Latest Updates
-
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா?
உங்க கையில இந்த அதிர்ஷ்ட ரேகை இருக்கானு பாருங்க... வாழ்க்கையில ஓஹோனு வருவீங்க
லாட்டரியில் பம்பர் பரிசு விழும் அளவுக்கு உங்களுடைய அதிர்ஷ்ட ரேகை எப்படி இருக்கிறது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
கொஞ்சம் நினைத்து பாருங்கள், நீங்கள் முதன் முதலாக வாங்கின லாட்டரி டிக்கெட்டில் 1 கோடி ரூபாய் குலுக்கல் பரிசு விழுந்து இருந்தால் எப்படி இருக்கும். அப்படியே கனவு காண மாட்டீர்கள். இந்த அதிர்ஷ்டம் சும்மா வரவில்லை என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது.

ஆமாங்க உங்கள் கைரேகையைக் கொண்டே அதிர்ஷ்டத்தை உங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். உங்கள் உள்ளங்கைகளில் உள்ள கோடுகள் வளைவுகள் எல்லாம் அதிர்ஷ்டத்தின் சின்னம் என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதைப் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.

பண ரேகை
இந்த பண ரேகை உங்கள் சுண்டு விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த பண ரேகை கோடுகள் ஒருத்தருக்கு ஒன்றுக்கு மேற்பட்டு அமைந்திருந்தால் அவர்களுக்கு லாட்டரியில் பம்பர் பரிசு விழ வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. இது போக இன்னும் சில சிறப்பம்சங்களும் உங்கள் அதிர்ஷ்டத்தை பறைசாற்றுகிறது.

தலை ரேகை
தலை ரேகை உயர்த்தி மேலே செல்வதை வைத்து தான் ஒருவரின் செல்வ செழிப்பை கணக்கிட முடியும். ஒருவரின் தலைரேகையின் முடிவுப் பகுதியில் கிளைகள் விட்டு மேல்நோக்கி சென்றால் அவர்கள் பணக்காரராக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இந்த கைரேகை உங்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்டம் வருவதை குறிக்கிறது.

ஆயுள் ரேகைக்கு மேலே
ஆயுள் ரேகைக்கு மேலாக கிளை ரேகை சென்றால் நீங்கள் திடீரென்று மில்லியனராக ஆகும் அதிர்ஷ்டம் கூட இருக்கிறது என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது. லாட்டரியில் மெகா பம்பர் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலியாக வரும் வாய்ப்புள்ளது என்று உங்கள் கைரேகை அம்சம் கூறுகிறது.

ஆரம்ப கிளை ரேகை
உங்கள் ஆயுள் ரேகை மற்றும் தலை ரேகையின் ஆரம்பிக்கும் இடத்திலேயே கிளை ரேகை மேல்நோக்கி சென்றால் உங்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்க வாய்ப்புள்ளது. லாட்டரியில் எளிதில் பரிசு பெற்று தங்கு தடையின்றி வாழ்க்கை நடத்த வாய்ப்புள்ளது.

வியாழன் மேடு
உங்கள் உள்ளங்கைகளில் உள்ள வியாழன் மேட்டில் நட்சத்திர வடிவ அடையாளம் காணப்பட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பதை தெரிவிக்கிறது. இது உங்களுக்கு எதிர்பாராத லாட்டரி அதிர்ஷ்டம் பம்பர் பிரைஸ் கிடைக்கலாம் என்பதை காட்டுகிறது.

உள்ளுணர்வு ரேகை
உங்கள் சுண்டு விரலின் அடிப்பாகத்தில் இருந்து கீழ்நோக்கி வளைந்து செல்லும் ரேகை தான் இந்த ஊள்ளுணர்வு ரேகை என்பது. இது உங்களுக்கு செல்வ செழிப்பு, அதிர்ஷ்டம் வருவதை குறிக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள் உள்ளுணர்வு மூலமும் வரப் போகின்ற வாய்ப்பை தட்டி அதிர்ஷ்டத்தை உங்கள் வசம் இழுப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
