மிதுன ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

Posted By:
Subscribe to Boldsky

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு எப்படி அமையும். இந்த வருடம் முழுக்க என்ன மாதிரியான பலன்களை அடைவார்கள் என்று பார்க்கலாம்.

பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிரக நிலைகள் கெடுபலன் எதுவும் தராத நிலையில் விளம்பி ஆண்டு உங்களுக்கு துன்பங்கள் எதுவும் தராமல் நன்மைகளை மட்டுமே தரும் ஆண்டாக அமையும்.

tamil new year 2018

இதுவரை உங்களுக்கு என்னவெலல்லாம் கிடைக்காமல் இருந்ததோ அவை ஒவ்வொன்றாக இந்த ஆண்டு கிடைக்கத் துவங்கும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் எல்லா விஷயங்களிலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம் உஙக்ள் பக்கம் இருக்கும்.

கிரக நிலைகள் மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக உங்களின் வாழ்க்கை அனைத்து விதமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்வீர்கள். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இனி நீங்கி, உங்களுக்கான புதிய பாதை திறக்கும்.

இந்த விளம்பி வருடத்தில் உங்களுடைய மன தைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடும் வேலையே இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த எல்லா விஷயங்களிலும் நீங்களே தலைகீழ் மாற்றங்களையும் உங்களுடைய துணிச்சலையும் கண்டு வியப்படைவீர்கள். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவி செய்வார்கள்.

இளைஞர்களுக்கு படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வந்து சேரும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். பொருளாதார உண்டாகும் ஆண்டாக இந்த விளம்பி வருடம் திகழும்.

வியாபாரிகளுக்கு அற்புதமான உயர்வைத் காலகட்டம் இது. புதிய தொழில் தொடங்கவோ அல்லது கிளைகளை விரிவுபடுத்தவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ மிகச் சரியான நேரம் இஇதுதான். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளிவிட்டு சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கலாம். அதில் வெற்றி கொடியும் நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி நிரந்தர வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையைத் தர கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்து கமிஷன் போன்ற பிற வகைகளிலும் மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.அில் அதிர்ஷடம் உங்கள் பக்கமே இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தியவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பேறு உண்டாகும்.

ராகு நன்மையை மட்டும் செய்யும் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில் பண லாபம் இருக்கும். இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை கொடுத்துவிடுவீர்கள். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து இருந்தால் அதையும் நிறைவேற்றுவீர்கள்.

கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எதிலும் அவசரப்பட வேண்டாம். சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்துக்கள் வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்க ஆரம்பிப்பீர்கள்.

நண்பர்களால் மகிழ்ச்சிஉண்டாகும். ஒன்றாகக் கூடி மகிழ்வீர்கள். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனை வாங்குவதோ செய்ய நேரம் கைகூடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகள் நடக்கும்.

பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும். வழக்கு, நீதிமன்றம், போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் ஆண்டாகும். பெண்களின் மதிப்புகள் உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்களும் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும்.

கமிஷன் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் 'லம்ப்'பாக கிடைக்கும். அதை சுப காரியங்களுக்கோ தொழில் விருத்திக்கோ பயன்படுத்தினால் அந்த பணம் பெருகும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது ஓரளவிற்குக் கை கொடுக்கும். அதற்காக பேராசைப்பட்டு தவறான சில முடிவுகளை எடுக்காதீர்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் பேங்கில் பணம் டெபொசிட் செய்யலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருடம் பெரும் திருப்பு முனையான தமிழ்ப் புத்தாண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

Read more about: tamil new year
English summary

mithunam rasi vilambi tamil new year horoscope 2018

tamil new year vilambi varuda palangal 14.4.18
Story first published: Saturday, April 14, 2018, 12:28 [IST]