Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
பலம் அதிகமாக தேவைப்படும் மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் இப்படி நடந்துகிட்டா லாபம் கொட்டும்
மீன ராசிகாரர்களுக்கான மே மாத பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மீன ராசியினரின் அதிர்ஷ்ட நாட்கள், ஆரோக்கியம் , தொழில் போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ளமுடியும்.
எல்லா ராசியினரின் கலவை தான் மீன ராசியினர். பொதுவாக தாராள குணம் கொண்டவர்கள் மீன ராசியினர். எப்போதும் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள். மீன ராசி்யினர் மிகவும் அன்பானவர்கள், அனைவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள், எல்லோரிடமும் நட்பாக பழகும் குணம் கொடவர்கள், நல்ல இயல்பும் இரக்க குண/மும் படைத்தவர்கள். இந்த குணங்களுடன் சேர்த்து சாகச உணர்வும் இலட்சியங்களும் கொண்டவர்கள். இதனால் அதிக ஆற்றலுடன் , எப்போதும் புத்துணர்ச்சியுடன் உணர்ச்சி தூண்டுதலுடன் செயல்படுவார்கள். சமூகத்தில் அனைவருடனும் நல்ல முறையில் பழகும் தன்மை கொண்டவர்கள்.
இத்தகைய நல்ல குணங்கள் கொண்ட மீன ராசியினருக்கு இந்த 2018ம் ஆண்டு மே மாதம் என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை எங்க ஜோதிட வல்லுனர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். மீன ராசியினர் இந்த பதிவைப் படித்து அவர்களின் மாத பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியம்
மே மாதம் 21ம் தேதி வரை உங்கள் உடல்நலத்தில் எந்த ஒரு தொய்வும் இருக்காது. மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். அதன் பிறகு அடிக்கடி உடல் நலத்தில் குறைபாடு தோன்றலாம். ஆகவே உங்களை நல்ல முறையில் ரிலாக்ஸ் செய்து கொள்ள தவற வேண்டாம். தியானம் மற்றும் ஆன்மீக வழியாக குணப்படுத்துதலை முறையாக செய்யலாம்.
தொழில்
இந்த மாதம் நீங்கள் அதிக வேலை பளுவை சுமக்க நேரலாம். உங்கள் கவலைகளையும் சேர்த்து சுமக்க வேண்டிய சூழல் வரும். உங்கள் வேலை இடத்தில் எந்த ஒரு அரசியலிலும் ஈடுபட வேண்டாம். மற்றவர்களின் குணங்கள் உங்களை பாதிக்கும் சூழல் உண்டாகலாம். ஆகவே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம்.
நிதி நிலைமை
இந்த மாதம் முழுவதும் லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். அவற்றை முழுவதும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசாங்க துறைகளில் வேலை செய்யும் நபர்கள் நல்ல லாபத்தை சந்திக்க நேரலாம். புதிய முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் தொடங்கும் வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இது அமைகிறது. இந்த மாதம் வணிக துறையில் உள்ளவர்கள் அதிக லாபத்தைப் பெறலாம். மீன ராசியினருக்கு வியாபாரத்தில் தொட்டது துலங்கும் ஒரு மாதம் இந்த மே மாதம் .
காதல் வாழ்க்கை
உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் உங்கள் துணையிடம் அதிக கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது. இந்த மாதம் சமூகத்தில் உங்கள் கவர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே தொடர்பில் இருக்கும் உறவில் ஒரு பின்னடைவு ஏற்படலாம். புதிதாக காதல் மலரவும் வாய்ப்புகள் உண்டு. நீங்களும் உங்கள் துணையும் வேறொரு மூன்றாம் நபருடன் தொடர்பு ஏற்படுத்த நேரலாம். இதற்காக பிற்காலத்தில் வருந்த வேண்டிய சூழல் உருவாகும்.
அதிர்ஷ்ட நாட்கள் மற்றும் நிறங்கள்
இந்த மாதத்தின் அதிர்ஷ்ட எண்கள் - 17, 40, 46, 61, மற்றும் 76.
இந்த மாதத்தின் அதிர்ஷ்ட தேதி - 6, 7, 8, 17, 18, 25, 26.
இந்த மாதத்தின் அதிர்ஷ்ட நிறங்கள் - பச்சை மற்றும் வெளிர் மஞ்சள்



Click it and Unblock the Notifications
