Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
பொதுவெளியில் ப்ரேக்-அப் செய்த காதலனை கடிக்க கூடாத இடத்தில் கடித்த காதலி - (வீடியோ)
ப்ரேக்-அப் செய்வதாக கூறிய காதலனிடம், கடைசியாக ஒரு லிப்லாக் கேட்டு, நாக்க கடித்து துண்டாக்கிய காதலி!
காதலில் பிரிவு ஏற்பட்டால்... ப்ரேக்-அப் செய்துக் கொண்டதால் நடந்த அசம்பாவிதங்கள் என... நமது நாட்டிலேயே பல கொடூரமான சம்பவங்களை கண்டிருக்கிறோம்.
காதலின் தோல்வி மற்றும் அதனால் ஏற்படும் வலி என்பது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபடும். இது அவர்களது காதலின் ஆழத்தை, உணர்வை சார்ந்து அமைகிறது. சில காதல் பிரிவுகள் மன ரீதியான வலியை ஏற்படுத்தும், சில காதல் பிரிவுகள் உடல் ரீதியான வலியை ஏற்படுத்தும்.
ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு பெண்... தனது காதலன் காதலை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியவுடன்... விசித்திரமான வகையில் ரியாக்ட் செய்து உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளார்.

லியு!
சீனாவை சேர்ந்த 23வயது இளைஞர் லியு. இவர் தான் தனது காதலி ஜோவு எனும் பெண்ணை பிரேக்-அப் செய்வதாக கூறி, அந்த பெண்ணின் தந்திர செயலால் அபாயமான தண்டனைக்கு ஆளானவர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் சிலர் கூறுவதை வைத்து பார்க்கையில்... அந்த நடந்த காட்சி யாதெனில்...
லியு மற்றும் ஜோவு தங்கள் ப்ரேக்-அப் பற்றி பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஒருவழியாக பிரிவை ஏற்றுக் கொண்ட ஜோவு. தனது காதலனிடம் ஒரு குட்-பை முத்தம் கேட்டிருக்கிறார். அந்த காதலுனும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

குயின்ஷன்!
பொது இடத்திலேயே அந்த இளம் காதல் ஜோடி லிப் லாக்கில் இணைந்துள்ளனர். ஆனால்... முத்தமிட கேட்ட ஜோவு என்ற அந்த பெண்.. உண்மையில் செய்த காரியம் என்ன தெரியுமா? காதலனின் நாக்கை பிடித்து கடித்துள்ளார். மேலும், அந்த ஆணை விலக செய்யாமல் இறுக்க பிடித்து நாக்கை தொடர்ந்து கடித்துள்ளார்.
காதலன் வலியில் கத்தவே... சுற்றி இருந்த சீனர்கள் அந்த காட்சியை வீடியோவாக படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சீனாவின் குயின்ஷன் எனும் பகுதியில் நடந்துள்ளது.

பேப்பர் ஸ்ப்ரே!
இந்த சம்பவம் நடந்த சில நிமிடத்தில் காவலாளிகள் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க. காவலாளிகள் அந்த பெண்ணை... நாக்கை கடிப்பதை நிறுத்தி விலக கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண் நாக்கை கடிப்பதை நிறுத்துவதாக இல்லை.
வேறு வழியின்று... பெண்கள் ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தும் பேப்பர் ஸ்ப்ரேவை முதன் முறையாக... ஒரு பெண்ணிடம் இருந்து ஆணை காப்பாற்ற காவலாளிகள் பயன்படுத்தினார்கள்.

ஒருவழியாக...
ஒருவழியாக பேப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தியதும் எரிச்சல் தாளாமல் அந்த பெண் விலகிவிட்டார். லியுவை உடனடியாக அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஏறத்தாழ நாக்கை துண்டிக்கும் வகையில் அந்த பெண் கடித்திருக்கிறார்.
மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டாலும் கூட... நாக்கில் நிரந்தரமான தாக்கம் மற்றும் காயங்கள் உண்டாகியிருக்கின்றன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஜோவு பெற்றோர்...
ஜோவுவின் பெற்றோர்... தங்கள் மகள் ஏற்கனவே முன்னாளில் ஒருமுறை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று. அங்கிருந்து முழுமையாக குணமடைந்து வெளியே வந்தவர் என்று கூறியுள்ளனர்.
மேலும், சமீபத்தில் ஒருமுறை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றப்பட்டதில் இருந்து ஜோவு மீண்டும் மனநிலை சமநிலை இன்றி காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோவுவின் பெற்றோர் போலீசாரிடம்... தங்கள் மகள் ஐந்து வருடம் மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றவர் என்று தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை!
உங்கள் உறவு எப்படி வேண்டுமானாலும் பிரிவு / முடிவுக்கு வந்திருக்கலாம். சரி எல்லாம் போகட்டும்.. ஒரே ஒருமுறை குட்பை கிஸ் வைத்துக் கொள்ளலாம் என்று துணை யாரேனும் கேட்டால்... காதலர்களே கொஞ்சம் உஷாராக இருங்கள்... லியுக்கு ஜோவுவால் ஏற்பட்ட கதி யாருக்கு வேண்டுமானாலும் உண்டாகலாம்.
சீனா என்றாலே விசித்திரம் என்ற பெயர் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து ஏதனும் சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. வாரம் தவறாமல் ஏதேனும் ஒரு விஷயத்தில் உலக அளவில் வைரலாக பரவி விடுகிறார்கள் சீன மக்கள்.
ஆயினும், லியுக்கு ஜோவு கொடுத்த தண்டனை மிகவும் அபாயமானது. காவலர்கள் வருவதற்கு கொஞ்சம் நேர தாமதம் ஆகியிருந்தாலும்... ஜோவு லியுவின் நாக்கை கடித்து துப்பியிருப்பார்.



Click it and Unblock the Notifications