பத்திரிகையாளர்களுக்கு பல்பு கொடுத்த தோனி, சேவாக்கின் அட்ராசிட்டி பதில்கள் - டாப் 10

Posted By: Staff
Subscribe to Boldsky

நிருபர்கள் அரசியல்வாதிகளும் காரசாரமான கேள்விகள் கேட்கிறார்களோ இல்லையோ, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வசமாக கையில் சிக்கிக் கொண்டால் போதும் அல்வா சாப்பிடுவது போது பல சூடான கேள்விகளை கேட்டு அவர்களுக்கு கோபம் வரவழைத்து, பிறகு அதை தலைப்பு செய்தியாக மாற்றிவிடுவார்கள்.

Indian Cricketers and Their Atrocity Answers for Reporters Serious Questions!

Cover Image Source: Youtube

ஆனால், இப்படியான சூழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க துவங்கியவர்கள் தோனியும், சேவாக்கும் தான். கிரீஸில் பந்துகளை விளாசுவதை போல, நிருவர்களை கேள்வுகளுக்கும் சூப்பர் பதில்கள் அளித்து விளாசியுள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

இதில் பெரும்பங்கு தோனி, சேவாக்கிற்கு இருப்பினும், இதில் கங்குலி, யுவராஜும் தங்கள் பங்குக்கு சில விளாசு, விளாசியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பந்தை தானே?

பந்தை தானே?

நிருபர் : நீங்கள் எப்படி ஆக்ரோஷமான, அதிவேக பவுலர்களை மிக எளிதாக பவுண்டரிக்கு விரட்டுகிறீர்கள்?

சேவாக்: நான் பந்துவீச்சாளர்களை அடிப்பது இல்லையே, பந்துகளை தானே அடிக்கிறேன்.

குறிப்பு: அதிரடி ஆட்டக்காரரான விரேந்திர சேவாக், ட்விட்டரிலும் ஒருவரியில் பதில் கூறியும் அசத்துபவர். சேவாக் அடிக்கடி கூறும் ஒரு சொற்றொடர் இது. அதாவது பந்தை கண்டு ஆடுங்கள், பந்து வீசுபவரை கண்டு அல்ல. எல்லா பந்தும் ஒரே மாதிரியானது தான். பந்து வீச்சாளர் மீது கவனம் செலுத்தும் போது எளிய பந்துகள் கூட சிரமமாக தோன்றும் என கூறுவார் சேவாக்.

எது வலிக்கிறது?

எது வலிக்கிறது?

நிருபர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனது அல்ல, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனது, எது உங்களை மிகவும் வலி உணர செய்தது?

தோனி: நீங்கள் இறக்கிறீர்கள்? நீங்கள் இறக்கிறீர்கள்... நீங்கள் எது இறக்க சிறந்த வலி என்றெல்லாம் தேர்வு செய்து பார்ப்பீர்களா என்ன?

குறிப்பு: இந்த கேள்வி இந்திய அணி தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை ஒயிட்வாஷ் ஆகி தோற்றது. அப்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். இந்த தோல்விக்கு பிறகு தோனி பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

கற்கள்..

கற்கள்..

நிருபர்: உங்கள் மீது விமர்சங்கள் வைக்கும் போது, நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

சச்சின்: உங்கள் மீது கற்கள் எறியப்படும் போது, அதை நீங்கள் மைல்கற்களாக மாற்ற வேண்டும்.

குறிப்பு: சச்சின் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும் போதும், தன்னுடன் நூறு கோடி மக்களின் கனவையும், நம்பிக்கையும் சுமந்து செல்வார். சச்சின் வேகமாக அவுட்டாகிவிட்டால், அவ்வளவு தான் அணி தோற்றுவிடும் என்ற எண்ணம் பல காலம் நீடித்திருந்தது.

எப்போதெல்லாம் சச்சின் சீக்கிரம் அவுட்டாகிறாரோ அப்போதெல்லாம் அவர் மேல் விமர்சனங்கள் எழும். அத்தகைய நிலையில் சச்சின் கூறிய பதில் இது.

இழப்பு யாருக்கு?

இழப்பு யாருக்கு?

நிருபர்: நீங்கள் மீண்டும் இந்தியாவுக்கு ஆட வாய்ப்பில்லையா?

சேவாக்: சரி, அது யாருக்கு இழப்பு...?

குறிப்பு: 2013ம் ஆண்டு சேவாக்கின் கிரிக்கெட் உலகம் கிட்டத்தட்ட முடிந்தே விட்டது. அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதிரடி ஆட்டக்காரராக இருந்த போதிலும் ஃபீல்டிங்கில் இவர் கோட்டைவிடுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த சூழலில் இவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

இதயம்!

இதயம்!

நிருபர்: அப்ரிதி சொல்கிறார், இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்களுக்கு இருப்பது போன்ற பெரிய இதயம் இல்லி என்று?

யுவராஜ்: பாகிஸ்தானியர்களுக்கு நிஜமாகவே பெரிய இதயம் தான். அதனால் தான் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் நிறைய கேட்சுகளை கோட்டைவிட்டு, எங்களை வெற்றிபெற செய்தனர்.

குறிப்பு: 2011 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மிக ஜாலியாக யுவராஜ் இந்த பதிலை அளித்தார்.

கெத்து!

கெத்து!

நிருபர்: ஏன் ஷிகிர் தவான் சிறிய அணிகளுக்கு எதிரே மட்டும் நன்றாக விளையாடுகிறார்?

தோனி: ஏனெனில், இந்தியாவைவிட பெரிய அணி ஏதும் இல்லை.

குறிப்பு: ஐசிசி போட்டிகள் என்றாலே சூரனாக மாறி வெளுக்க ஆரம்பித்துவிடுவார் தவான். ஆனால், சில காலம் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்தார். அந்த காலக்கட்டத்தில் தோனி தான் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அந்த சூழலில் கேட்பட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில் இது.

வித்தியாசம்?

வித்தியாசம்?

நிருபர்: உங்களுக்கும் சச்சினுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசம் என்ன?

சேவாக்: வங்கி இருப்பு!!!

குறிப்பு: சேவாக் இந்திய அணிக்கு விளையாட துவங்கிய இளம் வயதில் அவரை சச்சின் காபி என்றே கூறினார்கள். விளையாடும் விதத்தில் இருந்து அவர்களிடம் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் துவக்க ஆட்டாக்காரர்கள் ஆவர். ஆகவே, அடிக்கடி இவர்களை ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்படும். அப்படியாக கேட்கப்பட்ட கேள்விக்கு சேவாக் இப்பாடி காமெடியாக பதில் அளித்தார்.

கடைசி ஒருநாள் போட்டி?

கடைசி ஒருநாள் போட்டி?

நிருபர்: இது உங்கள் கடைசி ஒருநாள் போட்டியா?

தோனி: பொதுநல வழக்கு தொடர்ந்து அறிந்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: தோனியிடம் ரசிகர்கள் விரும்புவதே அவரது அதிரடி ஆட்டம் தான். அதிலும் முதல் விக்கெட் விழுந்த பிறகு தோனி கிரீஸில் காலடி எடுத்து வைத்தால் அதிரடி ஆரம்பமாகிவிடும். அந்த நிலையில் தனது சராசரி மற்றும் ஸ்ட்ரைக்ரேட் எல்லாம் வேறு லெவலில் வைத்திருந்தார் தோனி.

ஆயினும், அணியின் நன்மை கருதி இறுதிக் கட்டத்தில் விளையாட ஆள் இல்லை என்று தன்னை தானே கீழே இறக்கி கொண்டார் தோனி. ஆகையால், தனது இயல்பை மாற்றிக் கொண்டு நிதான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். 2011 உலகக் கோப்பைக்கு பிறகு தோனியின் ஆட்டத்தில் மந்தம் காணப்பட்டது.

ஆகையால், அடிக்கடி அவரது கடைசி போட்டி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு பல வகையான பதில் அளித்து அசத்தியுள்ளார் தோனி. அவற்றுள் ஒன்று தான் இது.

தாதா!

தாதா!

நிருபர்: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை இந்தியா எப்படி எதிர்கொள்ள போகிறது?

கங்குலி: மிக எளிது. நாங்கள் முயற்சித்து சங்கிலியை இழுத்துவிடுவோம். ரயில் நடுவழியில் நின்றுவிடும். அவ்வளவு தன.

குறிப்பு: சோயப் அக்தர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுவதற்கு காரணம் அவரது ஆக்ரோஷமான, வேகமான பந்துவீச்சு. அவரது பந்தை ஆடுவது அவ்வளவு எளிதல்ல. ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இந்திய முற்பட்ட போது, இப்படியான கேள்வி கங்குலி முன் வைக்கப்பட்டது.

இளமை இரத்தம்!

இளமை இரத்தம்!

நிருபர்: வயதானவர்களிடம் இருந்து இளயவர்களை நோக்கி நகர்வதை நீங்கள் எப்படி காண்கிறீர்கள்?

தோனி: கிஷோர் குமாரிடம் இருந்து, சீன பவுல் நோக்கி நகர்ந்தது போல காண்கிறேன்.

குறிப்பு: இந்த கேள்வி தோனியிடம் இந்திய அணியில் லக்ஷ்மன், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து விலகிய போது கேட்கப்பட்டது.

கிஷோர் குமார் தோனிக்கு பிடித்த இசை கலைஞர். இவர் மெல்லிசைக்கு புகழ்பெற்றவர் ஆவார். சீன் பவுல் ஜமைகாவை சேர்ந்த இசை கலைஞர். இவர் அப்படியே கிஷோருக்கு நேர் எதிரான இளம் இசை கலைஞர் ஆவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Cricketers and Their Atrocity Answers for Reporters Serious Questions!

Indian Cricketers and Their Atrocity Answers for Reporters Serious Questions!