For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பொது இடங்களில் ஷூ, செருப்பு, தக்காளியால் அடிவாங்கிய பிரபலங்கள்!

  |

  முன்பு இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெரிதாக நடந்ததில்லை. கடந்த 2008ம் ஆண்டு ஜியார்ஜ் டபிள்யூ புஷ் மீது இப்படியான ஒரு தாக்குதல் நடந்த பிறகு தான், இப்படி ஷூ செருப்பு கொண்டு வீசி ஒரு பெரும் தலைவர்கள் அல்லது பிரபலங்களை தாக்கினார்ல் அவர்கள் பெருத்த அவமானத்திற்கு ஆளாவார்கள் என கருதி பலர் இப்படிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  பெரும்பாலும், இப்படியான நிகழ்வுகள் அரசியல் தலைவர்கள் மீது கோபம் கொண்ட பொது மக்களாலும், நிருபர்களாலும், எதிர் கட்சி ஆதரவாளர்களாலும் தான் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் நடிகை தமன்னா மீது அவரது ரசிகர் ஒருவரே இப்படி ஒரு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தமன்னா!

  தமன்னா!

  நாள்: கடந்த ஞாயிறு!

  ஐதராபாத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை தமன்னா மீது ஒரு நபர் ஷூவை கழற்றி எறிந்துள்ளார்.

  இந்த சம்பவம் நடந்த மறுகணமே அவரை சுற்றி இருந்த காவலர்கள் அந்த நபரை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அந்த நபர் பெயர் கரீமுல்லா என்றும் அவர் முஷீரபாத் பகுதியை சேர்ந்தவர் என்றும் அறியவந்தது.

  காரணம் கேட்டதற்கு, இப்போது தமன்னா தெலுங்கு படங்களில் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார். இப்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் இந்த நபரை காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

  பாகிஸ்தான் முதல் மந்திரி!

  பாகிஸ்தான் முதல் மந்திரி!

  நாள்: ஏப்ரல் 7, 2008!

  பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அர்பாப் குலான் ரஹீம் புதிதாக தேர்வு செய்யப்பட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டிருந்த போது பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் அகவ் ஜாவத் பதான் என்பவர் ஷூவை கழற்றி அவர் மீது எறிந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு, கூட்டத்தில் இருந்து பின்வாசல் வழியாக அர்பாப் வெளியேறினார்.

  Image Courtesy: newspakistan.pk

  அமெரிக்க அதிபர் புஷ்!

  அமெரிக்க அதிபர் புஷ்!

  நாள்: டிசம்பர் 14, 2008

  ஈராக் பாக்தாத்தில் நடந்த ஒரு ஊடக செய்தி தொடர்பு கூட்டத்தில் அன்றைய அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் டபிள்யூ புஷ் பேசிக் கொண்டிருந்த போது முண்டதர் அல் ஜெய்தி என்ற நிருபர் புஷ் மீது ஷூவை கழற்றி எறிந்தார். அப்போது அவர் "இது தான் ஈராக் மக்களிடம் இருந்து உனக்கான பிரியாவிடை முத்தம், நாயே" என்று கத்தியப்படி அவர் ஷூவை கழற்றி எறிந்தார். மேலும், இரண்டாவது ஷூவையும் கழற்றி எறிந்தார்.

  உக்ரைன் அரசியல்வாதி!

  உக்ரைன் அரசியல்வாதி!

  நாள்: டிசம்பர் 20, 2008

  உக்ரைன் அரசியல்வாதி ஒருவர் அருவருக்கத்தக்க ரீதியில் பேசிய போது அந்நாட்டை சேர்ந்த நிருபர் இஹோர் டிமிற்றிவ் என்பவர் ஷூவை அந்த அரசியல்வாதி மீது வீசினார். ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த உக்ரைன் அரசியல்வாதி பெண்களின் உடல் பாகங்களை குறித்து விமர்சனம் செய்ததால் கோபமடைந்த இந்த பெண் நிருபர் வேண்டுமென்றே காத்திருந்து ஷூவை கழற்றி வீசியுள்ளார்.

  சீன பிரதமர்!

  சீன பிரதமர்!

  நாள்: பிப்ரவரி 2, 2009

  அன்றைய சீன பிரதமர் வென் ஜியாபோ லண்டனில் பிரிட்டிஷ் பிரதமருடன் சீனா மற்றும் பிரிட்டிஷ் இடையே இருக்கும் வர்த்தக ரீதியான உறவை குறித்து பேசிக் கொண்டிருந்தார். காம்ப்ரிஜ் பல்கலைகழகத்தில் "See China in the Light of her Development" என்ற தலைப்பில் இவர் பேசிக் கொண்டிருக்கும் போது, உரை முடியும் தருவாயில் ஒரு 27 வயதுமிக்க ஜெர்மானிய நபர் கத்தி திட்டிக் கொண்டே வென்னை நோக்கி ஷூவை வீசினார். ஆனால், அந்த ஷூ வென் மீது படவில்லை, அவர் நின்ற இடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளியே விழுந்தது. ஷூவை வீசும் போது உன்னை எண்ணி வெட்கிறேன் என கத்திக் கொண்டே வீசினார்.

  முன்னாள் உள்துறை அமைச்சர்!

  முன்னாள் உள்துறை அமைச்சர்!

  நாள்: ஏப்ரல் 7, 2009.

  அன்றைய உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் மீது ஜர்னைல் சிங் எனும் சீக்கிய நிருபர் ஷூவை கழற்றி வீசினார். 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் குறித்தும், சிபிஐ விசாரணை குறித்தும் ஜர்னைல் கேள்வி எழுப்பினார். அதற்கு சிதம்பரம், அது மத்திய அரசின் கைகளில் இல்லை, சிபிஐ மற்றும் கோர்ட் கைகளில் தான் அதற்கான முடிவு இருக்கிறது என்று கூறினார். இந்த பதிலை ஏற்க முடியாத அந்த நபர் ஷூவை கழற்றி கோபத்துடன் வீசினார். ஆனால், சிதம்பரம் அடிப்படாமல் தப்பித்துவிட்டார்.

  அத்வானி!

  அத்வானி!

  நாள்: 16 ஏப்ரல், 2009.

  பிஜேபி கட்சியின் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பவாஸ் அகர்வால் என்பவர் பிஜேபியின் முக்கய தலைவர்களுள் ஒருவரான லால் கிருஷ்ணா அத்வானி மீது செருப்பை கழற்றி வீசினார். இதற்காக அகர்வால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் இருக்கும் கட்னி என்ற டவுன் பகுதியில் நடந்தது.

  மன்மோகன் சிங்!

  மன்மோகன் சிங்!

  நாள்: ஏப்ரல் 26, 2009

  முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அகமதாபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த போதுஅவர் மீது 28 வயது மிக்க நபர் ஒருவர் ஷூவை கழற்றி வீசினார். ஆனால், அது அவர் மீது படவில்லை. இந்த சம்பவம் நடந்த மறுநொடியே அந்த நபரை கூட்டத்தில் இருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

  அதே நேரத்தில் மன்மோகன் சிங் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் பாரதிய ஜனதா கட்சியினரால் நடத்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டது.

  ஆசிப் அலி ஜர்தாரி!

  ஆசிப் அலி ஜர்தாரி!

  நாள்: ஆகஸ்ட் 7, 2010.

  பாகிஸ்தான் அதிபராக இருந்த ஆசிப் அலி ஜர்தாரி மீது 50 வயது மிக்க சர்தார் ஷமீம் கான் என்பவர் தனது ஒரு ஜோடி ஷூவை கழற்றி எறிந்தார். இந்த நிகழ்வு இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் நடந்தது. அதன் பிறகு கானை ஆசிப்பின் காவலர்கள் அடித்து விரட்டினார்கள்.

  பர்வேஸ் முஷாரஃப்!

  பர்வேஸ் முஷாரஃப்!

  நாள்: பிப்ரவரி6, 2011.

  பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் லண்டனில் பேசிக் கொண்டிருந்த போது பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க காவலை எதிர்த்து இளைஞர் பர்வேஸ் முஷாரஃப் மீது ஷூவை கழற்றி எறிந்தார்.

  அரவிந்த் கெஜ்ரிவால்!

  அரவிந்த் கெஜ்ரிவால்!

  நாள்: அக்டோபர் 18, 2011.

  ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் லக்னோவில் பேசிக் கொண்டிருந்த போது ஜிதேந்திர பதாக் என்ற நபர் ஷூவை வீசினார். ஆனால் அதிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் தப்பித்துவிட்டார். மேலும், அடுத்த வாரத்திலேயே பிரஷாந்த் பூஷன் என்பவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கினார்.

  ராகுல் காந்தி!

  ராகுல் காந்தி!

  நாள்: ஜனவரி 23, 2012.

  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது டேராடூன் தேர்தல் பயணத்தின் போது ஒரு நபர் ஷூவை கழற்றி வீசினார். இந்த சம்பவம் நடந்த போது,ராகுல் காந்தி, "யாரேனும் இப்படி ஷூவை கழற்றி வீசினால் ராகுல் ஓடிவிடுவார் என்று கருதியிருந்தால். அது அவர்களது தவறு. ராகுல் இது போன்ற சம்பவங்களுக்கு அஞ்சி ஓடுபவன் இல்லை" என்று கூறியிருந்தார்.

  ஹிலாரி கிளிண்டன்!

  ஹிலாரி கிளிண்டன்!

  நாள்: ஜூலை 15, 2012.

  எகிப்தில் ஹிலாரி கிளிண்டன் பேசிக் கொண்டிருந்த போது மோனிகா, மோனிகா என்று கத்தியப்படி, அவர் மீது ஷூ மற்றும் தக்காளிகள் வீசப்பட்டன. மோனிகா என்ற பெண்ணுடன் தான் ஹிலாரியின் கணவரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் தகாத உறவில் இருந்து சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  List of Shoe-Throwing Incidents on Celebrities!

  List of Shoe-Throwing Incidents on Celebrities!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more