Latest Updates
-
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்!
தன்னை காதலித்த பெண்ணுக்கே விநாயகர் ஏன் சாபமளித்தார் தெரியுமா?
வினைதீர்க்கும் விநாயகரை வணங்கினால் எந்த சாபமாக இருந்தாலும் விலகிவிடும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த விநாயகரே ஒருவருக்கு சாபமிட்ட சம்பவம் உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் குறிப்பாக இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு கடவுள் என்றால் அவர் பிள்ளையார்தான். இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளை வழிபடவும் ஒரு விதிமுறையும், கட்டுப்பாடும் இருக்கும், ஆனால் பிள்ளையார் மட்டும் அந்த விதிமுறைகளுக்குள் அடங்கமாட்டார். ஏனெனில் முழுமுதற் கடவுளான கணேசன் அனைத்து விதிகளையும் கடந்தவராவார்.

வினைதீர்க்கும் விநாயகரை வணங்கினால் எந்த சாபமாக இருந்தாலும் விலகிவிடும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த விநாயகரே ஒருவருக்கு சாபமிட்ட சம்பவம் உள்ளது. அதுவும் அவரை விரும்பிய பெண்ணுக்கே விநாயகர் சாபமிட்டார். விநாயகர் ஏன் தன்னை விரும்பிய பெண்ணுக்கே சாபம் கொடுத்தார்? யார் அந்த பெண்? விநாயகர் கொடுத்த சாபத்தின் விளைவு என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடவுள்களின் காதல்
இந்து புராணங்கள் முழுவதுமே நிறைய காதல் கதைகள் உள்ளது. சிவன் - பார்வதி, விஷ்ணு - லக்ஷ்மி, இராமன் - சீதை, முருகன் - வள்ளி என பெரும்பாலான கடவுள்கள் காதலித்தனர். எப்படி வெற்றிகரமான காதல்களாக இவை இருக்கிறதோ அதேபோல தோல்வியடைந்த காதல்களும் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் விநாயகரை விரும்பிய துளசியின் காதல்கதை.

துளசி
துளசி மரணத்தின் கடவுளான எமதர்மனின் மகள் ஆவார். அவர் தன் இளம் வயதில் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு சென்று நதியில் நீராடிவிட்டு விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

துளசியின் காதல்
இவ்வாறு தினமும் செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் கங்கையின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார். அவரின் தேஜஸை கண்டு மயங்கிய துளசி அவர் மேல் காதலில் விழுந்தார். அந்த தியானத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல விநாயகர்தான்.

துளசியின் வேண்டுகோள்
தியானத்தின் போது அவர் எழுப்பிய ஒலி அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்த எண்ணினார். அதனை நிறைவேற்றவும் செய்தார். உடனடியாக பிள்ளையாரிடம் சென்று தன்னை மணந்துகொள்ளும்பொடி கேட்டார்.

பிள்ளையாரின் பதில்
இதனை சற்றும் எதிர்பார்க்காத பிள்ளையார் அமைதியாக துளசியின் காதலுக்கும், திருமணம் பற்றிய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்தார். துளசி அதற்கு காரணம் கேட்டபோது தான் தன் தந்தை சிவபெருமானுக்கு எப்படி பார்வதி தேவி சிறந்த துணையாக இருக்கிறாரோ அதேபோல தானும் தனக்கு தன் அன்னையை போல இருக்கும் பொருத்தமான பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இயலும் என்று கூறினார்.

துளசியின் கோபம்
விநாயகரின் இந்த பதில் துளசியின் கோபத்தை அதிகரித்தது, இதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார். எனவே பிள்ளையாருக்கு சாபமிட துணிந்தார்.

சாபம்
தன் காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில் அவர் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டார். அதுவரை பொறுமைகாத்த பிள்ளையார் துளசியின் சாபத்தால் கோபமுற்றார். எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனைத்தான் திருமணம் செய்துகொள்வாய் என்று துளசிக்கு சாபமிட்டார்.

துளசியின் பயம்
விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார். உடனடியாக தன் தவறை உணர்ந்த துளசி விநாயகரிடம் மன்னிக்கும்படி கெஞ்சினார். துளசி கண்ணீர்விட்டு கெஞ்சுவதை பார்த்த விநாயகர் மனமிறங்கினார்.

சாப விமோட்சனம்
பிள்ளையார் தான் அளித்த சாபத்தையே ஆசீர்வாதமாக மாற்றினார். அதன்படி விஷ்ணுவின் அருளால் துளசி புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் எனவும், விஷ்ணுவை உன்னை கொண்டு பூஜிப்பார்கள் எனவும் கூறினார். ஆனாலும் நீ என்னிடம் இருந்து எப்போதும் விலகிதான் இருப்பாய் என்னை உன்னை கொண்டு பூஜிக்கக்கூடாது என்று கூறினார்.

துளசியின் திருமணம்
விநாயகர் கொடுத்த சாபம் பலித்தது, அதன்படி துளசி அரக்கர்களின் மன்னனான ஜலந்தரனையே மணக்க நேரிட்டது. அரக்கனான அவன் செய்த தவறுகளுக்குகாக பின்னாளில் அவனை சிவபெருமானால் வதைக்கப்பட்டான். அதன்பின் தானும் இறந்த துளசி விநாயகர் கூறியது போலவே புனிதமான துளசி செடியாக பிறந்தார்.



Click it and Unblock the Notifications