For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பப்லூ பையன உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இப்ப இவரு என்ன பண்றாரு தெரியுமா?

இந்த பப்லூ பையன உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இப்ப இவரு என்ன பண்றாரு தெரியுமா?

|

சலங்கை ஒலி படத்தை பார்த்த யாராலும் இந்த பப்லூ சிறுவனை மறக்க முடியாது. கமலை பரதநாட்டிய போஸில் படமெடுக்க சென்று ஏடாகூடமாக படம் எடுத்து மொத்த படங்களையும் வீணாக்கிவிடுவார். அந்த காலக்கட்டத்தில் இதுவொரு சிறந்த காமெடி காட்சியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இதே பப்லூ சிறுவன் பாக்கியராஜ் நடிப்பு, இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்த சின்ன வீடு படத்திலும் நடிகை கல்பனாவின் தம்பியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களை தாண்டி இந்த சிறுவன் என்ன ஆனான் என்று பெரிதும் யாருக்கும் தெரியாது.

ஆனால், இந்த சிறுவன் இந்தியாவின் மாஸ்டர் கிளாஸ் நடிகரான கமல் மற்றும் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அஜித்தை வைத்து படங்கள் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இந்த பப்லூ பிரபலம் யார் என்று சிலர் யூகித்திருக்க வாய்ப்புகள் உண்டு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்ரி டுலெட்டி!

சக்ரி டுலெட்டி!

ஆம்! சிலர் சரியாக யூகித்த அந்த பப்லூ சிறுவன் சக்ரி டுலெட்டியே தான். குழந்தை பருவத்தில் வெகு சில படங்களில் நடித்திருந்தாலும், அவர் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத பதிவை ஏற்படுத்தியிருந்தார். சக்ரி டுலெட்டி அமெரிக்காவின் செண்ட்ரல் ப்ளோரிடா பல்கலைகழகத்தில் வி.எப்.எக்ஸ் படித்து முடித்தவர்.

டிஸ்னி!

டிஸ்னி!

வி.எப்.எக்ஸ் படிப்பை அமெரிக்காவில் முடித்த சக்ரி டுலெட்டி, அங்கேயே டிஸ்னி நிறுவனத்தில் பணியாற்ற துவங்கினார். தனது தசாவதாரம் படத்திற்கான பணிகளுக்காக அமெரிக்கா சென்ற போது தான், சலங்கை ஒலி படத்தில் நடித்த அந்த பப்லூ தான் இவர் என்று அறிந்து, அவரது திறமையை கண்டு வியந்து உபயோகித்துக் கொண்டார் கமல் ஹாசன்.

ஒருவன்!

ஒருவன்!

வெகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்த சக்ரி டுலெட்டியை தமிழ் சினிமா கிட்டத்தட்ட மறந்த போயிருந்தது என்று தான் கூறவேண்டும். பிறகு, வேறு ஒரு லெவலில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சக்ரி டுலெட்டி.

உன்னை போல் ஒருவன் படத்தின் மூலமாக, சலங்கை ஒலி படத்திற்கு பிறகு மீண்டும் கமலுடன் இணைந்தார். நீரஜ் பாண்டேவின் A Wednesday ஹிந்தி படத்தின் ரீமேக் என்ற போதிலும், கமலின் தனித்துவமான நடித்து இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

அப்பா!

அப்பா!

சக்ரி டுலெட்டியின் அப்பா ஒரு டாக்டர். ஆனாலும் கூட இவருக்கு கதை எழுதுவது என்றால் பிரியம். இதனால் திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுவதை தனது மற்றொரு வெளியாக செய்துக் கொண்டிருந்தார். அப்படியாக தான் கே. விஸ்வநாதன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களுடன் பழக்கம் உண்டானது சக்ரி டுலெட்டியின் அப்பாவுக்கு.

அறிமுகம்!

அறிமுகம்!

இந்த பழக்கத்தின் அடிப்படையில் தான் சலங்கை ஒலி படத்தில் குழந்தை புகைப்பட கலைஞராக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சக்ரி டுலெட்டி. பிறகு பாக்யராஜ் நடிப்பில் வெளியான சின்ன வீடு படத்தில் நடித்தார். இவரது குடும்பத்தை ஒரு டாக்டர் குடும்பம் என்றே கூறலாம். ஒருமுறை தனது பேட்டியில், தன் குடும்பத்தில் அப்பா, அம்மாவையும் சேர்த்து முப்பது, நாற்பது டாக்டர்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் சக்ரி டுலெட்டி.

அஜித், நயன்தாரா!

அஜித், நயன்தாரா!

உன்னை போல் ஒருவன் படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சக்ரி டுலெட்டி. கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார். இதை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து பில்லா 2, சோனாக்ஷி சின்ஹாவை வைத்து வெல்கம் டூ நியூயார்க், போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற படத்தையும், தமன்னாவை வைத்து காமோஷி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

யார் எப்படி, எப்போது வேற லெவலில் ட்ரான்ஸ்பர்மேஷன் அடைவார்கள் என்றே கூற முடியாது. பப்லூ சிறுவனாக அறியப்பட்ட அந்த சிறுவன் தான் சக்ரி டுலெட்டி என்பது பலரும் அறியாத உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fact about Chakri Toleti

Did You Remember this Famous Kid? Now he is one of the upcoming promising director of Indian Cinema. He is non other than Chakri Toleti, who is captain of ship of movies like ennai pol oruvan, welcome to newyork.
Desktop Bottom Promotion