மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். மிதுன ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Suganthi Rajalingam

2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

ராசிகள்

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிதுன ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

மிதுன ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காணும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு ஜூன் மாதம் மிதுன ராசி சாதகமான அணுகூலன்களை பெறப் போகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலும் வேலையை தவிர்த்து குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மேலும் தொழில் ரீதியாகவும் உங்கள் ராசிநாதன் நிறைய அணுகூலன்களை அள்ளி வழங்கப் போகிறார். சற்று விரோதமான தந்திரமான சூழல்கள் வேலையிடங்களில் நிலவினாலும் சமாளித்து நட்பு உறவை வளர்ப்பீர்கள். சமூக நிலையில் உயர்ந்தவர்களாக மாற செல்வாக்குள்ள மக்களை அறிவீர்கள்.

புதிய அறிமுகங்கள் உங்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தை கொடுக்கும். எனவே அதை வளர்த்து கொள்ளுங்கள். எந்தவொரு வாய்ப்பையும் இழக்காமல் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். தனிமையில் மேற்கொள்ளும் பயணங்கள் கண்டிப்பாக ஒரு வெகுமதியை ஈட்டித் தரும். இந்த மாதத்தின் முதல் சில நாட்கள் பரபரப்பாகவும் மன அழுத்தத்துடனும் இருக்கும். இம்மாதத்தின் 21 ஆம் தேதிக்கு பிறகு ஒரு காதல் துணை கிடைக்கும். சரி வாங்க உங்கள் உடல் நலம், பொருளாதாரம், தொழில் மற்றும் காதல் வாழ்க்கை இவையெல்லாம் இந்த மாதத்தில் எப்படி இருக்கப் போகிறது என்று உங்கள் ராசிப்படி பார்க்கலாம்.

உடல் நலம்

உடல் நலம்

உங்கள் ராசியில் இருக்கும் சனி பகவான் உங்கள் உடல் நலப் பிரச்சினைகளை துரத்தி அடிக்கிறார். இந்த வருடம் முழுவதும் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒரு நிரந்தர உடல்நல மேம்பாடு ஏற்படும். அதே நேரத்தில் உங்கள் உடல் நலனை லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. இல்லையென்றால் மறுபடியும் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

இந்த மாதத்தில் நிலவும் கிரகணம் உங்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் பாலியல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இரவு நேர வாகனப் பயணத்தால் விபத்து உண்டாக வாய்ப்புள்ளது. சலதோஷம் மற்றும் இருமல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இந்த மாதிரியான சிறு உபாதைகளை வீட்டு வைத்தியங்கள் கொண்டே சரி செய்து பலனடையலாம். தேவையென்றால் மருத்துவரை நாடி உடல் நலத்தை பேணுதல் நல்லது.

தொழில்

தொழில்

உங்கள் இலட்சியப் பாதைக்கு தடைக்கற்களான விஷயங்களை கண்டறிந்து செயல்படுவீர்கள். உங்கள் முனைப்பான ஓட்டம் ஒரு ஓய்வை தருமே தவிர வெற்றியை தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தரமான மற்றும் அளவான செயல்பாடுகள் உங்கள் இலட்சியத்தை நோக்கிச் செல்ல உதவும். உங்கள் கவனச் சிதறல்களை களைந்து கவனத்துடன் பணி புரிந்தால் எந்த வேலையும் தவறே இல்லாமல் செய்ய முடியும்.

உங்கள் தொடர்பு கொள்ளும் திறன் மூலம் புதிய அறிமுக நபர்கள் உங்கள் தொழிலுக்கு உதவியை அள்ளித் தருவார்கள். நீங்கள் எங்கு சென்றாலும் முக்கியமான நபர்களின் அபிப்பிராயத்தை தவறாமல் பெற்று கொள்ளுங்கள்.

தொழிலில் ஏற்படும் கடுமையான சூழ்நிலையை கையாள பொறுமை கையில் இருப்பது அவசியம். கூட்டுத் தொழிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. வருகின்ற வாய்ப்புகளை கவனமாக கையாண்டாலே போதும் நிறைய லாபத்தை ஈட்டலாம்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

சந்திரனின் பார்வை உங்களுக்கு பொருளாதார ரீதியில் சாதமாக அமைந்துள்ளது. முதலீடுகள் அதிக லாபத்தை ஈட்டித் தரும். இந்த மாதத்தின் முதல் பாதியில் புதிய வழிகளிலெல்லாம் பண வரவு வரும். கடின உழைப்பை மேற்கொண்டால் கண்டிப்பாக வெகுமதி கிடைக்கும். இருப்பினும் பணத்தை செலவழிக்கும் போது அதிக கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் நிம்மதியும் சந்தோஷமும் கிட்டும். சாதகமான நேரத்தை பார்த்து புதிய முதலீடுகளை தொடங்குவது நல்லது. தொழில் ரீதியான பயணம் நன்மைகளை ஈட்டித் தரும்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

இந்த மாதம் நடுப்பகுதி வரை உங்கள் துணையுடன் வாதங்கள் ஏற்படலாம். இது வேறுபட்ட மனோபாவங்கள் மற்றும் காரணங்களால் உருவாகலாம். உங்கள் இருவருக்கிடையே உள்ள பிரச்சினையை தீர்க்க நீங்கள் முதலில் முன்னெடுத்து வையுங்கள். இந்த நடத்தை உங்கள் துணையின் மனதில் உங்கள் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்கு ஏத்த ஒரு துணையை சந்திப்பீர்கள். சில சமயங்களில் இது ஒரு பாலியல் ஈர்ப்பாகவோ அல்லது உண்மையாக இருக்காமல் கூட போகலாம். எனவே நன்கு அறிந்து உங்கள் துணையை தேர்ந்தெடுங்கள். கண்டிப்பாக உங்கள் காதல் வாழ்க்கை இனிக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்

இந்த மாத அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டமான நிறங்கள் :சிவப்பு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான எண்கள் :4 மற்றும் 9

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion