For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புராணங்களில் வாழ்ந்த உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்தான வில்லன்கள் இவர்கள்தான்

புராணகாலத்தில் பெரும்பாலும் அரசர்களும், அசுரர்களுமே நிலத்திற்காகவும், பெண்களுக்காகவும் அதர்ம செயல்களை புரிந்து வந்தனர். அவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே கடவுள்கள் பூமியில் பல அவதாரங்களை எடுத்து வ

|

புராணகாலம் தொடங்கி இன்றுவரை நல்லது என்று ஒன்று இருக்கும்போது அதனை எதிர்க்க கெட்டதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உருவங்கள் மாறலாமே தவிர தீயவர்களின் குணங்களும் அவர்களால் நல்லவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் மாறுவதேயில்லை. தற்போது நாம் பார்க்கும் நேர்மையற்ற, சுயநலமில்லாத, ஒழுக்கமில்லாத மனிதர்களை பார்க்கும்போது நமக்கு சில புராணகால வில்லன்களின் நியாபகம் நிச்சயமாக வரும்.

Facts about epic villains of Hindu mythology

புராணகாலத்தில் பெரும்பாலும் அரசர்களும், அசுரர்களுமே நிலத்திற்காகவும், பெண்களுக்காகவும் அதர்ம செயல்களை புரிந்து வந்தனர். அவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே கடவுள்கள் பூமியில் பல அவதாரங்களை எடுத்து வந்தனர். அவர்களால் நடந்த நல்லது என்னவெனில் ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக இன்றும் அவர்களின் பெயர் உபயோகப்படுத்துவதுதான். புராணகாலங்களில் வாழ்ந்த கொடிய பாவங்களை செய்த உங்களுக்கு தெரியாத வில்லன்கள் யார் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைகேயி

கைகேயி

புராணகாலத்தில் வாழ்ந்த கொடிய பெண்களில் ஒருவராக இருப்பவர் இதயமற்ற, சுயநலமிக்க கைகேயி. தன் மகனின் பதவிக்காக இவர் புரிந்த கொடுஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை. முதலில் தசரதன் இராமனை மன்னனாக்க முடிவு செய்தபோது மகிழ்ச்சி கொள்ளத்தான் செய்தார் கைகேயி. ஆனால் மந்திரையின் தூண்டுதலால் அவருக்குள் இருந்த சுயநலமும், பேராசையும் விழித்துக்கொண்டது. அதனால் தசரதன் வழங்கிய இரண்டு வரங்களை இராமனுக்கு எதிராக பயன்படுத்தி தன் மகன் பரதனை மன்னன் ஆக்கியதுடன் இராமபிரானை 14 ஆண்டுகள் வனவாசமும் அனுப்பினார். இதனால் மனமுடைந்த தசரதன் தன் உயிரையும் விட்டார்.

ரக்தபிஜா

ரக்தபிஜா

ரக்தபிஜா என்னும் அசுரன் பல மாயசக்திகளை கொண்டிருந்தான் தேவியின் படைக்கு எதிராக தனி ஆளாக போரிட வந்தான். அழகும், வீரமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் தேவியை எதிர்த்து போரிட தயாரானான் ரக்தபீஜா. ரக்த என்றால் இரத்தம் மற்றும் பிஜா என்றால் விதை. பூமியில் விழும் தன் ஒவ்வொரு இரத்த துளியில் இருந்தும் இன்னொரு ரக்தபிஜா உருவாகுவான். தேவியுடனான போரில் சில நிமிடத்தில் போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான ரக்தபிஜா தோன்றிவிட்டான். இதனை தடுக்க தேவி சாமுண்டியாக மாறி அவனின் இரத்தம் பூமியில் விழுவதற்குள் அனைத்தையும் குடித்துவிட்டார். இப்படிதான் அவன் அழிக்கப்பட்டான்.

துரியோதனன்

துரியோதனன்

துரியோதனனை பற்றி நாம் நன்கு அறிவோம், தன் கர்வத்தாலும், ராஜ்ஜியத்தின் மீதிருந்த மோகத்தாலும் குருஷேத்திர போர் ஏற்பட காரணமாகி பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாக காரணமாக இருந்தவன். அஸ்தினாபுரத்தின் அரியணை மீதிருந்த வெறி காரணமாக இவன் தன் மாமா சகுனி, சகோதரன் துச்சாதனன் மற்றும் நண்பன் கர்ணனுடன் சேர்ந்து இவன் புரிந்த அதர்மங்கள் எண்ணிலடங்காதவை. இவனின் மரணம் பெண்களை மதிக்காத இழிவுபடுத்தும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.

தக்ஷா பிரஜாபதி

தக்ஷா பிரஜாபதி

சிவபெருமானை தன் மருமகனாக அடையும் பாக்கியம் பெற்றவராய் இருந்தும் அதில் இவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை, ஏனெனில் தன் மகளை ஒரு சுடுகாட்டு சடையனுக்கு திருமணம் செய்து கொடுக்க இவருக்கு விருப்பமில்லை. ஒருமுறை தான் நடத்திய மாபெரும் யாகத்திற்கு அனைத்து தேவர்களையும் அழைத்த பிரஜாபதி வேண்டுமென்றே சிவனையும், பார்வதியையும் அழைக்கவில்லை. அழையா விருந்தாளியாக அங்கு வந்த பார்வதி தேவி அங்கு தன் கணவருக்கு நடந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் வேள்வித்தீயில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இது சிவபெருமானின் கோபத்தை தூண்டி பிரஜாபதியை அழிக்க தூண்டியது.

MOST READ: கௌசல்யாவை கொச்சைப்படுத்தும் மிருகங்களுக்கு இந்த பதிவு!

சகுனி

சகுனி

தந்திரம் மற்றும் அதர்மத்தின் அடையாளமான சகுனியை பற்றி நாம் நன்கு அறிவோம். பாண்டவர்கள் மீது சகுனிக்கு எந்த கோபமும், பகையும் இல்லை. அவர் தன் எதிரியாக நினைத்தது பீஷ்மரை மட்டும்தான். பீஷ்மராலும், அஸ்தினபுரத்தாலும் காந்தாரம் அழிக்கப்பட்டதால் பீஷ்மரையும், குரு வம்சத்தையும் அழிப்பேன் என சபதமேற்றார் சகுனி. அதற்காக சகுனி பயன்படுத்திக்கொண்ட துருப்புசீட்டுதான் துரியோதனன். துரியோதனன் மனதில் சிறுவயது முதலே நஞ்சை விதைத்து வந்த சகுனி குரு வம்சத்தினர் தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மரணிக்கும்படி செய்தார்.

கம்சன்

கம்சன்

இவர் ஸ்ரீ கிருஷ்ணரின் தாயான தேவகியின் உடன்பிறந்தவராவார். தன் தந்தையை அகற்றிவிட்டு மதுராவின் சிம்மாசனத்தில் அமர்ந்த கம்சன் தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னை கொல்லும் என்று அசரீரி கூறியதை நம்பி தேவகியையும், அவர் கணவரான வாசுதேவரையும் சிறையில் அடைத்தார். தேவகிக்கு பிறந்த முதல் 7 குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்ற கம்சன் 8 வது குழந்தையாக பிறந்த கிருஷ்ணர் மூலம் அசரீரி கூறியது போலவே வதைக்கப்பட்டார்.

இராவணன்

இராவணன்

இதிகாசமான இராமாயணத்தின் வில்லனான இராவணனை பற்றி நாம் நன்கு அறிவோம், ஆனால் அவரின் அற்புத திறமைகளையும், ஞானத்தையும், பக்தியையும் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. தன் சகோதரி சூர்பனகைக்காக இராமனை பழிவாங்க சென்ற இராவணன் சீதையின் அழகில் மயங்கி அவரை இலங்கைக்கு கடத்திச்சென்றார். இராமபிரான் சீதையை மீட்க கடல்கடந்து சென்று இராவணனை அழித்து சீதையை மீட்டதே இராமாயணம் என்னும் பெருங்காவியம்.

இரணியகசிபு

இரணியகசிபு

அசுர வேந்தனாக விளங்கிய இரணியகசிபு மக்களுக்கு பெருங்கொடுமைகளை செய்துவந்தான். தன் சகோதரன் இரண்யாக்ஷன் விஷ்ணுவால் கொல்லப்பட்டதால் அவர் மீது பெரும்பகையுடன் இருந்தான். விதி வசத்தால் இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருக்க தன் மகன் என்றும் பாராமல் அந்த பிஞ்சு பாலகனை கொல்ல துணிந்தான். இறுதியில் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தால் வதைக்கப்பட்டான்.

MOST READ: எச்சரிக்கை! மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்

பண்டாசுரன்

பண்டாசுரன்

பண்டாசுரன் போரில் லலிதா தேவியால் கொல்லப்பட்டான். லலிதா சஹஸ்ரநாதத்தில் குறிப்பிட்டுள்ளபடி பண்டாசுரன் மிகவும் சக்தி வாய்ந்தவன், தன் சக்தி கொண்டு கம்சன், இராவணன், இரணியகசிபு போன்ற 10 அசுரர்களை மீண்டும் உருவாக்கி அவர்களை தன் படையில் வைத்துக்கொண்டு லலிதா தேவியை எதிர்த்து போரிட்டான். விஷ்ணுபகவான் தன் பத்து அவதாரங்களால் மீண்டும் அந்த 10 அசுரர்களையும் அழித்தார்.

ஹோலிகா

ஹோலிகா

அசுர வேந்தன் இரணியகசிபுவின் சகோதரிதான் இந்த ஹோலிகா. தன் மகன் பிரகலாதனை கொல்ல பல வழிகளில் முயன்றும் தோற்றுப்போன இரணியகசிபு அவனை கொல்லும்படி ஹோலிகாவிடம் கூறினான். ஹோலிகாவிடம் நெருப்பிடம் இருந்து காப்பாற்றும் ஒரு அதிசய போர்வை இருந்தது. அதனை வைத்து பிரகலாதனை கொல்ல திட்டமிட்டால். பிரகலாதனுடன் சேர்ந்து நெருப்பில் அமர முடிவெடுத்தால், தன்னை மந்திர போர்வையால் சுற்றிக்கொண்டு பிரகலாதனை தன் மடியில் அமரவைத்துவிட்டு நெருப்பை எழுப்பினால் ஹோலிகா. பிரகலாதன் தொடர்ந்து திருமலை வணங்கிக்கொண்டிருக்க அந்த போர்வை ஹோலிகாவை விடுத்து பிரகலாதனை பாதுகாத்தது. அதனால் ஹோலிகா தீயில் கருகி உயிரைவிட்டால்.

பஸ்மாசுரன்

பஸ்மாசுரன்

தன் கையால் யார் தலையை தொட்டாலும் அவர்கள் உடனடியாக சாம்பலாய் மாறவேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றவன் பஸ்மாசுரன். பார்வதி தேவியின் மீது ஆசைப்பட்ட பஸ்மாசுரன் சிவபெருமானின் தலை மீதே கைவைக்க முயன்றான். இதுதான் " வரம் கொடுத்தவன் தலை மீதே கைவைப்பது " என்ற பழமொழியின் அர்த்தமாகும். ஆனால் அங்கிருந்த தப்பிய சிவபெருமான் பஸ்மாசுரனை அழிக்க விஷ்ணுவின் உதவியை நாடினார்.

மோகினி அவதாரம்

மோகினி அவதாரம்

மோகினி அவதாரமெடுத்த விஷ்ணு பஸ்மாசுரன் முன் தோன்றினார். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் உடனடியாக காதலில் விழுந்ததுடன் தன்னை மணந்துகொள்ளும்படி மோகினியிடம் கூறினான். மோகினி தனக்கு நடனம் மிகவும் பிடிக்குமென்றும் தன் நடனத்தை அப்படியே ஆடுபவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார். ஒரு தருணத்தில் மோகினி தன் தலைமீது கையை வைத்தார். காதல் மயக்கத்தில் இருந்த பஸ்மாசுரன் தன் தலைமீதே கையே வைத்தான். அவ்வாறு கைவைத்த அடுத்த நொடியே சாம்பலாக மாறினான் பஸ்மாசுரன்.

MOST READ: குளிர் நடுக்கமா? துணையுடன் காதல் விளையாட்டில் நெருப்பு மூட்டி விளையாடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts about epic villains of Hindu mythology

Some of the villains from Hindu mythology were exceptionally intelligent and some of them were outrageously stupid. These facts about them are interesting to know.
Desktop Bottom Promotion