Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?
2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது.

இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ஜூன் மாத மீன ராசி பலன்கள்
அமைதியாகவும் நட்பாகவும் பழகும் நல்ல உள்ளம் கொண்ட மீன ராசி அன்பர்களே
இயற்கையாகவே நட்பு உங்கள் இயல்பாக இருக்கும். உங்கள் ஊக்குவிக்கும் கருத்துகளைக் கொண்டே பிறரை எளிதில் கவர்ந்து விடுவீர்கள். தங்கள் வழியில் வரும் தடைகளை எளிதில் கையாளக் கூடிய நபர்கள் நீங்கள். உங்களிடம் மென்மையான குணமும் பிறரை மன்னிக்கும் மனப்பான்மையும் எல்லையில்லாமல் இருக்கும். சூரியனை அடையாளமாகக் கொண்ட நீங்கள் உங்கள் காதலையும் உணர்வுகளையும் தவறாமல் வெளிப்படுத்துவீர்கள். ஒரு கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கும் நபர்கள் நீங்கள்.
இந்த ஜூன் மாதம் 2018 ஆம் ஆண்டு மீன ராசிபலன்படி பார்த்தால் மோதல்கள் மற்றும் சோதனைகள் நிறைந்திருக்கும்.உங்கள் புத்திசாலித்தனத்தையும், நுண்ணறிவையும் பயன்படுத்த வேண்டிய காலம் கட்டம் இது. உங்கள் ஜாதக கட்டம் 60 % சாதகமான சூழ்நிலையில் அமைகிறது. உங்கள் தொழில், பொருளாதாரம், உடல் நலம் மற்றும் காதல் வாழ்க்கை இவற்றை பற்றிய எதிர்கால கணிப்புகளை அறிந்து செயல்பட நாங்கள் உங்களுக்கு உதவப் போகிறோம்.

உடல் நலம்
இந்த மாதம் ஆரோக்கியத்திற்கு சாதகமாக அமையப் போவதில்லை. இந்த மாதம் 21 ஆம் தேதி வரை ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி உங்கள் உடலை பேணிக் காக்க உதவும்.
உங்களுடைய மனவலிமை உங்களை சில உடல் உபாதைகளிலிருந்து மீட்கும்.
முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை எடுத்து கொண்டு மன அழுத்தத்தை முற்றிலும் கைவிடுவது உடல் நலத்தை மேம்படுத்தும். துரித உணவுகளை தவிர்த்து சந்தோஷமாக இருந்தாலே போதும் உங்கள் உடல் நலம் மேம்படும்.

தொழில்
இந்த மாத தொடக்கத்திலயே உங்கள் கடின உழைப்பை காட்டி வெற்றிக் கனிகளை பறிக்க போகிறீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு மேலிடத்தில் இருந்து பாராட்டுகளையும் பரிசுகளையும் குவிப்பீர்கள். பணியிடங்களில் உங்கள் மரியாதை உயர்ந்து காணப்படும். உங்கள் சக ஊழியர்களும் உங்களை மதிப்பார்கள். பதவி உயர்வு போன்ற பேச்சுகள் சாதகமாக அமையும். அதிகமான மன அழுத்தம், அதிகமான வேலைப்பளு உடல் நல குறைவை ஏற்படுத்தலாம். எனவே ரிலாக்ஸ் ஆக செயல்படுங்கள்.

பொருளாதாரம்
புதிய தொழில் தொடங்குவதற்கும் பெரிய முதலீட்டிற்கும் இது சரியான மாதமாகும். பொருளாதார ரீதியாக இது உங்களுக்கு சரியான அணுகூலமான மாதமாகும். அரசாங்க ஒப்பந்தம் அல்லது புதிய வியாபார தொடக்கம் உங்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும். இருப்பினும் தனிப்பட்ட பண விஷயங்கள் மற்றும் நட்பு வட்டார பழக்கம் இவற்றில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

காதல் வாழ்க்கை
இந்த மாதம் காதல் வாழ்க்கைக்கு சாதகமாக அமையப் போவதில்லை. ஸ்பெஷலான உணர்வுப் பூர்வமான சில தருணங்களை இழந்து தவிப்பீர்கள். உங்கள் காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.அதே நேரத்தில் உங்கள் துணையின் காதல் உணர்வு மாற்றமடையாததை நினைத்து வருந்துவீர்கள். இதனால் உங்கள் துணையுடனான நெருக்கம் பின் வாங்கும். இதற்கு பொறுமையாகவும் துணிச்சலாகவும் நீங்கள் செயல்பட்டாலே போதும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதல் மேலோங்கும். குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால் சரியாக திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் சில அவசர நிலைகள் நிலவலாம். துணையுடனான நிலுவை விவகாரங்கள் எல்லாம் சரியாகும். எனவே இந்த மாதம் உங்கள் காதலை பொறுமையுடன் வெளிப்படுத்துங்கள். காதல் இனிக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் 3,9,12,15, 18மற்றும் 24
அதிர்ஷ்டமான நிறங்கள் :லிலாக், அடர்ந்த ஊதா, ஊதா மற்றும் கடல் பச்சை.



Click it and Unblock the Notifications