For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்!

  |

  பிரபலமாக இருப்பது எவ்வளவு அருமையான, ஆடம்பரமான விஷயம். அவர்கள் வாழ்வில் சந்தோஷமும், இன்பமும் கொட்டிக் கிடக்கும். அவர்கள் நினைத்தால் இந்தியாவில் காலை உணவு, துபாயில் மதிய உணவு, லண்டனில் இரவு உணவு உண்ணலாம். ச்சே... இப்படி ஒரு வாழ்க்கை நமக்கும் கிடைக்குமா என்று ஏங்காத ரசிகனே இருக்க மாட்டான்.

  Indian Celebrities Who Got Death Threats From Underworld Dons!

  ஆனால், பிரபலமாக வாழ்வதன் மறுபுறம் நாம் அறிந்ததில்லை. வாய் தவறி ஒரு வார்த்தை பேசினாலும் அது வரலாறாகிவிடும். எப்போது வேண்டுமானாலும் அதை நினைவு கூர்ந்து செய்தியில் கிழித்து தொங்கவிட்டுவிடுவார்கள். ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என்று சொன்ன வார்த்தையே ஒரு வருடத்தின் ட்ரெண்ட்டிங் டெம்ப்ளேட் ஆகிவிட்டது.

  இது மட்டுமா, சொந்த வாழ்க்கை பொதுவெளியில் திரைப்படமாக்கபடும். ரவுடிகள், தாதாக்கள் இடம் இருந்து கொலை மிரட்டல்களும் கூட வரும். ஆம்! இந்திய நடிகர், நடிகைகள் பலருக்கும் அண்டர் வேர்ல்டு தாதாக்கள், மதவாத குழுக்கள், பெயர் தெரியாத நபர்கள் என பலரிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தீபிகா படுகோனே!

  தீபிகா படுகோனே!

  பத்மாவதி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதும், படம் ரிலீஸுக்கு தயாரிக் கொண்டிருந்த போதும், ராஜஸ்தானின் கர்ணி சேனா அமைப்பினர் நடிகை தீபிகா படுகோனேவை படம் ரிலீஸ் ஆனால், கொன்றுவிடுவோம் என்றும் தலையை வெட்டிவிடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

  ஊர்வசி ரௌடெலா!

  ஊர்வசி ரௌடெலா!

  மாடலிங்கில் இருந்து நடிப்பு துறைக்குள் வந்தவர் ஊர்வசி. இவர் 2015 ம் ஆண்டு மிஸ் திவா பட்டமும், மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் 2015ம் ஆண்டு இந்தியாவுக்காக பங்கெடுத்துக் கொண்டவரும் ஆவார். இவர் கிரான்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 போன்ற படு கவர்ச்சியான படங்களில் நடித்தவர். இவர் ஹேட் ஸ்டோரி படத்தில் மகாபாரதத்தை குறித்து பேசிய நிகழ்வு இந்து மத குழுக்களால் பலத்த எதிர்ப்புகளுக்கு ஆளானது. இவரை கொன்றுவிடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்தனர்.

  ஷாருக்கான்!

  ஷாருக்கான்!

  பாலிவுட்டின் கிங் கான் ஷாருக். உலக அளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப் 10ல் ஒருவராக இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ஹேப்பி நியூ இயர் படம் வெளியாகும் முன்னர் அண்டர் வேர்ல்ட் டான் ரவி பூஜாரி இவரை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இவருடன் சேர்த்து உடன் நடித்த போமன் இராணி, சோனு சூத் போன்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

  சோனு நிகாம்!

  சோனு நிகாம்!

  சோனு நிகாம் ஒரு நிகழ்ச்சி ஒருகிணைப்பாளர்கள் நிறுவனத்தில் நிகழ்ச்சி செய்து தருவதாக காண்ட்ராக்ட் கையெழுத்திட்டு இருந்தார். ஆனால், அதை அவரால் செய்து முடிக்கப்படவில்லை. காரணம், சோட்டா ஷகீல் மற்றும் தாவூத் இப்ராஹீம் போன்றவர்கள் சோனுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், தாங்கள் கூறும் நிறுவனத்துடன் காண்ட்ராக்ட் சைன் செய்யும்படியும் வலியுறுத்தினர்.

  சல்மான் கான்!

  சல்மான் கான்!

  மிகவும் தைரியசாலியாக கருதப்படும் நபர் சல்மான் கான். ரியல் லைப்பில் பல சர்ச்சைகளுக்கு சொந்தக் காரர். இவரையும் விட்டுவைக்கவில்லை அண்டர் வேர்ல்டு கும்பல். கடந்த 2013ம் ஆண்டு ரவி புஜாரி சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது காவல் நிலையத்தில் புகாராகவும் பதிவு செய்யப்பட்டது. மேலும், லாரன்ஸ் பிஷோனி என்பவரும் அரியவகை மானை வேட்டையாடிய வழக்கின் போது சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அறியப்படுகிறது.

  அக்ஷய் குமார்!

  அக்ஷய் குமார்!

  பாலிவுட்டின் மற்றுமொரு சுப்பர் ஸ்டார் நடிகரான அக்ஷய் குமாரையும் விட்டுவைக்க வில்லை இந்த கொலை மிரட்டல் விவகாரம். ஷாருக், சல்மானை தொடர்ந்து அண்டர் வேர்ல்டு தாதா ரவி புஜாரி கொலை மிரட்டல் விடுத்த மற்றுமொரு நடிகர் அக்ஷை குமார். ரவி புஜாரி அக்ஷை குமாருக்கு கடந்த 2013ம் ஆண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

  அமிதாப் பச்சன்!

  அமிதாப் பச்சன்!

  கடந்த 2010ம் ஆண்டு ஒரு பெயர் அறியப்படாத பிளாகர் ஒருவர் அமிதாப் பச்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இவரது ஒட்டமொத்த குடும்பத்திற்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்தார். நீண்ட காலமாக அந்த நபரிடம் இருந்து மிரட்டல் வந்துக் கொண்டிருந்தது என்றும், கொலை மிரட்டல் குறித்து மெசேஜ் மற்றும் ப்ரைவேட் எண்களில் இருந்து கால்களும் வர துவங்கிய போதுதான் புகார் எளித்தேன் என்றும் அமிதாப் கூறி இருந்தார்.

  அமீர் கான்!

  அமீர் கான்!

  சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி கொண்டிருந்தார் அமீர் கான். அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக அறியப்படுகிறது. அப்போது தான் இவர் புதியதாக புல்லட் ப்ரூப் மற்றும் பாம்ப் ப்ரூப் காரான பென்ஸ் s600 வாங்கி இருந்தார். அதன் விலை சுமார் பத்து கோடி ரூபாய் ஆகும். அப்போது மன்மோகன் சிங் மற்றும் முகேஷ் அம்பானிக்கு பிறகு இந்தியாவில் புல்லட் ப்ரூப் காரை சொந்தமாக வைத்திருந்த மூன்றாவது இந்தியர் இவர் என்றும் கூறப்பட்டன.

  கங்கனா ரனாவத்!

  கங்கனா ரனாவத்!

  இவரது சகோதரி ரங்கோலி என்பவர் மீது பெயர் தெரியாத நபர் ஒருவர் கடந்த 2007ம் ஆண்டு ஆசிட் வீசினார். இதற்கு பிறகு தான் நடிகை கங்கனா ரனாவத் தனக்கும் அதே நபரிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்தார்.

  கரன் ஜோகர்!

  கரன் ஜோகர்!

  இந்தியாவின் முன்னணி வெற்றி இயக்குனர்களில் ஒருவர் கரன். ஒருமுறை பெயர் அறியப்படாத ஒரு ப்ரைவேட் நம்பரில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  மேலும், குச், குச் ஹோத்தா ஹே படத்தை தான் இயக்கிக் கொண்டிருந்த போது அண்டர் வேர்ல்டு டான் அபு சலீம் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தும் படி மிரட்டியதாகவும் இவர் கூறி இருந்தார்.

  மல்லிகா ஷெராவத்!

  மல்லிகா ஷெராவத்!

  பாலிவுட்டின் கவர்ச்சி கடல் மல்லிகா ஷெராவத். இவருக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. முக்கியமாக பன்வாரி தேவி மையமாக கொண்ட படத்தில் இவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான போது பல கொலை மிரட்டல்கள் வந்தன என்றும் கூறப்பட்டிருக்கிறது. பன்வாரி தேவி தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார்.

  விவேக் ஓபராய்!

  விவேக் ஓபராய்!

  கடந்த 2011ம் ஆண்டு விவேக் ஓபராய் தனக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  இவரும் ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்த காலக்கட்டத்தில் சல்மான் கானே இவரை பல முறை கொடூரமாக மிரட்டி இருக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

  ராம் கோபால் வர்மா!

  ராம் கோபால் வர்மா!

  இந்தியாவின் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா. கடந்த 2013ம் ஆண்டு வெளியான சத்யா இரண்டாம் பாகம் படத்தில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை நீக்கும் படி, ராம் கோபால் வருமாவுக்கு அண்டர் வேர்ல்டு டான்களிடம் இருந்து மிரட்டல் வந்தது என்று அறியப்படுகிறது.

  இவர்களை தவிர, பர்ஹான் கான், சோஹாளி கான், யாஷ் சோப்ரா, போனி கபூர், ராகேஷ் கான் (ஹ்ரிதிக் ரோஷனின் தந்தை) போன்றவர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Indian Celebrities Who Got Death Threats From Underworld Dons!

  No one can believe that, these superstar actors from India got death threats from under world dons.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more