For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு பிரச்சினை? யார் யார் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்?

இந்த குருபெயர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கே விளக்கியுள்ளோம்.

By Mahi Bala
|

குரு பெயர்ச்சி முடிந்து அடுத்த குரு பெயர்ச்சி வரைக்கும் குருவால் உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாதிரியான மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும். எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால், வாழ்க்கையில் வரும் ஏற்ற இறக்கங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

guru peyarchi parikaram for your zodaic sgns

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குருபகவான் துலாம் ராசியிலிருந்து தன்னுடைய நட்பு வீடான விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். இதன்மூலம் குரு ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதிரியான பரிகாரத்தைக் கொடுப்பார். அவை என்னவென்று பார்த்து அதை செய்தால், குருவால் நன்மை விளையும். தீமை அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழிலில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களும் பொருளாதார முன்னேற்றத்தைக் கொடுக்கும். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும் ஆனால் கையில் தங்காது. அதனால் வியாழக்கிழமைகள் தோறும் ஏதாவது சித்தர்களுடைய ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுங்கள். அதேபோல் முருகனும் பெருமாளும் சேர்ந்து இருக்கின்ற கோவில்களுக்கு சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி சுண்டல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் திருச்செந்தூர், ஆலங்குடிக்குடிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவதும் நல்லது. கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு படிப்பு ஏதேனும் உதவி செய்யுங்கள். ராகு மற்றும் கேதுவான நிழல் கிரகங்கள் இருவரும் கொஞ்சம் சாதகமற்ற சூழலில் இருப்பதால், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். ராகு கேதுவுக்கும் விளக்கேற்றுங்கள்.

மிதுனம்

மிதுனம்

நவகிரக வழிபாடு நன்மை தரும். வியாழக்கிழமைகளில் குரு பகவாளை வழிபட்டு வாருங்கள். ராகு மற்றும் கேது பரிகாரத்திற்கு எலுமிச்சை விளக்கை ஏற்றி வழிபடுஞ்கள். பௌர்ணமி நாட்களில் வீட்டில் சித்திர புத்திர பூஜை செய்யுங்கள். நன்மை உண்டாகும்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள். அதேபோல், சனிக்கிழமை நாட்களில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஊனமுற்றோருக்கு தானம் கொடுப்பது புண்ணியம் தரும். அதேபோல், ராகு, கேதுவுக்கு நீலநிற துணி அணிவியுங்கள். அதேபோல் பிள்ளையாரை வழிபடுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை போட்டு வழிபடுங்கள். மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். அதேபோல் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். கோபத்தைக் குறையுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் எதுவுமே உங்களுக்குச் சாதகமாக இல்லாததால் எப்போதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அந்த சமயங்களில் நவ கிரக வழிபாடு மேற்கொள்ளுங்கள். அதேபோல் எல்லா வினைகளையும் தீர்க்கின்ற வகையில் விக்ஞை விநாயகரை வழிபடுங்கள். கேதுவுக்கு கொள்ளுப் பயறை பிரசாதமாக வைத்து அர்ச்சனை செய்யுங்கள். அதேபோல் துர்க்கையை நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

துலாம்

துலாம்

பல்வேறு கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, முக்கிய கிரகங்களான சனி பகவான் மற்றும் ராகு கிரகங்கள் உங்களுக்குச் சாதகமான இல்லை. அதனால் சனி மற்றும் ரொகு கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதேபோல் காலகஸ்தி செய்து, ருத்ராட்ச மாலை கடவுளுக்கு அணிவித்து, அபிஷேகம் செய்யுங்கள். அதேபோல் திருநாகேஸ்வரமும் செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

ராகு, கேது, குரு, சனி என நவ கிரகத்தில் உள்ள முக்கிய கிரகங்கள் அனைத்துமே விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கிறது. இதனால், அவ்வப்போது நவ கிரகங்களை வழிபடுங்கள். நவ கிரகத்தோடு, துர்க்கை வழிபடுங்கள். அதேபோல், வியாழக்கிழமைகளில் குரு பகவாளை வழிபடுவது சிறப்பு.

தனுசு

தனுசு

வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். வியாழக்கிழமை தினத்தில் சிவன் வழிபாடும் நன்மை பயக்கும். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலங்களில் கால பைரவரை வழிபடுங்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால், சனி பகவானுக்கு அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் அர்ச்சனை செய்யுங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் சிவன் கோவிலுக்குப் போய், அங்கு இருக்கின்ற தட்சிணாமூர்த்தி மற்றும் நவ கிரகங்களில் உள்ள குரு பகவானையும் வழிபடுவது மிகச்சிறந்தது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் எந்த பாதிப்பையும் குருபகவான் கொடுக்க மாட்டார். உங்களுடைய வீட்டை நேரடியாக குரு பகவானின் பார்வை பட்டதால், குடும்பத்தில் குழப்பங்கள் இன்றி, அமைதி மட்டுமே நிலவும். மேற்கண்ட வழிபாடுகளை மேற்கொண்டால், பொருளாதார முன்னேற்றமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்குப் பின் குரு மிகவும் சாதகமான நிலையில் தான் இருக்கிறார். ஆனாலும் உங்களுடைய ராசி நாதனான சனி சின்ன சின்ன இடைஞ்சல்கள் செய்யலாம். அதனால் நேரம் கிடைக்கும்போது திருநள்ளாற சென்று வாருங்கள். அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, துர்க்கை அம்மனையும் சனி பகவானையும் வழிபட்டு வாருங்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உங்களுடைய நெடுங்கால கனவுகள் பலிக்கும். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். பிரதோஷ தினங்களில் நந்திக்கு சந்தன அபிஷேகம் செய்வது நல்லது. அவ்வப்போது வியாழக்கிழமைகளில் சுண்டல் மாலை போடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

guru peyarchi parikaram for your zodaic sgns

here we are giving so,e tips and guru peyarchi parikaram for your zodaic sgns.
Story first published: Saturday, October 6, 2018, 18:25 [IST]
Desktop Bottom Promotion