Latest Updates
-
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..
சவால்! உங்களால் இந்த பெண் முதுகில் இருக்கும் டாட்டூவின் இரகசியம் கண்டறிய முடியுமா?
அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ்'ன் தலைச் சிறந்த ஓவியப் படைப்பு தி கார்டன் ஆப் எர்த்லி டிலைட்!
இந்த புகைப்படத்தை முதன் முதலில் பார்க்கும் போது உங்களுக்குள் தோன்றும் எண்ணம் எதுவாக இருக்கிறது? ஒரு அழகிய பெண், பொன்னிற மங்கை, அவள் பின்புறம் முழுவதும் அழகிய ஓவியத்தை டாட்டூக் குத்தி இருக்கிறாள்., நீலநிற அழகிய ஆடை உடுத்தி இருக்கிறாள். அவள் பச்சைக் குத்தியிருக்கும் ஓவியத்தில் பல கருத்துக்கள் புதையுண்டு கிடக்கிறது என இதுப்போல அழகை ரசிக்கும், விமர்சிக்கும் எண்ணங்கள் உங்களுக்குள் பலவன தோன்றலாம்.

போலந்து ஓவியர்!
அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ் போலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் ஓவியக் கலைஞர் ஆவார். நீங்கள் கண்டு இரசித்த இந்த அழகிய டாட்டூவின் பின்னாடி இருக்கும் அந்த அதிசயத்திக்க கலைஞர் இவர்தான். கண்கவரும் இந்த ஓவியத்தில் ஒரு இரகசியம் இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு அற்புதமான கலை இருக்கிறது.

அமைதியாக அமருங்கள்...
இந்த படத்தின் இரகசியத்தை கண்டறியும் முன்னர், நீங்கள் மற்ற வேலைகளை தவிர்த்துவிட்டு, பருக ஒரு கிளாஸ் நீர் எடுத்து வைத்துக் கொண்டு மெல்ல, உற்று கவனிக்க துவங்குங்கள். இந்த பெண்ணின் முதுகில் இடம்பெற்றிருக்கும் டாட்டூ உங்கள் நேரத்தை கொஞ்ச நேரம் நிச்சயம் களவாடும்.

மிகவும் கடினம்...
நீங்கள் ஒரு டாட்டூ விரும்பி அல்லது கலை ஆர்வம் கொண்டவராக இருந்தால், இப்படியான ஒரு டாட்டூவை வரைவது மிகவும் கடினம் என்ற எண்ணம் நிச்சயம் தோன்றி இருக்கும். அது உண்மையும் கூட. பழைய முறை டாட்டூ குத்தும் கருவியாக இருப்பினும், சரி, எலக்ட்ரிக் கருவி கொண்டு வரைந்தாலும் சரி, இத்தகைய டாட்டூவை வரைவது மிகவும் கடினம் தான். அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ்'ன் இந்த உருவாக்கத்திற்கு பின்னணியில் நிறைய பொறுமை இருக்கிறது.

தி கார்டன் ஆப் எர்த்லி டிலைட்!
இந்த இளம் பெண் முதுகில் அமைந்திருக்கும் இந்த டாட்டூவானத்து 15ம் நூற்றாண்டினை சேர்ந்த தி கார்டன் ஆப் எர்த்லி டிலைட் எனும் புகழ்பெற்ற ஓவியமாகும். இந்த படைப்பில் மனிதர்களின் பலவித எண்ணங்கள், செயல்பாடுகள், மனிதநேயம், பிற கொடூர குணங்கள் என பலவன வெட்டவெளிச்சமாக இடம்பெற்றிருப்பதை நீங்கள் கொஞ்சம் கண்களை விரித்து பார்த்தாலே தென்படும்.

உண்மை என்ன தெரியுமா?
நீங்கள் டாட்டூ என்று பார்த்துக் கொண்டிருக்கும் படமானது... உண்மையில் டாட்டூ அல்ல. மேலும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உருவமும் உண்மையான பெண்ணும் அல்ல. இது அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ் வரைந்த ஒரு தத்ரூபமான ஓவியம். இது ஒரு ஆயில் பெயிண்டிங். அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ் தி ஃபைன் ஆர்ட்ஸ் ஆப் க்டெந்ஸ்க்'ல் சில வருடங்களுக்கு முன்னர் கலை பயின்ற பட்டதாரி. ஓவியத்தில் கிறுக்குத்தனமான ஆர்வம் கொண்டவர் அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ்.

உருவாக்கியவர்!
நீங்கள் இந்த பெண் ஓவியத்தின் முதுகில் அமைந்திருக்கும் டாட்டூ போன்ற ஓவியத்தின் உண்மை பிரதியை வரைந்தவர் ஹையோனமைஸ் போஷ் எனும் கலைஞர் ஆவர். பழம்பெரும் ஓவியத்தை மாடர்ன் டச்சுடன் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார் அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ்.

உயிர்!
பல பம்பெரும் ஓவியங்கள் வெறுமென அருங்காட்சியகங்களிலும், பல செல்வந்தர்களின் அறைகளிலும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பின்னால் இருக்கும் வரலாறு மற்றும் அவற்றுள் புதையுண்டிருக்கும் கருத்துகள் பெரும் மதிப்புக் கொண்டவை. அவற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டும், மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே அக்னிஸ்கா நியானார்டோவிக்ஸ்ன் கனவு, இலட்சியம் ஆகும்.
All Image Source: agnieszkanienartowicz



Click it and Unblock the Notifications