For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேட்டூர் அணைக்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகள்... வஞ்சகம் நிறைந்த கருப்பு வரலாறு!

மேட்டூர் அணைக்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகள்... வஞ்சகம் நிறைந்த கருப்பு வரலாறு!

|

பல காலம் கழித்து மேட்டூர் அணை மீண்டும் தனது கொள்ளளவு மொத்தமும் நிறைந்து கண்கொள்ளா காட்சி அளித்து வருகிறது. டிரான் மூலம் ஷூட் செய்யும் அளவுக்கு பறந்து விரிந்து அற்புதமான காட்சி அளிக்கிறது மேட்டூர் அணை. நிச்சயம் இந்த பருவம் தஞ்சை விவசாயிகளுக்கு ஒரு நல்ல செழிப்பான வளத்தை, லாபத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

History of Mettur Dam!

Image Source: 1

மேட்டூர் அணையில் நீர் நிறையுமா என்று பலர் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. சோழனின் சிலை மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்ததும் மழை நன்கு பெய்து, அணைகளும், ஆறுகளும் நிறைந்து ஓடுகிறது என்றும் சமூக இணையங்களில் சிலர் உணர்ச்சிப் பூர்வமாக எழுதி வருகிறார்கள். இதுவும் நாம் கவனிக்கத்தக்க விஷயமாக தான் அமைகிறது.

ஆனால், 19ம் நூற்றாண்டில் மேட்டூர் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தொடர்ந்து மைசூர் அரசர்கள் காவிர் ஆற்றின் மீது மேட்டூர் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்காமல் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மேட்டூர் அணையின் கட்டுமானம் துவங்குவதற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக காலம் தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிழக்கிந்திய சபை!

கிழக்கிந்திய சபை!

காவிரியின் ஆற்றின் மீது மேட்டூரில் அணை கட்டுவதற்கு ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்... 1801ம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய சபை திட்டமிட்டது. ஆனால், அன்றைய மைசூர் அரசர்கள் இதற்கு ஒப்புதல் வழங்க மறுத்தனர். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

1835!

1835!

காவிரி ஆற்றின் பாதையில் மேட்டூரில் அணை கட்ட வேண்டும், அதனால் தமிழக விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்பதை அறிந்த கிழக்கிந்திய சபை மேட்டூர் அணை திட்டத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தது.

அப்படியாக மீண்டும் 1835ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற அணை கட்டுமான பொறியாளர் மூலமாக மைசூர் அரசர்களிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது ஆங்கிலேயே அரசு. ஆனால், மீண்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பிரிட்டிஷ் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

திருவாங்கூர் திவான்!

திருவாங்கூர் திவான்!

1923ம் ஆண்டு மீண்டும் மேட்டூர் அணை திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இம்முறை, திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர். சி.பி. ராமசாமி அய்யர் முன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றாக அணிதிரண்டு சென்று அணையின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்கள். இவர் மூலமாக மீண்டும் மைசூர் அரசிடம் பேசி ஒப்புதல் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கறார் முடிவு!

கறார் முடிவு!

சர் சிபி ராமசாமி அவர்கள், மைசூர் அரசின் திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரை சந்தித்து மேட்டூர் அணையின் திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து களானது பேசினார். இங்கே மேட்டூர் அணைக்கு முக்கியத்துவம் எடுத்துக் கொண்டு சிபி ராமசாமி அய்யா அவர்கள் மைசூர் அரசிடம் ஒப்புதல் வாங்க முயற்சிக்க காரணம் என்று மற்றொரு தகவலும் அறியப்படுகிறது. சர் சிபி ராமசாமி அய்யாவின் மூதாதையர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களே என்று கூறப்படுகிறது.

இழப்பீடு!

இழப்பீடு!

சர் சிபி ராமசாமி அய்யா அவர்கள் பேசியும் கூட மைசூர் அரசு ஒப்புதல் வழங்கவில்லை. எனவே, அணை இல்லாத காரணத்தால் ஏற்படும் வெள்ளத்தினால் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் புகழ், வெள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக மைசூர் அரசு வருடம் முப்பது இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் ஒன்று அனுப்பினார்.

பீதி!

பீதி!

அன்றைய மதிப்பில் (1920களில்) ஒரு பவுன் தங்கத்தின் விலையே ரூ.30/- தான். எனவே, முப்பது இலட்சம் என்பது வருடத்திற்கு ஒரு இலட்சம் பவுன் அளிப்பதற்கு சமம்.

இவ்வளவு பெரும் தொகை அளிப்பதற்கு பதிலாக, மேட்டூரில் அணைக் கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்துவிடலாம் என்று மைசூர் சமஸ்தானம் கடைசியாக மேட்டூர் அணை கட்ட ஒப்புதல் வழங்கியது.

இங்கே ஒப்புதல் வழங்க உறுதுணையாக இருந்து, மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துரைத்து பேசியவர் திருவாங்கூர் திவான் பகதூர் சர் சிபி ராமசாமி அவர்கள் தான்.

9 ஆண்டுகள்!

9 ஆண்டுகள்!

1924-25 ஆண்டில் மேட்டூர் அணை கட்ட துவங்கி.. முடிவடைய ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. மேட்டூர் அணையை இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டு சென்னை மாகாணத்தில் வசித்து வாத பொறியாளர் ஸ்டேன்லி என்பவர் தான் கட்டினார். 124 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 120 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும்.

கொள்ளளவு!

கொள்ளளவு!

மேட்டூர் அணையில் ஒரு TMC நீர் குறைந்தால்.. அணையின் நீர் இருப்பு உயரம் 1.25 அடி குறையும். அணையில் ஒரு அடி நீர் குறைந்தால் 0.75 TMC நீர் அளவு குறையும். ஒரு TMC என்பது நூறு கோடி கன அடி ஆகும்.

மேட்டூர் அணைக்கு கர்நாடகத்தில் இருக்கும் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சேகர அணைகளில் இருந்து நீர் வருகிறது. மேட்டூர் அணியில் இரண்டு நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

History of Mettur Dam!

Here we have brifely disscused about the construction history of Mettur dam. And How British india company and Tanjur farmers tried to build this dam and how Mysore Kings has showed their objection for this dam construction from 1835. Here you can read out the some important hitorical facts about Mettur Dam.
Desktop Bottom Promotion