உலகத்துலேயே இவங்கள போல வேற யாருக்கும் லக் இருக்காது - புகைப்பட தொகுப்பு!

உலகத்துலேயே இவங்கள போல வேற யாருக்கும் லக் இருக்காது - புகைப்பட தொகுப்பு!

By Staff

வெற்றி தோல்வி ரெண்டுக்குமே உழைப்பு , திறமை தான் கரணம்ன்னு சொல்றவங்க தான் நிறைய பேரு. ஆனா, உழைப்பு, திறமை மட்டும் இருந்துட்டா போதுமா.. கொஞ்சம் லக்கும் வேண்டும். அதுக்கான உதாரணத்த நாம முதல்வர லெவல்ல பார்த்திருக்கோம்.

Fun Photos: Luckiest People In The World

All Image Source: Google

இங்க யாருக்குங்க உழைப்புக்கு ஏற்ற பெயரும், சம்பளமும் கிடைக்கது? நீங்களே சொல்லுங்க... உங்க ஆபீஸ்ல, உங்க தொழில்ல... உண்மையா உழைக்கிறவங்க தான் முதல் இடத்துல இருக்காங்களா? இதுல பாலிட்டிக்ஸ் இருக்கு. அதே போல கொஞ்சம் லக்கும் இருக்கும்.

அப்படி லக்க்குனால உயிர் தப்பிச்ச, சேதாரம் ஆகாம எஸ்கேப்பான, வேற லெவல் வாய்ப்பு பெற்ற சிலரை பத்தி தான் இந்த போட்டோஸ்ல பார்க்க போறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை!

இயற்கை!

இத இயற்கையுனும் சொல்லலாம்... இயற்கை தன்னோட விஸ்வரூபத்த வெளிப்படுத்தும் போது இதெல்லாம் இயல்புன்னும் சொல்லலாம். சென்னை வெள்ளத்துல இருந்து, புயல் காத்து, சூறாவளின்னு சில இயற்கை பேரிடர் காலத்துல நம்ம வாகனங்கள், வீடு நாசம் ஆவத யாராலையும் தவிர்க்க முடியாது. ஆனால், நிஜமாவே, லக் இருந்தா மட்டும் தான் எப்படியான இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும்.. இதோ நம்மாளு காரு மாதிரி எஸ்கேப் ஆக முடியும்.

இன்னொரு லட்டு...

இன்னொரு லட்டு...

பெச்சுலருக்கு மட்டுமே தெரியும் இது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று. குறிஞ்சி மலர்களில் கூற மூன்று மாதங்கள், 12 ஆண்டுக்கு ஒருமுறை, 36 ஆண்டுக்கு ஒரு முறை என வகை பிரிக்கலாம். ஏன் அதை நேரிலும் காணலாம். ஆனால், இப்படி ஒரு அசாத்திய அற்புத நிகழ்வென்பது வாழ்நாளில் ஒருமுறை தான் அதுவும், யாருக்கேனும் தான் நடக்கும். இவருக்கு எங்கையோ மச்சம் இருக்கு போலயே!

கடவுள் இருக்கான் குமாரு!

கடவுள் இருக்கான் குமாரு!

கடவுள் இருக்காரா? கடவுள்னா யாரு.. நம்ம படிச்சவரு... அப்போ இருக்காரு என்ன படைச்சவரு வசிகரன்... கடவுள் இருக்கார்ன்னு சிட்டி சொல்லும்... இதே போல மிகவும் பிரபலமான கடவுள் டைலாக்... கடவுள் இருக்கான் குமாரு ... இதெல்லாம் உண்மை தான்னு தெரிஞ்சுக்கனுமா? இல்ல லக்ன்னு ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா யூடியூப்ல போய் பாருங்க ஆயிரக்கணக்கான வீடியோ இது மாதிரி இருக்கும். கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா... பய காலி ஆயிருப்பான்.

உசுரே போயிருக்குமே...

உசுரே போயிருக்குமே...

மூவாயிரம் போட்டு வாங்குன சைனா செட்டு கக்கூஸ்ல விழுந்தாலே உசுரு போயிடும். இதுவேற ஐ-போனு... ஏழு ஜென்ம உசுரும் ஒட்டுமொத்தமா காலி ஆயிருக்கும். இதுக்கு தான் அங்கன போனா அந்த வேலைய மட்டும் பார்க்கணும்.. ஃபேஸ்புக் பாக்குறது, செருப்படி தோழி கமெண்டு போடுறது, ரஜினிய திட்டுறது, அரசியல் பேசுறதுன்னு முக்கால்வாசி ஃபேஸ்புக் போராளிகள் இந்த இடத்துல இருந்து தான் இயங்குறாங்க... உள்ளுக்குள்ள விழுந்திருந்தா... அம்மான்னா வருமா, அப்பான்னா வருமா?

வழிவிடு, வழிவிடு...

வழிவிடு, வழிவிடு...

இதெல்லாம் செஞ்சு வெச்ச தங்க சேலை மாதிரியான லக் டிசைன். இல்லாங்காட்டி மரம் இப்படி முறிஞ்சு விழ வாய்ப்பே இல்ல. ஒருவேளை அப்படியே சாஞ்சிருந்தா சோனமுத்தா காரு அம்பேல் தான். நல்ல வேளை அப்படி ஒன்னும் ஆகல. காரு வேற பார்க்க ஹை-எண்டு காரு மாதிரி இருக்கு.

மூணாவது லட்டு...

மூணாவது லட்டு...

பொதுவாவே ரொம்ப அரிதா.. இப்படியான விஷயம் நடக்கும்... க்ரீம் பிஸ்கட் சாப்பிடும் போது தப்பா மூன்று பிஸ்கட் நடுவுலே க்ரீம் இருக்கும். 90s கிட்ஸ்க்கு எல்லாம் இதுவே பெரிய கின்னஸ் சாதனை மாதிரி இருக்கும். ஸ்கூலுக்கு போனதுமே... நேத்து நான் சாப்பிட்ட க்ரீம் பிஸ்கட்ல மூன்று பிஸ்கட்க்கு நடுவுல க்ரீம் இருந்துச்சு தெரியுமான்னு சிலாகிச்சு சொல்லியிருப்பாங்க. இப்ப இருக்க பசங்க... ஒரு பொண்ணு ஐ லவ் யு சொன்னாலே சுமாரா தான் ஃபீல் பண்றாயிங்க.

கைப்புள்ள....

கைப்புள்ள....

குதிச்சிருடா கைப்புள்ளங்கிற மாதிரி... அவன் நம்மள அட்டாக் பண்றதுக்கு முன்னாடி அவன் மூக்கு மேல லேண்டிங் ஆயிடனும்ன்னு பிளான் போட்டுடாப்புல நம்மாளு. ஆனாலும் இதுக்கு லக் ஒருப்பக்கம் இருந்தாலும், தைரியமும் வேணும். ஜஸ்ட் மிஸ் ஆனாலும், சங்கு தான், அடுத்த நாள் பாலு தான்.

அரிதிலும் அரிது!

அரிதிலும் அரிது!

இதெல்லாம் மிராக்கிலுக்கே மிராக்கில்... இப்படி சாவி, மொபைல் போன், பேனான்னு தொலைச்சவங்க நிறையா பேரு இருக்காங்க. இது ஏதோ மண்ணு குழி மாதிரி இருக்கு. இதுவே டிச்சுன்னு, சாக்கடைன்னு வெச்சுக்குங்களே... என்ன பண்ணுவீங்க... ஒன்னும் பண்ண முடியாது, திருப்பதி ஏழுமலையான் உண்டியல்ல போட்டதா நெனச்சு மனச தேத்திக்க வேண்டியது தான்.

கிரேட் எஸ்கேப்!

கிரேட் எஸ்கேப்!

சின்ன வயசுல ஒளிஞ்சு விளையாடுறேன்னு சொல்லிட்டு, புதுசா கட்டிட்டு இருக்கிற வீடு, மெக்கானிக் ஷாப், முள்ளு புதர்ன்னு எங்கையாச்சும் போய் கால விட்டுட்டு.. அப்பறம் ஆணு குத்திடுச்சு, கண்ணாடி கீறிடிச்ன்னு கண்ணா கசக்கிட்டு வந்து நிப்பாங்க... அவங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு பெரிய எஸ்கேப்ன்னு... பிரசவ வலியோட கொடுமையானது ஆச்சே இது!

மன்மதன்!

மன்மதன்!

அடேய்! கண்ணாடி போட்ட கில்மா மன்மதனே! அவனவன் இங்குட்டு ஒரு பொண்ணு உசார் பண்ண முடியாம முட்டி மோதிக்கிட்டு இருக்கனுங்க... நீ என்னடான்னா...எட்டு பொண்ணு கூட... அதுவும் ஐஸ் மாதிரி குளிர்ல.. ஐஸ் போட்ட ஸ்விம்மிங் பூல்ல விளையாடிகிட்டு இருக்க. உன்னை எல்லாம் சிங்கிள்ஸ் சாபம் சும்மாவே விடாது டா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, June 12, 2018, 16:20 [IST]
Desktop Bottom Promotion