ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும் உள்ள மற்றவர்களை ஈர்க்கும் குணம் என்னனு தெரிஞ்சுக்கணுமா?

Subscribe to Boldsky

உலகில் பிறந்த அனைவருமே நல்லவர்கள் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தனித்துவமான குணங்கள் இருக்கும். ஒருவரை கவர்வதற்கு அவர்களது குணங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே பிறந்த தேதி மற்றும் நேரம் கொண்டு எந்த ராசிக்குரியவர்கள் என கணக்கிடப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியையும் ஒவ்வொரு கிரகங்கள் ஆளுகின்றன. இந்த கிரகங்களின் குணங்கள் தான் அந்தந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

How Does Each Zodiac Sign Inspire Others

இக்கட்டுரையில் ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும் மற்றவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும் அற்புத குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் ராசிப்படி உங்களது எந்த குணத்தால் மற்றவர்களை கவர்ந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்களது வாழ்வை உற்சாகத்துடன் கொண்டு செல்வது மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கு கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட விரும்பமாட்டார்கள். இவர்கள் எப்போதும் எந்த ஒரு விஷயத்தையும் சவாலாகவே பார்ப்பதோடு, ரிஸ்க் எடுத்தாவது அனைத்தையும் முடித்துக் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை, எப்போதும் முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் தாங்கள் விரும்பும் விஷயங்களில் கவனத்தை செலுத்தும் படி ஊக்குவிப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக நினைத்து அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றோ எப்போதும் நினைக்கமாட்டார்கள். ஒரு விஷயத்தை செய்து முடிக்க களத்தில் இறங்கிவிட்டால், அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தாம் என்ன செய்கிறோம் மற்றும் பேசுகிறோம் என்பதை நன்கு அறிந்தே செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பொறுப்பில் ஒருவர் வந்துவிட்டால், அவர்களை எப்படி மிகவும் சௌகரியமாக வைத்துக் கொள்வது என்பதை நன்கு அறிந்தவர்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களின் தாராள மனம் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அப்போது மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டு தெரிந்து, பின் அமைதியாக பதிலளிப்பார்கள். இந்த ஒரு விஷயமே மற்றவர்களை இவர்கள் கவர்வதற்கு ஓர் காரணம் என்றும் கூறலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எதையும் துணிச்சலாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் மீது போதுமான நம்பிக்கைக் கொண்டவர்கள். ஒருவேளை தாங்கள் விரும்பியதை அவர்களால் அடைய முடியாவிட்டால், அதை அடைவதற்கு எந்த அளவு வேண்டுமானாலும் போவார்கள். இந்த ஒரு விஷயம், இந்த ராசிக்காரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக கூறலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எதையும் அன்புடன் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் வாழ்வில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதை நிறுத்தமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் நம் வாழ்க்கையை வளப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொள்ளவும் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நியாயத்துடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் நியாயமான மனநிலையால் மற்றவர்களை ஊக்குவிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு வக்கிலாக இருந்தால், பிரச்சனை என்று வந்தவர்களுக்கு இவர்களின் உதவியால் நியாயம் கிடைப்பது உறுதி.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பாலின தோற்றத்தினால் மற்றவர்களை ஈர்ப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு, தங்கள் தோற்றத்தையே சிறப்பாக நினைத்து மகிழ்வர். அதாவது இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களது அழகைக் கண்டு பொறாமை கொள்ளாமல், தானே அழகு என்று நினைத்து இருப்பர். இதுவும் மற்ற ராசிக்காரர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணமாகும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும், அதை அச்சம் கொண்டு கைவிடாமல் செய்து முடிப்பார்கள். இவர்களிடம் இருக்கும் இந்த தைரியமான துணிச்சல் குணம் தான், இவர்களிடம் உள்ள ஓர் அற்புதமான மற்றும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் குணமும் கூட.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பானவர்கள். இந்த ராசிக்காரர்களிடம் உள்ள பொறுப்பு குணம் தான், மற்ற ராசிக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. மேலும் இந்த ராசிக்காரர்கள் நம்பகமானவர்கள். இந்த பொறுப்பும், நம்பகத்தன்மையும் தான், மற்றவர்களை இவர்கள் ஈர்ப்பதற்கான முக்கிய குணங்களாகும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலிகள். இவர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் கோபப்படாமல், அமைதியாக இருந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் கற்பனைவளம் மிக்கவர்கள் மற்றும் படைப்பாளர்கள். இந்த குணம் தான் மற்றவர்கள் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் குணமாகும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் தன்னலமற்றவர்கள். இவர்கள் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு மற்றொரு வாய்ப்புக்களைக் கொடுக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இந்த தன்னலமற்ற மற்றும் மன்னிக்கும் குணம் தான், மற்றவர்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How Does Each Zodiac Sign Inspire Others

    Do you know that each zodiac sign can inspire others around them? Well, find out how you have been inspiring others around you unknowingly.
    Story first published: Wednesday, March 7, 2018, 15:30 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more