தந்தையின் கனவையும் சேர்ந்து சுமந்த தினேஷ் கார்த்திக் - டாப் 10 உண்மைகள் #UnKnownFacts

Posted By: Staff
Subscribe to Boldsky

தோனி இருக்கும் வரை தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடையாது என்பது விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரவர் மனதில் எழுதி வைத்திருக்கும் வாக்கியம். ஆனால், அதை தனது நேற்றைய ஆட்டாதால் கொஞ்சம் ஆட்டிப் பார்த்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். தோனிக்கும், தினேஷ் கார்த்திக்கும் நன்கு வயது தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் இந்தியர்களின் சூப்பர்ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். ஏறத்தாழ வரலாற்றுத் தோல்வி அடையவிருந்த நிலையில் தனது அதிரடி ஆட்டத்தால் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார் தினேஷ் கார்த்திக்.

ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்து சமூக தளத்திலும் இப்போது அதிகம் பேசப்படும் ஆள் தினேஷ் கார்த்திக் தான். இதில், தோனி ஹேட்டர்ஸ் உடனே தோனிக்கு மாற்றாக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இனி, தினேஷ் கார்த்திக் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

இந்திய அணிக்காகவும், தமிழக அணிக்காகவும், விளையாடிக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக் ஒரு தெலுங்கு நாயுடு குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 1985 ஜூன் மாதம் 1ம் தேதி பிறந்தவர். இவர் பிறந்து, வளர்ந்தது, இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பது எல்லாமே சென்னையில் தான்.

அப்பா!

அப்பா!

தினேஷ் கார்த்திக்கின் அப்பா பெயர் கிருஷ்ண குமார். இவர் சென்னையில் ஃபர்ஸ்ட் டிவிஷன் போட்டிகளில் விளையாடியுள்ளார். இளம் வயதில் கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ண குமாரால், அவரது பெற்றோர் கல்வி மீது செலுத்திய அழுத்தம் காரணமாக தொடர முடியாமல் போனது.

எனவே, விதியை நிச்சயம் வெல்ல வேண்டும் என, தனது மகன் தினேஷ் கார்த்திக்கை கிரிக்கெட் வீரராக்க பெரும் முயற்சிகள் எடுத்தார்.

லெதர் பந்து!

லெதர் பந்து!

சிறு வயதில் ரப்பர் பந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கு முதன் முதலாக லெதர் பந்தை அறிமுகம் செய்து வைத்ததே இவரது தந்தை கிருஷ்ணகுமார் தான்.

தனது தந்தையிடம் தான் ஆரம்பக் காலத்தில் கிரிக்கெட் குறித்து அடிப்படை நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக்கை தயார் செய்வதற்காக லெதர் பந்தை மிக வேகமாக வீசி விளையாட கூறுவாராம் இவரது அப்பா.

குவைத் வாழ்க்கை!

குவைத் வாழ்க்கை!

தனது இளமை பருவத்தில் ஓரிரு வருடங்கள் குடும்பத்துடன் குவைத்தில் தங்கியிருந்தார் தினேஷ் கார்த்திக். அவர் அங்கே சென்ற காலத்தில் கிரிக்கெட்டை விரும்பும் அப்பா, மகனுக்கு ஏற்ப இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் ஒளிப்பரப்பு ஆகின. அப்போது தினமும் அனைத்து போட்டிகளையும் கண்டு, அந்த ஆட்டத்தின் போக்கு குறித்து பேசி அலசுவார்களாம் இருவரும்.

ராபின் சிங்!

ராபின் சிங்!

தினேஷ் கார்த்திக் 2004ல் U-19 உலகக் கோப்பையின் போது ராபின் சிங்கால் பயிற்சி செய்யப்பட்டவர். மேலும், இவர் தமிழக அணிக்காகவும் விளையாடி வந்தார். அப்போதைய தமிழக அணியில் இருந்த ஃபிட்டான வீரர் தினேஷ் தான். இதனால் தொடர்ந்து ஒரே திறனுடன் விளையாடும் ஆற்றல் பெற்றிருந்தார் தினேஷ்.

அறிமுகம்!

அறிமுகம்!

2002ல் தான் பரோடா அணிக்கு எதிராக ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடத் துவங்கினார் தினேஷ் கார்த்திக். அப்போது அவர் விக்கெட்கீப்பர் எட்டாவது டவுனில் தான் இறக்கிவிடப்படுவார். அந்த நிலையிலும் தனது முதல் போட்டியில் 37 ரன்கள் அடித்தார் தினேஷ்.

தனது இரண்டாவது போட்டியில் உத்திரபிரதேச அணிக்கு எதிராக 88 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக தான் தமிழகம் தோல்வியின் பிடியில் இருந்து தப்பித்தது.

மிஸ்!

மிஸ்!

2004ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் தினேஷ் கார்த்திக். அனில்கும்ப்ளே பந்தில் மைக்கல் வாகனின் முக்கிய கேட்சை தவறவிட்ட போதிலும், தனது ஸ்டெம்பிங் மூலம் பாராட்டுகள் நிறைய பெற்றார்.

மேன் ஆப் தி மேட்ச்!

மேன் ஆப் தி மேட்ச்!

இந்திய தனது முதல் டி20 சர்வதேச போட்டியை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டிசம்பர் மாதம் 2006ல் விளையாடியது. இதில் இந்தியா வெற்றியும் கண்டது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 126 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகள் இழந்தது.

பிறகு இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி சார்பில் 28 பந்தில் 31 ரன்கள் அடித்து இந்திய அணி சார்பில் இருபது ஓவர் போட்டிகளில் முதல் மேன் ஆப் தி மேட்ச் வென்றவர் என்ற பெருமை பெற்றார் தினேஷ் கார்த்திக்.

வாய்ப்புகள்!

வாய்ப்புகள்!

தினேஷ் கார்த்திக் வெற்றி, தோல்வி என இரண்டையும் தனது கிரிக்கெட் உலகில் கண்டுள்ளார். தோனிக்கு முன்னரே இந்திய அணியில் இடம் பிடித்த போதிலும், தோனியின் ஹிட்டர் பேட்ஸ்மேன் என்ற தன்மை தன்னிடம் இல்லாமல் இருந்ததால், அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார் தினேஷ் கார்த்திக்.

சிலமுறை தனது வாய்ப்புகளை தினேஷ் கார்த்திக் வீணடித்துக் கொண்டதும் உண்டு.

ஐ.பி.எல்!

ஐ.பி.எல்!

2014 ஐபில் ஏலத்தில் டெல்லி அணியால் 12.5 கோடிக்கும், 2015 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 10.5 கோடிக்கும் மாபெரும் விலையில் எடுக்கப்பட்டவர் தினேஷ் கார்த்திக்.

ஆனால், அதற்கு அடுத்த வருடமே 2016 ஐபிஎல் ஏலத்தில் வெறும் 2.3 கோடிக்கு தான் ஏலத்தில் எடுக்கப்பட்டார் தினேஷ். இந்த வருடம் கொல்கட்டா அணி இவரை 7.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்து, இவரிடமே கேப்டன் பொறுப்பையும் அளித்துள்ளது.

திருமண பந்தம்!

திருமண பந்தம்!

தனது குழந்தை பருவ தோழியான நிகிதா விஜயை 2007ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் தினேஷ் கார்த்திக். ஆனால், இவரது மனைவிக்கும் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய்க்கும் நடுவே தொடர்பு காதல் மலரவே, நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார். இப்போது நிகிதா, முரளி விஜயுடன் திருமண உறவில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

பிறகு, 2015ல் இந்திய ஸ்குவாஷ் அணி வீராங்கனை தீபிகாவை இரண்டாவதாக ஆகஸ்ட் 18, 2015 அன்று திருமணம் செய்து கொண்டார் தினேஷ் கார்த்திக்.

கார் லவ்வர்!

கார் லவ்வர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி ஒரு பைக் லவ்வர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல தினேஷ் கார்த்திக் ஒரு கார் லவ்வர். தோனி அளவிற்கு இல்லை எனிலும், கிரிக்கெட்டுக்கு அடுத்து தினேஷ் விரும்புவது கார்களை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts about Indian Cricket Team Wicket-keeper Batsman Dinesh Karthik

Facts about Indian Cricket Team Wicket-keeper Batsman Dinesh Karthik