For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன?

இங்கே மகாபாரதத்தில் உள்ள சக்கர வியூகத்தின் ரகசியம் மற்றும் கணித சூத்திரத்தின் அடிப்படை பற்றியும் இங்கே பேசப்பட்டிருக்கிறது.

|

குருஷேத்திரத்தில் 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரதப் போர் நம் எல்லோருக்குமே தெரியும். அது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இ்யே நடந்த போராகச் சொல்லப்படுகிறது. அந்த போரில் என்ன தான் கிருஷ்ணர் திட்டம் போட்டுக் கொடுத்தாலும் பாண்டவர்களின் வீரமும் செயலாற்றலும் மிக மிக முக்கியமானது.

mathematical secrets of chakra viyugam

அதிலும் அர்ஜூனன் சக்கிர வியூகத்தை உடைத்த விஷயம் என்பது மிகச் சாதாரண விஷயம் கிடையாது. அதை உடைப்பதற்கு தனி புத்திக்கூர்மையும் அறிவாற்றலும் வேண்டும். அப்படி என்ன தந்திரத்தைப் பயன்படுத்தி அர்ஜூனன் சக்கர வியூகத்தை உடைத்தார் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்கிர வியூக ரகசியம்

சக்கிர வியூக ரகசியம்

சக்கிர வியூகத்திற்குள் மிகப்பெரிய கணித சூத்திரம் ஒன்று உள்ளது. அந்த சூத்திரத்தின் மர்மம் தெரிந்தால் மட்டும் தான் அதை உடைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும். அதை மிகச்சிறப்பாக, மகாபாரதத்தில் அர்ஜூனன் செய்திருப்பார். அதாவது சக்கிர வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும். அதனால் அதை உடைக்கும்போது, 1/7 என்ற அளவீட்டில் வகுக்கும்படி கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் சக்கிர வியூகத்துக்குள் ஒளிந்திருக்கும் தந்திரம். ஒவ்வொரு சக்கரம் உடைபடும் போதும் அந்த இடத்துக்கு ஒரு புதிய ஆள் அந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள். அந்த சக்கரம் திரும்பத் திரும்ப சுழன்று கொண்டே இருக்கும்.

சக்கிர வியூகம்

சக்கிர வியூகம்

மகாபாரதம் என்பது இந்திய வரலாற்றினுடைய மிக அசைக்க முடியாத ஒரு காவியம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கின்ற போரினைப் பற்றிய காவியம் இது. இந்த போரானது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகும். இந்த போரில் கிட்டதட்ட பூமியில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போயினர். இந்த போரில் மிக முக்கியமே கிருஷ்ணர் அவதாரம் தான். போரில் பாண்டவர்களுக்கு பெரும் இழப்பைக் கொடுத்தது போரின் பதிமூன்றாம் நாள் தான். அதற்கு மிக முக்கியக் காரணமே துரோணாச்சாரியார் அமைத்துக் கொடுத்த சக்கிர வியூகம் தான். அத்தகைய சக்கிர வியூகத்தை ஒருவேளை அர்ஜூனர் உடைக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக கௌரவர்கள் வெற்றி அடைந்திருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

சேனைகள்

சேனைகள்

பாண்டவர்களைப் பொறுத்தவரையில், மொத்தமாக ஏழு அஃரௌனிகள் அளவு கொண்ட சேனைகள் இருந்தன. ஆனால் கௌரவர்களிடம் மொத்தம் பதினோரு அஃரௌனிகள் அளவு கொண்ட படைகள் இருக்கின்றன. ஒரு அஃரௌனி சேனை என்பது இரண்டு லட்சத்து பதினெட்டாயிரம் பேரைக் கொண்டது. அதாவது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் என இரண்டு பக்கமும் சேர்த்து, குருஷேத்திரப் போரில் மொத்தமாக முப்பத்து ஒன்பது லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர்.

அபிமன்யு

அபிமன்யு

குருஷேத்திரப் போரின் பதிமூன்றாவது நாள். சக்கிரவியூகத்தில் சிக்கி தான் அபிமன்யு உயிரிழந்தான். ஏனெனில் அபிமன்யுவால் சக்கிர வியூகத்திற்குள் செல்லத் தான் தெரியுமே தவிர, வெளியே வரத் தெரியாது. அபிமன்யு தன்னுடைய தாயின் கர்ப்பத்தில் இருக்கும்பொழுதே சக்கிர வியூகத்துக்குள் நுழைவதற்குக் கற்றுக் கொண்டான். வெளியே வரும் வித்தையைப் பற்றி தன் தந்தையாகிய அர்ஜூனன் சொல்லித் தருவதற்குள் சுபத்திரை தூங்கிவிட்டதால், வெளியே வரும் வித்தையை வொல்லாமல் விட்டுவிட்டான் அர்ஜூனன்.

போர் வேளையில், தர்மனைக் காப்பாற்றவதற்காக சக்கிர வியூகத்துக்குள் சென்ற அபிமன்யு வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டபோது, ஏழு மாவிரர்களால் அபிமன்யு தாக்கப்பட்டு, கொல்லப்பட்டான். அந்த சிறு பாலகனைக் கொல்வதற்கு ஏழு பெரும் மாவீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

துரியோதனன் செய்த சதி

துரியோதனன் செய்த சதி

பாரதப் போரில் பீஷ்மர் வீழ்ந்த பின்னர் பெரிய பலத்தை இழந்து ந்னறது கௌரவர் படை. பீஷ்மர் இறந்த பின்பு கௌரவ சேனைக்கு தலைமை தாங்கினார் துரோணாச்சாரியார். சகுனியின் ஆலோசனைகளைக் கேட்டு, போரின்போது, தர்மனை சிறைபிடித்துத் தர வேண்டும் என்று துரியோதனன் துரோணாச்சாரியாரிடம் கோரிக்கை விடுத்தான்.

தர்மனை சிறைபிடித்தால், பாண்டவர்களில் மற்றவர்களும் தானாக வந்து சரணடைந்து விடுவார்கள் என்பது தான் அந்த திட்டம். மீண்டும் அவர்களை சூதாட்டத்தில் அமர வைத்து, தோற்கடித்து ஒட்டுமொத்தமாக வனவாசம் அனுப்பி வைத்த விடலாம் என்று திட்டம் போட்டான் துரியோதனன். சிறை பிடித்துவிட்டால், தர்மனை தன் கையால் கொல்ல வேண்டிய அவசியம்இல்லை என்பதால் துரோணரும் இதற்கு ஒப்புக் கொண்டார்.

ஜெயத்ரதன் பலம்

ஜெயத்ரதன் பலம்

சிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனான ஜெயத்ரதன் வனவாசத்தில் இருந்த போது, திரௌபதியை கவர்ந்து செல்வதற்கு முயற்சி செய்தான். அப்போது பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டான். அதற்குப் பழிவாங்க, சிவபெருமானிடம் இருந்து ஒரே ஒரு நாள் மட்டும் தன்னை யாரும் தோற்கடித்துவிடக் கூடாது என்ற வரம் ஒன்றை வேண்டிப் பெற்றுக் கொண்டான். அப்படி பெற்ற வரத்தை போரின் மதிமூன்றாம் நாள் பயன்படுத்தத் திட்டமிட்டு இருந்தான். அர்ஜூனனை மேற்கு திசை நோக்கி போர் புரிய அனுப்பிவிட்டு, இங்கே தர்மனை சிறை பிடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டனர். அந்த திட்டத்தை நிறைவேற்றவே சக்கர வியூகம் அமைத்தனர்.

அபிமன்யு நுழைவு

அபிமன்யு நுழைவு

பாணடவர்களின் தரப்பினில் துருபதன் மற்றும் அர்ஜூனனுக்கு மட்டுமே சக்கர வியூகத்தை உடைக்கும் வித்தை பற்றி முழுமையாகத் தெரியும். ஏனெனில் துருபதனும் துரோணரும் ஒரே குருகுலத்தில் சக்கர வியூகத்தைப் பற்றி கற்றவர்கள். ஆனால் போரின் பதிமூன்றாம் நாளில், துருபதனை துரியோதனன் மூர்ச்சையாகிவிட்டான். அர்ஜூனனும் மேற்கு திசையில் போர் புரிந்து கொண்டிருக்கிறான். இந்த சமயம் பார்த்து, சக்கிர வியூகம் தங்களுடைய படைகளை நாசமாக்குவதைக் கண்ட அபிமன்யு சக்கிர வியூகத்தை உடைத்து உள்ளே சென்றுவிட முடிவெடுத்தான். அவனைத் தொடர்ந்து பீமனும் தர்மனும் அபிமன்யுவை காக்க முடிவு செய்தனர்.

வியூகத்தினுள் அபிமன்யு

வியூகத்தினுள் அபிமன்யு

தன்னுடைய தாயான சுபத்திரையின் வயிற்றுக்குள் இருக்கும்பொழுது, தான் கற்றுக்கொண்ட, சக்கிர வியூக உத்தியைப் பயன்படுத்தி சக்கர வியூகத்துக்குள் நுழைந்தான் அபிமன்யு. மற்றவர்கள் அபிமன்யுவை பின்தொடர்வதற்குள் ஜயத்ரதன் வந்து, அவர்களைத் தடுத்துவிட்டான். சிவபெருமானிடம் தான் பெற்ற வரத்தின் மூலமாக, ஜெயத்ரதனை எவராலும் வெல்ல முடியவில்லை. அதேசமயம் சக்கர வியூகமும் மூடிக்கொண்டது. அப்போது, வியூகத்துக்குள் இருந்த அபிமன்யு ஒவ்வொருவராகத் தாக்கி, வெளியே வர முயற்சி செய்து கொண்டிருநு்தான். அவன் தாக்கியவர்களுள் துரியோதனின் மகனும் ஒருவன் என்பதால், ஆத்திரமடைந்த துரியோதனன் துரோணர், கர்ணன், துச்சாதனன் ஆகியுாரிடம் அபிமன்யுவை கொல்வதற்கு உத்தரவிட்டான். இடைசியில் கர்ணன் அபிமன்யுவை கொன்றுவிட்டான்.

கணித மாயம்

கணித மாயம்

ஒவ்வொரு எண்ணையும் கடக்கின்ற பொழுது, ஒரு எண்ணை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இறுதியாக உள் நுழைகின்ற பொழுது, வழக்கத்தை விடவும் ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும். அப்பொழுது தான் அந்த சக்கிர வியூகத்தை உடைக்க முடியும். இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படி இந்த எண்ணானது நீண்டு கொண்டே போகும். இந்த எண்ணை 7 ஆல் பெருக்கும்போது மட்டும் தான் இந்த சுழல் எண்ணானது மாறிக் கொண்டே இருக்கும். 0.142857142857142857*7 = 0.99999999999999 இந்த முறையின்படி தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இப்படித்தான் அர்ஜூனனும் சக்கிர வியூகத்தை உடைத்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

mathematical secrets of chakra viyugam

here we talking about the secrets of chakra viyuga and that mathematical challenges.
Story first published: Friday, August 17, 2018, 17:40 [IST]
Desktop Bottom Promotion