For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துரை முருகன் ஜெயலலிதாவின் சேலையை உருவ முயன்ற போது... அன்று நடந்த காட்சிகள் - # பிளாஷ்பேக்

துரை முருகன் ஜெயலலிதாவின் சேலையை உருவ முயன்ற போது... அன்று நடந்த காட்சிகள் - # பிளாஷ்பேக்

|

1989ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடம் பெற்றது. மாண்பு மீறிய செயல்கள் தமிழக சட்டமன்றத்தில் அராஜகாமாக அரங்கேறியது. அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்த போது... ஆரம்பித்த களேபரம், ஜெயலலிதாவின் தலையில் தாக்கப்பட்டு, சேலை உருவ முயன்றது வரையிலான மாண்பு தவறிய நிகழ்வுகளில் முடிவுப் பெற்றது.

Flashback: Jayalalitha Humiliated By Duraimuragan

Cover Image, Image 1-5 Source: தராசு இதழ்

திமுகவின் துரைமுருகன் தான் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். இதனால், அவரது சேலை கிழிந்தது. பிறகு அதிமுகவினர் ஜெயலலிதாவை சுற்றி அரண் காத்து வெளியே பாதுகாப்பாக அழைத்து சென்றனர் என்பது அன்று நாடு முழுவதும் பரவிய செய்தி. ஆனால், இதற்கு திமுக சார்பில் பல காலமாக அப்படியான சம்பவம் நடக்கவில்லை என்று மறுப்பும் கூறப்பட்டு வருகிறது.

அன்றைய அந்த சம்பவத்திற்கும் முன்னும், பின்னும் நடந்த சில காட்சிகள்...

(குறிப்பு: 1989ம் ஆண்டு ஏப்ரில் மாதம் 7ம் நாள் தராசு என்ற இதழிலில் வெளியாகி இருந்த செய்தி குறிப்புகளில் இருந்து)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்சி ஒன்று

காட்சி ஒன்று

கைது நடவடிக்கைகள்!

அந்த வருடம் மார்ச் 18 தினத்தில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த நடராசன் அவர்கள் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அன்றைய சென்னை மாநகரின் போலீஸ் கமிஷ்னர் துரை என்பவர் மூலமாக திருநாவுக்கரசர், ஜெயலலிதா மற்றும் பலர் அடுத்ததடுத்த நாட்களில் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

காட்சி இரண்டு!

காட்சி இரண்டு!

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!

மார்ச் மாதம் 21ம் நாள் மூப்பனார் கோவிந்தா சாமி மூப்பனார் என்கிற ஜி.கே. மூப்பனார் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேடுத்திக் கொள்கிறார். அங்கே தான் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேசி முடிவு எடுக்கப்படுகிறது.

காட்சி மூன்று!

காட்சி மூன்று!

கருணாநிதி பதவி விலக அறிக்கை!

மார்ச் 22ம் நாள் செயற்குழு முடிந்து சென்னை திரும்புகிறார் மூப்பனார். மூப்பனாருடன் நடந்த பேச்சு வார்த்தை முடிவுகளின்படி, ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கிறது காங்கிரஸ். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற கொறடா எஸ்.ஆர். சுப்பிரமணியம் என்பவர், கருணாநிதி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று அவசரநிலையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அது மிக கடுமையான தாக்கத்தை உண்டாக்கியது.

காட்சி நான்கு!

காட்சி நான்கு!

கண்டன பேரணி!

மார்ச் 24ம் நாள் அதிமுக உறுப்பினர்கள் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கண்டன பேரணி நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் அன்றைய சென்னை போலீஸ் கமிஷ்னர் துரை மற்றும் முதல்வல் கருணாநிதி இருவரை திட்டி கோஷங்கள் எழுப்பட்டதாகவும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

மார்ச் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, மார்ச் 25ம் நாள் சட்டமன்ற சபை நடக்க விட கூடாது என்று திட்டம் தீட்டியதாக தராசு இதழில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்சி ஐந்து!

காட்சி ஐந்து!

தமிழக அரசியலின் கருப்பு நாள்!

அன்று மார்ச் 25ம் நாள்... காலை முதலே அதிமுக தொண்டர்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. திமுக உறுப்பினர்களும், தொண்டர்களும் 200க்கும் மேற்பட்டவர்கள் குவிந்திருந்தனர். இதுப்போக மதுசூதனன் மற்றும் ஏவி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வேன், கார்கள், ஆட்டோக்களில் ஆட்களை அழைத்து வந்திருந்ததாக அறியப்படுகிறது.

இந்த கூட்டம் ஜெயலலிதாவை காண வந்த கூட்டமாக இருக்கலாம் என்று கருதினார்கள் காவலர்கள்.

காட்சி ஆறு!

காட்சி ஆறு!

சட்ட மன்றதிற்குள் களேபரம்!

முதலில் காங்கிரஸ் சட்டமன்ற துணை தலைவராக அன்று இருந்த குமரி ஆனந்தன் அவர்கள் ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரத்தில் முதல்வரின் தூண்டுதலின் காரணமாக கமிஷ்னர் துரை சபை உரிமை மீறி நடந்துக் கொண்டதாக கூறி, கருணாநிதி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதாக பேசினார்.

பிறகு, ஜெயலலிதா அவர்கள், முதல்வர் மற்றும் கமிஷ்னர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொடுத்திருப்பதாக பேசினார். மேலும், தனது அலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றும் புகார் கூறினார். இவற்றின் காரணமாக கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

காட்சி ஏழு!

காட்சி ஏழு!

பட்ஜெட் கோப்பு கிழிப்பு!

இதை தொடர்ந்து அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி, மாறி தங்கள் கட்சியை ஆதரித்து, எதிர் கட்சியை எதிர்த்தும் பேச... பேச்சு, வாக்குவாதமாக மாறி சண்டையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது.

பிறகு, முதல்வர் கருணாநிதி பட்ஜெட் வாசிக்க முயன்ற போது, ஜெயலலிதா குறிக்கிட்டு கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று கூற... அப்போது கோபமடைந்தார். அவர் ஏதோ திட்டியதாகவும், அதனால் ஜெயலலிதா அவர்கள் அதிர்ச்சி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு நடுவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி கையில் இருந்த அவரது பட்ஜெட் உரையை கிழித்து எறிந்தனர்.

காட்சி எட்டு!

காட்சி எட்டு!

ஜெயலலிதா சேலை கிழிப்பு!

பட்ஜெட் உரை கிழிக்கப்பட்ட பிறகு இரு கட்சி உறுபினர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் ஜெவின் தோளில் குத்தி தள்ளியதாகவும். பிறகு துரைமுருகன் அவர்கள் ஜெவின் சேலையை பிடித்து உருவ முயன்றதாகவும். அவரிடம் இருந்து போராடி சேலையை மீட்டுக் கொண்டு ஜெ தப்பித்தார்.

ஜெவை குறிவைத்து அவமானப்படுத்த திமுகவினர் முயல்வதை அறிந்த திருநாவுக்கரசு, மற்றும் சிலர் அவரை அரண் போல காத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இந்த சண்டையின் போது ஜெ தலையில் பலமாக தாக்கப்பட்டார்.

காட்சி ஒன்பது!

காட்சி ஒன்பது!

ஆளுநர் மாளுகைக்கு விரைந்தார் ஜெயலலிதா...

தனது ஆதரவாளர்கள் சிலருடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்த ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்து கூறினார். மேலும், போயஸ் கார்டனுக்கு திரும்பிய பிறகு.. செய்தியாளர்களிடம் துரைமுருகன் மற்றும் கருணாநிதி குறித்து புகார்களை பதட்டத்துடன் கூறினார் ஜெ. ஒரு பெண்ணுக்கு சட்ட சபையிலேயே பாதுகாப்பு இல்லை எனில், மாநிலத்தில் சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வியை எழுப்பினர் ஜெ.

காட்சி பத்து!

காட்சி பத்து!

கருணாநிதியையும் அதிமுகவினர் தாக்க முயன்றனர். அவரது மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டது. அவரை நோக்கி வீசப்பட்ட மைக்குகளை நாங்கள் தான் தடுத்தோம் என்று திமுகவினர் கூறினார்கள். ஒருவழியாக அன்றைய சட்டமன்ற கூட்டம் மதியம் 1.30க்கு முடிவடைந்தது.

1989ம் ஆண்டு மார்ச் 25ம் நாள் தமிழக சட்டமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வு இந்திய அளவில் காட்டுத்தீ போல பரவியது. இந்திய அரசியலில் இதுவொரு கருப்பு தினமாக காணப்பட்டது.

2003ல்!

2003ல்!

இதை இந்திய அரசியல்வாதிகள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

2003ம் ஆண்டில் நடந்த ஒரு சட்டமன்ற கூட்டத்தில், 1989ல் நடந்த சம்பவம் மீண்டும் விவாதமாக மாறியது. திமுகவினர், அதிமுகவினர் மீண்டும் மாறி, மாறி அவரவர்கள் பக்கம் நியாயம் இருப்பது போல பேசிக் கொண்டனர்.

அப்போது ஜெ தனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி பேசிக் கொண்டிருந்த போது குறிக்கிட்ட அன்பழகன்... அந்த தகவல்களை மறுத்து... அன்று கருணாநிதி பட்ஜெட் வாசித்துக் கொண்டிருந்த போது "டோன்ட் ரீட்... யு கிரிமினல் டோன்ட் ரீட்" என்று ஒரு குரல் ஒலித்தது. அது அதை யார் கூறினார்கள் என்று நான் கூற விரும்பவில்லை என்று அன்பழகன் கூறினார்.

மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் பொய் கூறுவதாக பேசிக் கொண்டே இருக்க... துரைமுருகன் மற்றும் சிலர் அன்று ஜெ கூறுவது போல தாங்கள் அவமானப்படுத்தவில்லை என்று கூறினார்கள். அதற்கு ஜெயலலிதா. அன்றும் திமுகவினர் பொய் பேசினார்கள். இன்றும் பொய் பேசுகிறார்கள் என்று கூறினார்.

2003ம் ஆண்டிலும், பிறகு அவையில் அமளி ஏற்பட்டு முடிவுக்கு வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Flashback: Jayalalitha Humiliated By Duraimuragan

Flashback: Jayalalitha Humiliated By Duraimuragan. The Black Day in Taminadu Political History.
Desktop Bottom Promotion