ஜக்கி வாசுதேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகளும், சர்ச்சைகளும்!

By: Staff
Subscribe to Boldsky

பிறப்பால் ஜகதீஷ் வாசுதேவ் என பெயரிடப்பட்ட ஜக்கி வாசுதேவ் பிறந்தது கர்நாடகத்தின் மைசூரில். இவரது பெற்றோர் மருத்துவர் வாசுதேவ் மற்றும் சுஷீலா ஆவர்.

இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இவரது தந்தை இந்திய ரயில்வே துறையில் கண் மருத்துவராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இவரது பணியிட மாற்றங்களால் சிறு வயதிலேயே பல ஊர்கள் மாறி மாறி வாழ்ந்துள்ளார் ஜக்கி வாசுதேவ்.

சிறு வயதில் இருந்தே ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதிலும், அதுகுறித்து ஆராய்வதிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளார் ஜக்கி. சிறு வயதில் இருந்தே காடுகளுக்குள் பயணிப்பதில் பேரார்வம் கொண்டவர் ஜக்கி என்று கூறுகிறார்கள்.

அங்கேயே பல மணி நேரங்கள் செலவு செய்து விலங்குகளை கண்காணிப்பது, பாம்புகளை பிடிப்பது போன்றவற்றை விருப்பத்துடன் சுட்டித்தனமாக செய்துள்ளாராம் ஜக்கி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா!

யோகா!

தனது 11 வயதிலேயே யோகா மீது ஆர்வம் கொண்டிருக்கிறார் ஜக்கி. சிறு வயதிலேயே மல்லதிஹல்லி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிஜியிடம் அறிமுகமாகியிருக்கிறார். இந்த சுவாமி ஜி தான் இவருக்கு யோகா மற்றும் இதர பயிற்சிகள் அளித்தவர் என்றும் அறியப்படுகிறது.

படிப்பு!

படிப்பு!

பள்ளிப்படிப்பு முடித்த பிறகு மைசூர் பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயில செந்துள்ளார் ஜக்கி. கல்லூரி காலத்தில் தான் ஜக்கிக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதிலும், பயணங்கள் மேற்கொள்வதிலும் ஆர்வம் பிறந்துள்ளது. தனது நண்பர்களுடன் சேர்ந்து நீண்ட தூர பயணங்கள் மேற்கொண்டுள்ளார் ஜக்கி.

தொழில்!

தொழில்!

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு தொழிலதிபர் அவதாரம் எடுத்துள்ளார் ஜக்கி இவரது ஸ்மார்ட் மற்றும் ஹார்ட் வர்க் தனது வேலையில் குறுகிய காலத்தில் சிறந்த உயரத்தை அடைய உதவியுள்ளது. கோழிப் பண்ணை, செங்கல் தொழிற்சாலை போன்ற தொழிலை தனது இருபதுகளில் செய்துள்ளார் ஜக்கி.

மாற்றம்!

மாற்றம்!

ஆனால் திடீரென ஒருநாள் 1982 செப்டம்பர் 23ம் நாள் மதியம் இவர் தனது வாழ்வில் ஒரு மாற்றம் உணர்ந்ததாகவும், அப்போது தான் ஆன்மீக உணர்வு அதிகரித்ததாகவும் இவர் கூறியதாக தகவல்கள் அறியப்படுகின்றன.

அப்போது ஜக்கி சாமுண்டி மலையில் இருந்ததாகவும். ஏறத்தாழ நான்கரை மணிநேரம் அங்கேயே இருந்து ஆன்மீகத்தை உணர்ந்ததாகவும் கூறுகிறார்கள்.

இரண்டே வாரத்தில்...

இரண்டே வாரத்தில்...

அன்றில் இருந்து இரண்டே வாரத்தில் தனது தொழிலை எல்லாம் தனது நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஆன்மிகம் குறித்து இன்னும் அனுபவம் பெற நீண்ட பயணம் மேற்கொண்டதாகவும் அறியப்படுகிறது. ஏறத்தாழ ஒரு வருடம் நீடித்த இந்த பயணத்தில் இவர்கள் நிறைய யோகா கற்று கொடுத்ததாகவும், அனுபவங்கள் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

1983ல்

1983ல்

1983ல் மைசூரில் யோகா வகுப்புகள் எடுக்க துவங்கியிருக்கிறார் ஜக்கி. இவரது முதல் யோகா வகுப்பில் ஏழு பேர் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டனர். பிறகு இது கர்நாடகம் முழுவதும் விரிந்து ஐதராபாத் வரை நீடித்துள்ளது.

யோகா வகுப்புகள் எடுக்க இவர் ஊதியமோ, ஃபீஸ் என எதுவுமே வாங்கியது இல்லையாம். தனது கோழிப் பண்ணை வியாபாரத்தில் இருந்து வந்த பணத்தை வைத்துக் கொண்டே செலவு செய்து வந்துள்ளார்.

ஈஷா யோகா!

ஈஷா யோகா!

1992ல் ஜக்கி தனது ஈஷா யோகா மையத்தை உருவாக்கினார். இது லாபமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமாக துவக்கப்பட்டது. இங்கே அனைவருக்கும் யோகா பயிற்றுவிக்கப்பட்டது. இந்த மையம் கோவையில் இயங்கி வருகிறது. சில வருடங்களிலேயே ஈஷா யோகா மையம் பிரபலமாக துவங்கியது.

இவரிடம் யோகா கற்றுக்கொள்ள இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கண்டா, மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா என் பல வெளிநாட்டவர்களும் வர துவங்கினார்கள்.

சமூக சேவைகள்!

சமூக சேவைகள்!

வெறும் யோகா கற்று தருவது என்பதை தாண்டி ஈஷா யோகா மையம் பல சமூக சேவைகள் செய்ய துவங்கின. ARR என்ற ஸ்கீம் மூலமாக ஏழை மக்களின் ஆரோக்கியம் மேம்பட திட்டங்கள் வழிவகுக்கப்பட்டு 54 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 7 கோடி பேர் பயன்பெற்றதாக கூறப்படுகிறது.

சர்வதேச வளர்ச்சி!

சர்வதேச வளர்ச்சி!

தனது பேச்சு திறமையால் பல நாட்டவரை ஈர்த்தார் ஜக்கி. 2000ம் ஆண்டு ஐநாவின் மில்லினியம் உலக அமைதி உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்டு பேசினார். மேலும், உலக பொருளாதார மன்றத்தில் 2006, 07, 08, 09 ஆண்டுகளில் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

இவர் இதுவரை எட்டு வேறுப்பட்ட மொழிகளில் நூறு தலைப்புகளில் கட்டுரை, புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஜக்கி ஒரு திறமையான கவிஞர் என்றும் கூறப்படுகிறது. தனது ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவார் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

விருதுகள்!

விருதுகள்!

ஜக்கி வாசுதேவ்க்கு கடந்த 2010ம் ஆண்டு, இவரது பி.ஜி.எச் பிராஜக்ட்க்காக இந்திரா காந்தி பரிவர்த்தன் புர்ஸ்கர் விருது அளித்துள்ளனர்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவின் முதல் நூறு சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றாச்ர். சுற்றுசூழல் பாதகாப்பு மற்றும் மேம்பாடு என்ற பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.

சர்ச்சை!

சர்ச்சை!

ஜக்கி வாசுதேவ் விஜயகுமாரி என்கிற விஜி என்பவரை 1984ம் ஆண்டு திருமணம் திருந்தார். இவருக்கு ராதே என்ற மகளும் இருக்கிறார். கடந்த 1996ம் ஆண்டு இவரது மனைவி திடீரென மரணம் அடைந்தார்.

அப்போது பெங்களூரில் இவர் மீத கொலை குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னாளில் இந்த வழக்கு கோவைக்கு மாற்றப்பட்டது.

இதில், தமிழகத்தில் முக்கிய கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஜக்கி சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கோபமாக பேட்டி அளித்துள்ளார் என்ற பதிவுகளும் இருக்கின்றன.

குளோஸ்!

குளோஸ்!

குற்றம் செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதால் இந்த வழக்கு மூடப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு யாரேனும் அழுத்தம் கொடுத்து முடிக்கப்பட்டாதா... அல்ல, இந்த வழக்கே யாரோ ஒருவர் பின்னாடி இருந்து அழுத்தம் கொடுத்தால் போடப்பட்டதா என்பதற்கு இதுநாள் வரை பதில் ஏதும் இல்லை.

வழக்கு தொடரப்பட்ட எட்டு மாதங்களில் கோவை போலீஸார் பொதியா ஆதாரமும், குற்றம் செய்ததாக கூற சாட்சியங்கள் இல்லை என்பதாலும் வழக்கை மூடினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts to Know About Founder of Isha Yoga Jaggi Vasudev aka Jagadish Vasudev

Facts to Know About Founder of Isha Yoga Jaggi Vasudev aka Jagadish Vasudev,
Story first published: Saturday, February 3, 2018, 16:29 [IST]
Subscribe Newsletter