Petrol Price Hike: Funny Things May Happen in Future in India

Petrol Price Hike: Funny Things May Happen in Future in India
Desktop Bottom Promotion