Latest Updates
-
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை!
இனிமே யாராவது ஹோம்வொர்க் கொடுப்பீங்க??
சோம்பேறித்தனத்தால ஸ்மார்ட்டா வேலை பார்த்து பாக்குறவங்க அசத்தின சில போட்டோஸ் உங்களுக்காக ஒரு தொகுப்பு
எப்போதும் பரபரப்பாக எல்லாம் வேலை பார்க்க முடியாது தான். அது போன்ற நேரங்களில் ஸ்மார்ட் வொர்க் பக்கம் ஒதுங்கியவர்கள் இன்று பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் வொர்க்கிலேயே இருக்கிறார்கள்.
அவர்களின் சோம்பேறித்தனத்தை சமாளிக்க என்னென்ன ரிஸ்க் எல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்பதன் ஒரு சின்ன தொகுப்பு. இப்படியெல்லாம் யோசிப்பார்களா என்று எல்லாரையும் வியக்க வைக்கும் சில படங்களின் தொகுப்பு

#1
பாத்ததும் ஒண்ணும் புரியலயா? கண்ணுக்கு முன்னாடி எதுக்கு ஒரு கேரி பேக்க தொங்க விட்டிருக்காங்க...? மேடம் வாட்டர் மெலன் சாப்பிடுறாங்க பழத்த நறுக்கி ஸ்லைஸ் பண்ணக்கூட நேரமில்லாம அப்படியே குழி தோண்டி சொரண்டி எடுத்து சாப்பிடுறாங்க உங்களுக்கு தான் தெரியுமே... தர்பூசணி பழத்துல கொட்டை நிறைய இருக்கும் .
சாப்பிடும் போது டிஸ்டர்ப் ஆகும்.... என்ன பண்றதுன்னு யோசிச்சு கண்டுபிடிச்சது தான் இந்த டெக்னிக். அதுவும் போட்டிருக்க கண்ணாடி எல்லாம் ஸ்டாண்ட்டா யூஸ் ஆகும்னு யாரும் யோசிச்சிருக்க கூட மாட்டோமேம்மா.... அப்பிடி என்ன பிஸியான வேலை பாக்குறாங்க தெரியுமா? டிவில பாக்க மறந்த சீரியல நெட்ல டவுன்லோடு பண்ணி பாத்துட்டு இருக்காங்களாம்!

#2
கடைக்கு போய் வாங்கிட்டு வர்றத விட பெரிய வேலை என்ன தெரியுமா? அத கரெக்டா அடுக்குறது தான். அதுக்கு தான் இவர் கண்டுபிடிச்ச இந்த ஐடியா ஒரு பக்கம் யோசிச்சா அட ஆமால்ல இவர் சொல்றதும் கரெக்ட் தானன்னு தோணும்
முட்டை கரெக்டா அவனே அடுக்கித் தந்திடறான் அப்பறம் எதுக்கு நம்ம தனியா எடுத்து அடுக்கிட்டு.... அத அப்பிடியே வச்சிடலாம் தான.... அதான?

#3
இது சோம்பேறித்தனத்தால காண்டுல செஞ்சது. இந்த விஞ்ஞானியோட கேர்ள் ஃபிரண்ட் எப்ப பாத்தாலும் சோம்பேறின்னு திட்டிகிட்டே இருந்தாங்களாம்... கடுப்பாகிப்போன ஹீரோ சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருந்திருக்காரு....
சரியா கேர்ல் ஃப்ரண்டோட பிறந்த நாள் அன்னக்கி ஹேப்பி ப்ர்த்டேன்னு கேக் மற்றும் கேண்டில பாருங்க... அது கேக் இல்ல கேக் செய்யுற மாவு.

#4
ஜூஸ் உக்கார்ந்துட்டு தான் குடிக்கணும்னு எதாவது இருக்கா என்ன? மல்லாக்க படுத்துட்டு கூட குடிப்போம். ரெண்டு ஷூ அதுமேல ஒரு தட்டு அதுக்கு மேல க்ளாஸ்.... எப்புடி நம்ம ஐடியா

#5
இந்த கார பாக்குறவங்க எல்லாரும் பனி கார் மேல எல்லாம் படர்ந்திருக்கு அதக்கூட முழுசா எடுக்காம இப்டி கிளம்பிட்டாரேன்னு புகார் வாசிக்க நம்மாளு அசால்ல்டா.... இப்டி இருந்த உள்ள கதகதப்பா இருக்கு என்று அசால்ட் காண்பிக்கிறார்.
கதவைத் திறந்து உள்ளே உட்கார இடம் வேண்டும் அதனால் ட்ரைவர் சீட்டுக்கு மட்டும் ஐஸ் கட்டியை சுத்தம் செய்திருக்கிறார். நம்பர் ப்ளேட் தெரியவேண்டும் அதனால் அந்த பகுதியை மட்டும் சுத்தம் செய்திருக்கிறார். பயணிக்க ஆரம்பித்ததும் மற்ற இடங்களில் எல்லாம் தானாக ஐஸ்கட்டி உருகியிருக்கிறது

#6
இந்த மனுஷனோட அறிவுக்கு எதாவது விருது கொடுத்தாகணுமே மேல காய போட்ட துணி காத்துக்கு கீழ விழுந்திடுச்சு... கீழ வந்து எடுத்துட்டு போக சோம்பேறித்தனம் பட்டவர ஜன்னல் வழியா வாக்கும் க்ளீனரவச்சு கீழ கிடந்த துணிய அலேக்கா எடுத்துட்டாரு...

#7
இது நிறைய பேருக்கு யூஸ் ஆகும். வேலைக்கு நடுவுல லைட்டா தூக்கம் வரத்தான் செய்யும் நிறைய நிறுவனங்கள்ல குட்டி நேப் எடுக்குறதுக்கு ரூம் எல்லாம் இருக்கு. கேட்ல கேட் கீப்பரா எடுக்குறவங்களோட நிலைமைய எண்ணிக்கியாவது யோசிச்சு பாத்தீங்களா?
இவர் செஞ்ச ஐடியாவ பாத்தீங்களா? கைல துப்பாக்கியோட விறப்பா நிக்கிற போலீஸ் அதிகாரியோட ஃப்ளக்ஸ் போர்ட முன்னாடி வச்சுட்டு பின்னாடி லைட்டா ஒரு குட்டி தூக்கம் போட்டாச்சு.

#8
மனுசங்க தான் இப்டின்னு நினச்சா? இந்த பறவையும் இப்டித்தான் போலயே.... யாரு அவ்ளோ கஷ்டபட்ட சிறக விரிச்சு பறந்துட்டு இருப்பா? வேகமா பறக்குற இன்னொரு பறவையோட முதுகுல உக்கார்ந்துட்டா வேல முடிஞ்சது....
இங்க கருப்பா ஒண்ணு பறந்துச்சு சரி புடுச்சு திங்கலாம்னு பாத்தா எஸ்கேப் ஆகிடுச்சேன்னு கண்ண சுருக்கி சுருக்கி தேடாதீங்க....

#9
ஸ்கேட்டிங் ஷூ உடஞ்சு போச்சு புதுசு வாங்கித் தர்ற வரைக்கும் வீட்ல சும்மா உக்கார்ந்திருக்க சொல்றீங்களா? பையன் கிளம்பிட்டாப்ல யாரவது சீக்கிரம் ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷூ வாங்கி கொடுத்திடங்கப்பா....

#10
இது ஏணிப்படி இல்ல.... குழந்தைகளை ஹோம்வொர்க் செய்யவைப்பது தான் மிகப்பெரிய வேலையாக இருக்கும். இது போன்ற ஜீனியஸ் குழந்தைகள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஸ்டசாலி தான்.
மிஸ் மேல ஒரேயொரு லைன் மட்டும் எழுதி கொடுத்துட்டு பக்கம் பூரா எழுத சொல்றங்க கை வலிக்காதா? என்று யோசித்த ஒரு குட்டி ஜீனியஸ் பண்ண ஐடியாவ பாருங்க.

#11
இவரு கொஞ்சம் டெக்னாலஜி தெரிஞ்ச ஜீனியஸ். ஹால்ல உக்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்கும் போது கிச்சன் ல பால் பொங்கிருச்சான்னு ஓராயிரம் தடவ எழுந்து போக முடியுமா என்ன?
கரெக்டா நம்ம வந்து உக்கார்ந்ததும் பால் பொங்கிடும் வழக்கம் போல நம்ம திட்டு வாங்குவோம். இத அவாய்ட் பண்ண தான் இந்த ஐடியா. லேப்டாப்ல ஸ்கைப் கால் பண்ணி கிச்சன் போய் வச்சாச்சு. ஹால்ல இருக்குற சிஸ்டம்ல ஸ்கைப் கால் அட்டண்ட் பண்ணி செக் பண்றாங்கோ.... ஸ்கைப்ல கூட ஃபேக் அக்கவுண்ட் வச்சிருப்பாங்களோ...



Click it and Unblock the Notifications