குழந்தை பிறந்ததும் வாளித்தண்ணீரில் மூழ்கடித்து கொல்லும் கொடூரம்!

Posted By:
Subscribe to Boldsky
குழந்தை பிறந்த அடுத்த நொடியே கொல்லும் கொடுரம்..!!- வீடியோ

ஆஸ்விட்ஸ் என்ற இடம் மரணத்திற்கான இடமென்று சொல்லப்படுகிறது, ஆம் அந்த இடத்தில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் அங்கே வாழ்ந்த மக்களின் சூழல், அவரக்ள் ஏன் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களை கொன்றது யார்??

ஸ்டானிஸ்லாவா என்ற பெண்மணி ஆஸ்விட்ஸில் இரண்டு வருடங்கள் நர்சாக பணியாற்றியிருக்கிறார். அவர் பணியாற்றிய காலத்தில் இவர் மட்டுமே சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். அப்போது நடந்த சம்பவங்களைப் பற்றியும், குழந்தை பிறந்த விதத்தையும் ஸ்டானிஸ்லாவா பகிர்ந்து கொண்ட பிறகு தான் அங்கு நடக்கும் அக்கிரமங்கள் உலகிற்கே வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1896 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டானிஸ்லாவா இளவயதிலிருந்தே பிறருக்கு உதவிடும் நோக்குடன் இருந்தார், ஆரம்பத்தில் திருமணம் குழந்தை என மிகவும் எளிமையான அதே நேரத்தில் சராசரியான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார். 1939 ஆம் ஆண்டு நாஸிக்கள் போலாந்திருக்குள் நுழைந்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது.

Image Courtesy

#2

#2

மொத்த நகரமும் காலியனாது, எல்லாரையும் குறிப்பிட்ட கெட்டோ என்ற பகுதிக்குள் அடைத்து இனி இது தான் நீங்கள் வாழும் பகுதி என்றார்கள். நாஸிகளுக்கு ஆதரவாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கெட்டோவில் ஸ்டானிஸ்லாவா அவரது நான்கு குழந்தைகள் மற்றும் பிற குடும்பத்தினர் எல்லாரும் இணைந்து கெட்டோவில் அடைபட்டு கிடக்கும் மக்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.

Image Courtesy

#3

#3

போலியான ஆவணங்களை எல்லாம் தயாரித்து, உள்ளே இருக்கும் போலந்து மக்களுக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு, ஒரு கட்டத்தில் அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. ஸ்டானிஸ்லாவாவின் கணவரும் மூத்த மகனும் தப்பித்து விடுகிறார்கள். ஸ்டானிஸ்லாவா மற்றும் அவரது பிற மூன்று குழந்தைகள் மட்டும் நாஸிக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

Image Courtesy

#4

#4

இரண்டு ஆண் குழந்தைகளை வேறு சிறை முகாமிற்கு கட்டாய வேலை செய்திட அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஸ்டானிஸ்லாவா தான் நர்சிங் படித்திருப்பதாக சொல்ல அவரையும், அவரது மகளையும் அங்கே மருத்துவ உதவி செய்ய வைத்துக் கொண்டார்கள். மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க ஸ்டானிஸ்லாவாவின் கணவர் தொடர்ந்து போராடினார் 1944 ஆம் ஆண்டு நாஸிக்களால் கொல்லப்பட்டார்.

Image Courtesy

#5

#5

அந்த முகாமிற்குள் ஒரு மருத்துவர் இருந்தார், ஜெர்மனைச் சேர்ந்தவர் அவர், எடுத்தவுடனேயே

ஸ்டானிஸ்லாவாவிற்கு குழந்தை பிறக்கும் வார்டில் பணியமர்த்தப்பட்டார். மிகவும் நெருக்கடியான காலகட்டம் என்று விவரிக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது.

மிகவும் குறுகிய இடம், கர்ப்பிணிப்பெண்களுக்கும் பிரசவம் பார்க்கும் இடத்தை விட இறந்தவர்களை புதைக்கும் இடம் தான் அதிகம் தேவைப்பட்டிருக்கிறது. அப்போதே கொத்து கொத்தாக பெண்கள் இறந்திருக்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

அதன் பிறகு, நாஸி படையினரால் கர்ப்பிணி என்று தெரிந்தால் ஆரம்ப கட்டத்திலேயே விஷப்புகை செலுத்தி கொல்லப்படுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். சிலருக்கு கருக்கலைப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#7

#7

இதையும் தாண்டி பிரசவம் வரை செல்லும் பெண்களைத் தான் ஸ்டானிஸ்லாவா இருக்கிற முகாமிற்கு அழைத்து வருவார்கள். அங்கே க்ளாரா என்ற இன்னொரு மருத்துவ உதவியாளரும் இருந்திருக்கிறார்.

அவருக்கு அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான வேலையே பிரசவிக்கும் குழந்தைகளை எல்லாம் கொன்றிட வேண்டும் என்பது தான்.

Image Courtesy

#8

#8

ஆம், ஸ்டானிஸ்லாவா டெலிவரி செய்யும் போது அருகிலேயே ஒரு பக்கெட் தண்ணீருடன் க்ளாரா நின்று கொண்டிருப்பார். குழந்தையை வெளியே எடுத்த அடுத்த நொடி அதனை வாங்கி தான் வைத்திருக்கும் பக்கெட்டில் போட்டு கொன்று விடுவார். எத்தனை குழந்தைகள் பிறந்தது, எத்தனை குழந்தைகளை கொன்றேன் என்ற கணக்கினை அதிகாரிகளுக்கு க்ளாரா தினமும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Image Courtesy

#9

#9

இதே வேலையை க்ளாரா தனியாக எதற்கு செய்ய வேண்டும் நீயே செய்து விடு என்று ஸ்டானிஸ்லாவாவிடம் சொல்லப்பட்டது. முடியவே முடியாது என்று மறுத்து விட்டிருக்கிறார். கூட்டம் பெருகிக் கொண்டேயிருக்கிறது, இப்போதே இவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் கேள்விக்குறியாக இருக்கிறது, இவர்களும் அடிமையாகத்தான் வாழ்வார்கள் அதற்கு கொன்று விடலாம் என்று என்னென்னவோ சமாதானங்கள் சொல்லப்பட்ட போதும், குழந்தையை கொல்லமாட்டேன் என்றிருக்கிறார் ஸ்டானிஸ்லா

Image Courtesy

#10

#10

கேட்கவில்லை என்பதால் மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள்,உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்து பார்த்தார்கள் ஸ்டானிஸ்லா மசியவில்லை. அதோடு க்ளாராவையும் குழந்தைகளை கொல்லக்கூடாது என்று தடுத்தார். நர்சிங் படித்திருந்த ஸ்டானிஸ்லாவின் உதவி அங்கே மிகவும் அவசியமாக இருந்ததினால் நாஸிக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

Image Courtesy

#11

#11

அங்கே பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது என்பது ஸ்டானிஸ்லாவிற்கு அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை போதுமான தண்ணீர் வசதி இல்லை, நான்கைந்த போர்வைகள் மட்டுமே இருந்தது, உணவு கிடையாது, குழந்தைகளுக்கான துணியும் மிகவும் சொற்பமாகத்தான் இருந்தது.

லேசாக தூரல் விழுந்தாலே கர்ப்பிணி பெண்கள் படுக்கவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு தண்ணீர் வந்துவிடும், அதோடு பூச்சிகள் தொல்லைவேறு.

Image Courtesy

#12

#12

இத்தனைக்கு நடுவில் அந்தப் பெண்களுக்கு பிரசவம் பார்த்து, குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார். குழந்தைகளை கொன்றிடும் சதித்திட்டம் நிறைவேறவில்லை என்பதால் நாஸிக்கள் இன்னொரு திட்டம் தீட்டினார்கள்.

குழந்தைகள் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் குழந்தைகள் வரை அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்கள்.

Image Courtesy

#13

#13

இதனை அறிந்த ஸ்டானிஸ்லா பிறந்தவுடன் குழந்தைகளுக்கு இந்த முகாமில் பிறந்தது என்பதை குறிக்கும் விதமாக அடையாளமாக பச்சை குத்தினார். எங்கோ வளரும் பட்சத்தில் தன் வேர்களைத் தேடி அலையும் போது, தான் யார் என்கிற அடையாளத்தை இந்த அடையாளம் கொடுக்கும் என்று நினைத்தார்.

Image Courtesy

 #14

#14

இப்படி பச்சை குத்திய அடையாளத்துடன் எங்கோ கண் தெரியாத தேசத்தில் குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லையா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தினம் தினம் வேதனை அடைவதற்கு கண்ணெதிரிலேயே கொன்று விடலாம்.

நிச்சயம் நாஸிக்கள் நம் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கமாட்டார்கள் என்று நினைத்த தாய்மார்கள் குழந்தையை கொன்றுவிட முன் வந்தார்கள்.

Image Courtesy

#15

#15

எப்படியும் என் குழந்தையை நாஸிப்படை கொன்றிடும் என்று நினைத்த பல தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்ககூட முன் வரவில்லை. தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்திருக்கிறார் ஸ்டானிஸ்வா. அந்த முகாமில் பணியாற்றிய இரண்டு வருடங்களில் ஸ்டானிஸ்லா சுமார் 3000 குழந்தைகளை பிரசவிக்க உதவியிருக்கிறார்.

Image Courtesy

#16

#16

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் க்ளாராவினால் பக்கெட் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தது. இன்னொரு ஆயிரம் குழந்தைகள் வரை போதிய உணவு,மருத்துவ வசதி மற்றும் குளிர் தாங்காமல் இறந்தது. ஐநூறு குழந்தைகள் ஸ்டானிஸ்லா குத்திய அடையாளத்துடன் எங்கோ யாருக்கோ அனுப்பி வைக்கப்பட்டது.வெறும் முப்பது குழந்தைகள் மட்டும் அதே முகாமில் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Nurse Killed Infant Babies In Delivery Room

Nurse Killed Infant Babies In Delivery Room
Story first published: Friday, March 9, 2018, 13:21 [IST]